Tamilnadu Roundup: பரபரப்பான 10 மணி செய்திகள்! தமிழ்நாட்டில் இதுவரை நடந்த சம்பவங்கள் இதுதான்!
Tamilnadu Roundup: தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நடந்த பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.

சிவகங்கை மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று முதல் 2 நாட்கள் கள ஆய்வு
விஸ்வரூபம் எடுக்கும் புதுக்கோட்டை சமூக ஆர்வலர் ஜெகபர் அலி கொலை வழக்கு
ஈரோடு கிழக்குத் தொகுதி இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு - 46 பேர் போட்டி
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலுக்காக தி.மு.க., நாம் தமிழர் போட்டி போட்டு பரப்புரை
மயிலாடுதுறையில் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்கள்; முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் - அமைச்சர் மெய்யநாதன்
கோவையில் கால்வாய் அருகே கட்டப்பட்டு இருந்த 2 மாடி வீடு இடிந்து விழுந்ததால் பரபரப்பு - பதைபதைக்கும் சிசிடிவி காட்சி வெளியானது
ஜுலை மாதத்திற்குப் பிறகு திமுக-வினர் அடக்கி வாசிப்பார்கள் - முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்
கிருஷ்ணகிரியில் அரசு அலுவலகங்களில் லஞ்சம் பெற்றுத் தருவதாக கூறி 80 லட்சம் ரூபாய் மோசடி - பாதிக்கப்பட்டவர்கள் புகார்
கோமியத்தில் நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதாக ஐஐடி இயக்குனர் மீண்டும் சர்ச்சைப் பேச்சு
அகில இந்திய சபாநாயகர் மாநாட்டில் ஆளுநர் ஆர்.என்.ரவி குறித்த பேச்சுக்கு மாநிலங்களவை துணை சபாநாயகர் எதிர்ப்பால் தமிழக பேரவைத் தலைவர் அப்பாவு வெளிநடப்பு




















