மேலும் அறிய
Tamilnadu Roundup: 22ஆம் தேதி உருவாகும் புயல்? தங்கத்தின் விலை வீழ்ச்சி, மெட்ரோ சர்ச்சை - 10 மணி வரை இதுதான்
Tamilnadu Rounudp: தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நிகழ்ந்த பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.

தலைப்புச் செய்திகள்
Source : ABPLIVE AI
- தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்களில் இன்றும், நாளையும் கடலோர பாதுகாப்பு ஒத்திகை நடைபெறுகிறது
- சென்னையில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை நிறைவு
- சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்து ரூ.92,000க்கு விற்பனையாகிறது.
- மசோதாக்கள் மீது முடிவெடுக்க குடியரசுத் தலைவருக்கு கால நிர்ணயம் செய்வது தொடர்பான வழக்கில் இன்று அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு
- கோவை, மதுரை மெட்ரோ ரயில் பணிகளுக்கு அனுமதி இல்லை என மத்திய அரசு கூறுவது பாரபட்சம் என அமைச்சர் கே.என்.நேரு பேட்டி
- பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்ட முதன்மைக் காவலர் பணியில் இருந்து நீக்கம் - நாகை எஸ்.பி. உத்தரவு
- தெற்கு ரயில்வே சார்பில் பார்சல்களை மட்டும் அனுப்புவதற்கு தனியாக 12 பெட்டிகள் கொண்ட தனி ரயில் வரும் டிச. 12ம் தேதி முதல் இயக்கம்.
- மெட்ரோ ரயில் திட்டங்களை முடக்கிய ஒன்றிய அரசுக்கு வலுக்கிறது கண்டனம். திமுக கூட்டணி சார்பில் இன்று கோவையிலும், நாளை மதுரையிலும் ஆர்ப்பாட்டம்.
- கடலூரில் 2015 முதல் காவல்துறை SP-க்களாக பணியாற்றிய 5 பேருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும்படி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம்
- தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை பகுதியில் 500 ஆண்டுகள் பழமையான வைத்தீஸ்வரநாதர் கோயிலின் தேர் 50 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியே எடுக்கப்பட்டது
- தமிழ்நாட்டில் 'DigiArivu' என்ற கல்வித் திட்டத்தை அறிமுகம் செய்தது Samsung! அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் ஆகிய துறைகள் அடங்கிய STEM கல்வித் திட்டம் மூலம் மாணவர்களின் கற்றல் திறனை அதிகரிக்க Samsung திட்டம்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement






















