மேலும் அறிய
Advertisement
Tamilnadu RoundUp: 17 மாவட்டங்களில் மழை! முதல்வர் இன்று நாமக்கல் வருகை - தமிழகத்தில் இதுவரை!
Tamilnadu Round Up: தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை 10 மணி வரை நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.
- மத்திய கிழக்கு வங்கக்கடல் அதை ஒட்டிய வடக்கு அந்தமானில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று உருவாகிறது
- வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறும்; புதிய புயலுக்கு டானா என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது
- சென்னை உள்பட 17 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்
- தமிழ்நாட்டில் கல்வியின் சிறப்பை உணர்ந்து சிறப்பான முன்னெடுப்பு; இதுவரை 6 நாடுகளுக்கு 236 மாணவர்கள் அழைத்து செல்லப்பட்டதால் முதலமைச்சர் மகிழ்ச்சி
- தூத்துக்குடியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மீனவர்கள் போராட்டம்
- அ.தி.மு.க.வில் எட்டப்பர்களுக்கும் பதவி கொடுக்கப்பட்டிருந்தது – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நாமக்கல் வருகை; சேலம் வழியாக அவர் நாமக்கல் செல்வதால் இரு மாவட்டங்களிலும் ட்ரோன்கள் பறக்கத் தடை
- தமிழ்நாடு வக்பு வாரிய உறுப்பினராக முகமது நௌசாத் நியமனம்; ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவு
- உருது மொழியில் பெயர் எழுதியதை விமர்சித்த தமிழிசைக்கு அன்பில் மகேஷ் கண்டனம்
- காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்யும் கனமழையால் மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரிப்பு
- வடகிழக்கு பருவமழை என்பதால் நாகப்பட்டினத்தின் கோடியக்கரை பறவைகள் சரணாலயத்தில் குவியும் வெளிநாட்டு பறவைகள் – ரஷ்யா, ஈரான், ஈராக்கில் இருந்து வரும் பறவைகள்
- தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மேட்டூரில் அதிகபட்சமாக 14 செ.மீட்டர் மழை பதிவு
- கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணையில் தண்ணீர் திறப்பு அதிகரிப்பு; கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, தர்மபுரி மாவட்ட கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
- ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் தொழிலாளர் வைப்பு நிதியில் 9.3 லட்சம் உறுப்பினர்கள் சேர்க்கை
- தொழிலாளர் வைப்பு நிதியில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தமிழ்நாடு, மகாராஷ்ட்ரா, கர்நாடகாவைச் சேர்ந்தவர்கள் அதிகளவில் இணைந்துள்ளனர்
- சேலம் மாவட்டம் ஏற்காட்டில் பிளாஸ்டிக் பைகளுக்கு நிரந்தர தடை விதித்து சுற்றுலாத்துறை அறிவிப்பு
- திருவண்ணாமலையில் செய்யாறு ஆற்றுக்கால்வாய் உடைந்ததால் ஊருக்குள் புகுந்த வெள்ளம் – பயிர்கள் நாசம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
வணிகம்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion