மேலும் அறிய

Governor Ravi: திமுக மாணவரணி உள்ளிட்ட 10 அமைப்புகள் ஜூன் 10-ல் ஆர்ப்பாட்டம்; மீண்டும் சிக்கலில் ஆளுநர்- காரணம் என்ன?

ஆளுநரைக் கண்டித்து திமுக மாணவரணி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட அமைப்புகள் ஜூன் 10-ம் தேதி போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஆளுநரைக் கண்டித்து திமுக மாணவரணி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட அமைப்புகள் ஜூன் 10-ம் தேதி போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. பட்டமளிப்பு தாமதம் உள்ளிட்ட காரணங்களால் ஆளுநரைக் கண்டித்துப் போராட்டம் அறிவிக்கப்பட உள்ளது. இதுகுறித்து மாணவர் அமைப்புகள் கூட்டாக இணைந்து அறிக்கை வெளியிட்டுள்ளன. 

தமிழ்நாட்டு மாணவர்களின் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பை சீர்குலைக்கும் வகையில் பட்டமளிக்கும் கடமையைச் செய்யாமல் தவிர்த்து காலதாமதப்படுத்தி வருதல், தமிழ்நாடு அரசின் பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை  நியமிப்பதில், அரசியலமைப்புச் சட்டவிதிகளுக்கு மாறாக செயல்பட்டு, மத்திய அரசின் தலையீட்டை வலிந்து திணிக்க விரும்பி, துணைவேந்தர்களை நியமிக்காமல் தமிழ்நாடு பல்கலைக்கழகங்களில் செயலற்ற தன்மையை உருவாக்குதல், 

மேற்காணும் முக்கிய காரணங்களை முன்பே சிந்தித்து, தமிழ்நாடு பல்கலைக்கழகத் துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் வகையில், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் கொண்டுவரப்பட்ட சட்டமுன்வடிவுகளுக்கு ஒப்புதல் வழங்காமல் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி  கிடப்பில் போட்டிருத்தல் ஆகியவற்றைக் கண்டித்து, மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு -தமிழ்நாடு (Federation of Students Organisation – Tamil Nadu) சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அதன் ஒருங்கிணைப்பாளர்கள்  அறிவித்துள்ளனர்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டம் வரும் 16.06.2023 அன்று, காலை 09.00 மணியளவில் சென்னை, ஆளுநர் மாளிகைக்கு அருகிலுள்ள சின்னமலை சாலை சந்திப்பில், தமிழ்நாடு மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பின் (FSO – TN) சார்பில் நடைபெற உள்ளது. 

இதுகுறித்து வெளியான கூட்டறிக்கை:

’’தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் பட்டமளிப்பு விழாக்கள் நடைபெறும்போது, தமிழ்நாட்டில் உள்ள அறிஞர்கள், கல்வியாளர்கள் மற்றும் முன்னாள் துணைவேந்தர்கள் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டு கலந்துகொள்வர்.  ஆனால், தமிழ்நாட்டு பா.ஜ.க.வின் சிறப்புத் தலைவர் போல செயல்பட்டு வரும் ஆளுநர் ஆர்.என்.ரவி, பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிற்கு தமிழ்நாட்டிலுள்ள அறிஞர்களைத் தவிர்த்து, வட இந்திய சனாதன சித்தாந்தவாதிகளை அழைத்து பட்டமளிப்பு விழா நடத்திவிட வேண்டுமென்று விருப்பம் கொண்டுள்ளார். இதனால், தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழகம் தவிர மற்ற 12 பல்கலைக் கழகங்களில் பட்டமளிப்பு விழாக்கள் நடைபெறாமல் 9,29,142 மாணவர்களுக்கு பட்டப்படிப்பு சான்றிதழ்களை வழங்காமல் தனது சட்டப்பூர்வமான கடமையை செய்யத் தவறியுள்ளார் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி.

