மேலும் அறிய

குறையும் கொரோனா.. துளிர்க்கும் நம்பிக்கை.. தமிழகத்தில் இன்றைய நிலவரம் என்ன?

தமிழ்நாட்டில் இன்று 12 ஆயிரத்து 772 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இன்று மட்டும் 25 ஆயிரத்து 561 நபர்கள் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு தமிழக அரசு மேற்கொண்ட ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக தினசரி குறைந்து வருகிறது. இந்த நிலையில், நேற்று 14 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், தமிழ்நாட்டில் இன்று புதியதாக 12 ஆயிரத்து 772 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 25 ஆயிரத்து 561 நபர்கள் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழ்நாட்டில் இன்றைய நிலவரப்படி 1 லட்சத்து 36 ஆயிரத்து 884 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழ்நாட்டில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளோரின் மொத்த எண்ணிக்கை 23 லட்சத்து 66 ஆயிரத்து 493 ஆகும். சென்னையில் மட்டும் இதுவரை 5 லட்சத்து 25 ஆயிரத்து 826 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு முழுவதும் கொரோனா தொற்று காரணமாக 21 லட்சத்து 99 ஆயிரத்து 808 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறையும் கொரோனா.. துளிர்க்கும் நம்பிக்கை.. தமிழகத்தில் இன்றைய நிலவரம் என்ன?

சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 828 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையைத் தவிர பிற மாவட்டங்களில் 11 ஆயிரத்து 944 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெறுபவர்களின் மொத்த எண்ணிக்கை 8 ஆயிரத்து 475 ஆகும்.

கொரோனாவால் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களில் ஆண்கள் 13 லட்சத்து 85 ஆயிரத்து 630 ஆகும். பெண்கள் 9 லட்சத்து 80 ஆயிரத்து 825 நபர்கள். மூன்றாம் பாலினத்தவர் 38 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று மட்டும் தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 7 ஆயிரத்து 245 நபர்கள் ஆவர். பெண்கள் 5 ஆயிரத்து 527 நபர்கள் ஆவர்.

குறையும் கொரோனா.. துளிர்க்கும் நம்பிக்கை.. தமிழகத்தில் இன்றைய நிலவரம் என்ன?

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பால் இன்று மட்டும் 254 நபர்கள் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 108 பேர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்கள். 146 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்கள். கொரோனாவால் மொத்தம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 29 ஆயிரத்து 801 ஆகும். சென்னையில் மட்டும் 7 ஆயிரத்து 854 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இன்று உயிரிழந்தவர்களில் 57 பேர் எந்தவித பாதிப்பும் இல்லாதவர்கள்.

தமிழகத்தில் தொடர்ந்து 24வது நாளாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருவதால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதே தருணத்தில், கொரோனா பரவலில் இருந்து பொதுமக்களை காப்பாற்றுவதற்காக தடுப்பூசி செலுத்தும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

உங்க அப்பாவுக்கு மட்டும்தான் சிலை வைப்பீங்களா? முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி!
உங்க அப்பாவுக்கு மட்டும்தான் சிலை வைப்பீங்களா? முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி!
"மக்கள் இதை வேடிக்கை பார்க்க மாட்டாங்க" தவெகவினர் கைது.. கொதித்தெழுந்த விஜய்!
CMCHIS Scheme: முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் பெறுவது எப்படி ?
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் பெறுவது எப்படி ?
147 வருஷ வரலாறு! இவங்கதான் கிரிக்கெட்டின் உண்மையான GOAT - ஏன் தெரியுமா?
147 வருஷ வரலாறு! இவங்கதான் கிரிக்கெட்டின் உண்மையான GOAT - ஏன் தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”எங்களையே கைது பண்றீங்களா! வேடிக்கை பார்க்க மாட்டோம்” கடுப்பான விஜய்Chennai Murder Case: மாணவிக்கு நேர்ந்த பயங்கரம்.. குற்றவாளிக்கு மரண தண்டனை! பரபரப்பு தீர்ப்பு!Bussy Anand arrest:  புஸ்ஸி ஆனந்த் ARREST! அதிரடி காட்டிய POLICE!  காரணம் என்ன?Vijay With RN Ravi: ஆளுநருடன் விஜய் நேருக்கு நேர் மாளிகையில் நடந்தது என்ன? வெளியான பரபரப்பு தகவல்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
உங்க அப்பாவுக்கு மட்டும்தான் சிலை வைப்பீங்களா? முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி!
உங்க அப்பாவுக்கு மட்டும்தான் சிலை வைப்பீங்களா? முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி!
"மக்கள் இதை வேடிக்கை பார்க்க மாட்டாங்க" தவெகவினர் கைது.. கொதித்தெழுந்த விஜய்!
CMCHIS Scheme: முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் பெறுவது எப்படி ?
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் பெறுவது எப்படி ?
147 வருஷ வரலாறு! இவங்கதான் கிரிக்கெட்டின் உண்மையான GOAT - ஏன் தெரியுமா?
147 வருஷ வரலாறு! இவங்கதான் கிரிக்கெட்டின் உண்மையான GOAT - ஏன் தெரியுமா?
Vidaamuyarchi: அஜித்தை வச்சு கல்லா கட்ட ஸ்கெட்ச்! வசூலை லம்பா அள்ள லைகா விடாமுயற்சி!
Vidaamuyarchi: அஜித்தை வச்சு கல்லா கட்ட ஸ்கெட்ச்! வசூலை லம்பா அள்ள லைகா விடாமுயற்சி!
"ராகுல் காந்திக்கு வாக்களித்த அனைவரும் தீவிரவாதிகள்" மீண்டும் சர்ச்சையில் சிக்கிய பாஜக அமைச்சர்!
Crime: பாஜக பிரமுகர் மர்ம மரணத்தில் திடீர் திருப்பம்... 10ம் வகுப்பு மாணவன் உட்பட 3 பேர் கைது
பாஜக பிரமுகர் மர்ம மரணத்தில் திடீர் திருப்பம்... 10ம் வகுப்பு மாணவன் உட்பட 3 பேர் கைது
"தூக்கு" பரங்கிமலை கொலை வழக்கு.. ரயிலில் தள்ளிவிட்டு கொன்ற குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை!
Embed widget