தூய்மை காவலர்களின் மாதாந்திர மதிப்பூதியம் உயர்வு.. தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு!
தூய்மை காவலர்களின் மாதாந்திர மதிப்பூதியத்தை உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது
ஊரகப் பகுதிகளில் பணிபுரியும் தூய்மை காவலர்களின் மாதாந்திர மதிப்பூதியம் உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதையடுத்து, மாதாந்திர மதிப்பூதியம் ரூ. 3,600 லிருந்து ரூ. 5,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மதிப்பூதியத்தை உயர்த்தி ரூ. 396 கோடி கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் 2023- 24 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை கடந்த மார்ச் 20-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. அதனை அடுத்து வேளாண் நிதிநிலை அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் நிதிநிலை அறிக்கைகள் மீதான மானிய கோரிக்கை விவாதங்கள் நடைபெற்றன. அந்த வகையில் மார்ச் 30-ஆம் தேதி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை மீதான மானிய கோரிக்கையில் 15 புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.
அதில் தமிழ்நாட்டில் ஊரகப் பகுதிகளில் பணிபுரியும் 66 ஆயிரத்து 130 தூய்மை காவலர்களின் மாதாந்திர மதிப்பூதியம் 3600ல் இருந்து 5000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியானது. இந்த நிலையில் ஊரகப் பகுதிகளில் பணிபுரியும் தூய்மை காவலர்களின் மாதாந்திர மதிப்பூதியத்தை உயர்த்தி தமிழ்நாடு அரசு தற்போது அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி தூய்மை காவலர்களின் மாதாந்திர மதிப்பூதியம் 3,600 ரூபாயில் இருந்து 5 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க,