தமிழ்நாடு ஆளுநராக ஆர்.என். ரவி  பொறுப்பேற்ற நாளிலிருந்து அவரது அலட்சியம் மற்றும் சனாதனப் போக்கினால், இதுநாள் வரையிலும் பல்கலைக்கழகங்களில் தேர்ச்சிபெற்ற மாணவர்களுக்கு பட்டப்படிப்பு சான்றிதழ் வழங்க முடியவில்லை. பட்டபடிப்பு சான்றிதழ் பெற முடியாததால், உயர்கல்வி பயிலவும் மற்றும் வேலைவாய்ப்பு பெறமுடியாமலும், ஆராய்ச்சி மேற்படிப்பு பயிலவும் முடியாமல் மாணவர்கள் பெருமளவு பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். மேலும், முனைவர் பட்டத்தை பெற்றவர்கள், தங்களது ஆய்வு அறிக்கையினை வெளியிட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
 
இந்திய அளவில், தமிழ்நாட்டு மாணவர்கள் உயர்கல்வி பெறுகின்ற நிலையினை சிதைப்பதற்கும், அவர்களுடைய வேலைவாய்ப்பு, தொழில் முனைதல் உள்ளிட்ட முன்னேற்றத்தை சிதைப்பதற்கும், ஆர்.என்.ரவி உள்நோக்கத்துடன் செய்கின்ற மாபெரும் மாணவர் விரோத சதி திட்ட செயலலுக்கு மாணவர் சமுதாயமும், மக்களும் பெரும் கண்டன குரல் எழுப்புகின்றனர்.

மேலும், பல்கலைக்கழகங்களை சட்டப்பூர்வமாக அமைப்பது, நிர்வகிப்பது என்பது இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி, மாநில அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டதாகும்.  அதனடிப்படையில், ஒரு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரை நியமிக்க மாநில அரசின் உயர்கல்வித் துறையால், தேடல் குழு (Search Committee) ஒன்று அமைக்கப்படும். அந்தக் குழுவில் ஆளுநரின் பிரதிநிதி ஒருவர், மாநில அரசின் பிரதிநிதி ஒருவர், பல்கலைக்கழக நிர்வாகத்தின் சார்பில் ஒருவர் (சிண்டிகேட்) என மூவர் இடம் பெறுவர். ஆளுநரின் பிரதிநிதி தேடல் குழுவின் தலைவராகச் செயல்படுவார். தேடல் குழு பரிந்துரை செய்யும் 3 நபர்களில் இருந்து ஒருவரைத் ஆளுநர் துணைவேந்தராக நியமிப்பார். இந்த நடைமுறையின்படிதான் ஒவ்வொரு பல்கலைக்கழகத்துக்கும் துணைவேந்தர்கள் நியமிக்கப்படுகின்றனர்.

ஆனால், ‘இந்திய அரசியல் சாசனத்தின்படி நடப்பேன்’ என்று உறுதிமொழி அளித்து பதவி ஏற்ற ஆளுநர் ஆர்.என்.ரவி , அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக பல்கலைக்கழக துணைவேந்தரை தேர்வு செய்யும் குழுவில், பல்கலைக்கழக மானியக்குழு தரப்பிலிருந்து ஒருவரை உறுப்பினராக நியமிக்க வேண்டுமென பரிந்துரை செய்துள்ளார். மாநில அரசின் உரிமைக்கும், பல்கலைக்கழகத்தின் சுயாட்சி தன்மைக்கும் எதிராக, மத்திய அரசின் முழு ஆளுகைக்கு பல்கலைக்கழகங்களை கொண்டு செல்ல ஆளுநர் ஆர்.என்.ரவி எடுத்திருக்கும் ஒரு பெரும் சதி திட்டமாகவே மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு - தமிழ்நாடு கருதுகிறது. இத்தகைய சட்டவிரோதமான ஒழுங்கீன போக்கினை வன்மையாக கண்டிக்கிறது.  இதனால், கோவையிலுள்ள பாரதியார் பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர் நியமனம் செய்யப்படாமல், பல்கலைக்கழக நிர்வாகம் முடங்கி, செயலற்றுப் போகும் நிலையை தமிழ்நாடு ஆளுநர் ரவி உருவாக்கி உள்ளார். 

