Tamilnadu Roundup: சென்னை திரும்பும் மக்கள்! ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வேட்புமனு இன்று பரிசீலனை!
Tamilnadu Roundup: தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நிகழ்ந்த பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.

பொங்கல் பண்டிகை முடிந்து வெளியூர்களில் இருந்து சென்னைக்கு படையெடுக்கும் மக்கள் - கடும் போக்குவரத்து நெரிசல்
மதுரை, திருச்சியில் டைட்டல் பூங்காவிற்கு சுற்றுச்சூழல் அனுமதி அளித்தது சுற்றுச்சூழல் மதிப்பீட்டு ஆணையம்
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல்; வேட்புமனுக்கள் மீது இன்று பரிசீலனை
பரந்தூரில் போராட்டம் நடத்தும் மக்களைச் சந்திக்க தவெக தலைவரும், நடிகருமான விஜய்க்கு காவல்துறை அனுமதி
பொங்கல் முடிந்து சென்னை திரும்ப வெளியூர்களில் இருந்து இன்று 3 ஆயிரத்து 412 பேருந்துகள் இயக்கம்
பொங்கல் பரிசுத் தொகுப்பை பெறுவதற்கு இன்றே கடைசி நாள் - வாங்காதவர்கள் நியாய விலை கடைகளில் குவிந்தனர்
பொங்கல் முடிந்து சென்னைக்கு படையெடுக்கும் மக்கள்; 20ம் தேதி வரை கனரக வாகனங்கள் செங்கல்பட்டு முதல் தாம்பரம் வரை உள்ளே வரத் தடை
குழந்தையின் மூச்சுக்குழாயில் சிக்கிய எல்.இ.டி. விளக்கை அகற்றிய மதுரை அரசு மருத்துவமனை மருத்துவர்கள்
திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சாலையில் கவிழ்ந்த பார்சல் வேன்; உயிர் தப்பிய ஓட்டுநர்
நாமக்கல் மாவட்டம் பொன்னேரியில் உற்சாகத்துடன் நடந்த ஜல்லிக்கட்டு
சென்னையில் நடக்கும் பன்னாட்டு சர்வதேச புத்தகத் திருவிழா; மொழிபெயர்ப்பு நூல்கள் 30 புத்தகங்களை வெளியிடுகிறார் முதலமைச்சர்
பிப்ரவரி 1ம் தேதி தாக்கலாகிறது மத்திய அரசின் பட்ஜெட்
உலகப்புகழ்பெற்ற ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் திருமங்கை மன்னன் வேடுபறி உற்சவம்
ஐரோப்பிய கார் பந்தயத்திற்காக போர்ச்சுக்கல் நாட்டிற்கு புறப்பட்டுச் சென்றார் அஜித்குமார்





















