உடல் சூட்டை இயற்கையாகவே குளிர்விக்கும் தன்மை இந்த செப்பு பாத்திரங்களுக்கு உண்டு. கோடை காலத்தில் மிகுந்த பலனளிக்கும்.
ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராட செப்பு பாத்திரம் பக்கபலமாக உள்ளது. புற ஊதாக்கதிர்களிடம் இருந்தும் பாதுகாக்கிறது.
செப்பு பாத்திரங்களில் உள்ள தண்ணீரை குடிப்பதால் கொழுப்பு பராமரிப்பு கட்டுப்படுத்துகிறது. ரத்த அழுத்தத்தையும் சமநிலைப்படுத்துகிறது.
கொலாஜன் மற்றும் எலாஸ்டின் இரண்டின் உருவாக்கத்தையும் அதிகரிக்கிறது. இதனால், சருமம் பராமரிக்கப்படும்.
ரத்த சோகையை தடுப்பதில் இது முக்கிய பங்கு வகிக்கிறது. செப்பு பாத்திரத்தில் கலந்து குடிப்பதால் ஹீமோகுளோபின் உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.
செப்பு பாத்திரத்தைப் பயன்படுத்தி தண்ணீர் குடிப்பதால் வயிறு சுத்திகரிப்பதுடன் செரிமானம் மேம்படும்.
செப்பு பாத்திரத்தை பயன்படுத்தி தண்ணீர், உணவு உட்கொள்வதால் தைராய்டு பராமரிப்பு சரியான நிலையில் உள்ளது.
செப்பு பாத்திரத்தில் உணவு உட்கொள்வதால் மூட்டுவலிக்கு நிவாரணம் கிடைக்கிறது. எலும்பு ஆரோக்கியத்தை உறுதி செய்கிறது.
நரம்பு மண்டலத்திற்கும், மூளையின் செல்களுக்கும் இடையே தொடர்பை ஏற்படுத்தி மூளை செயல்பாட்டை வலுப்படுத்துகிறது.
செப்பு பாத்திரத்தில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு, நோய் அழற்சி எதிர்ப்பு தன்மை காரணமாக விரைவான குணப்படுத்தலை ஊக்குவிக்கிறது.