இவ்வாறு, பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்களை நியமிப்பதில் தேவையற்ற காலதாமதம் செய்வதும், அதில் மத்திய அரசின் தலையீட்டை வலிந்து திணிப்பதும், அவ்வாறு துணைவேந்தர்களை நியமித்தாலும் அவர்கள் சனாதன சித்தாந்தத்தை உடையவர்களாக தேர்ந்தெடுத்து நியமிப்பது என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்படுவது, தமிழ்நாட்டின் கல்வி, சமூகநீதி, இருமொழிக் கொள்கை, மதச்சார்பற்ற தன்மை ஆகியவற்றின் மீது நடத்தப்படும் கொடுந்தாக்குதலாகும்.

இவற்றையெல்லாம் முன்பே உணர்ந்த தமிழ்நாடு முதலமைச்சர், கடந்த 25.04.2022 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், பல்கலைக்கழகத் துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் வகையில் சட்டமுன்வடிவுகளை நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பினார்.  ஆனால், அந்த மசோதாக்களுக்கு இதுநாள் வரையிலும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி,  ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் வைத்திருப்பதை இக்கூட்டமைப்பு வன்மையாக கண்டிக்கிறது.

எனவே, தமிழ்நாட்டில் உயர்கல்வி பயின்ற கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்களுக்கு பட்டப்படிப்பு சான்றிதழ் வழங்காமல் கடமைத் தவறிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியைக் கண்டித்தும், உடனடியாக பட்டப்படிப்பு சான்றிதழை வழங்க வலியுறுத்தியும், பா.ஜ.க. அரசின் தேசிய கல்விக் கொள்கைக்கு விளம்பரத் தூதுவராகச் செயல்படுவதுடன், தமிழ்நாடு அரசின் அதிகாரத்திற்குட்பட்ட பல்கலைக்கழகங்களின் சுயாட்சி தன்மையை முடக்குகின்ற வகையில் அரசியல் சட்டவிதிகளுக்கு முரணாக, அத்துமீறி செயல்பட்டு வருவதன் மூலம் ஒழுங்கின்மை போக்கினை கடைபிடித்து வரும் ஆளுநர் ஆர்.என். ரவியைக் கண்டித்து, பேரவையில், பல்கலைக்கழகத் துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் வகையில் நிறைவேற்றப்பட்ட சட்டமுன்வடிவுகளை உடனே ஒப்புதல் வழங்கிட வலியுறுத்தியும் வரும் 16.06.2023 அன்று, காலை 09.00 மணியளவில் சென்னை, ஆளுநர் மாளிகைக்கு அருகிலுள்ள சின்னமலை சாலை சந்திப்பில், தமிழ்நாடு மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பின் (FSO – TN) சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள மாணவர் அமைப்புகளின் நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், தோழர்கள், முற்போக்கு சிந்தனையுடைய மாணவர், இளைஞர்கள் அனைவரும் கலந்துக் கொள்ளும்படி கேட்டுக் கொள்ளகிறோம்.’’

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

CBSE 10ஆம் வகுப்பு: மும்மொழி கட்டாயம்! தேர்ச்சி பெறாவிட்டால் சான்றிதழ் இல்லை!
CBSE 10ஆம் வகுப்பு: மும்மொழி கட்டாயம்! தேர்ச்சி பெறாவிட்டால் சான்றிதழ் இல்லை!
6ம் வகுப்பு முதல் செயற்கை நுண்ணறிவு கல்வி- இந்தியாவின் முதல் AI பல்கலைக்கழகம்- கலக்கும் கர்நாடகா
6ம் வகுப்பு முதல் செயற்கை நுண்ணறிவு கல்வி- இந்தியாவின் முதல் AI பல்கலைக்கழகம்- கலக்கும் கர்நாடகா
குடும்பத்தை காப்பாற்ற டாக்சி ஓட்டும் பிஎச்டி பட்டதாரி; பேராசிரியர் ஊதியம் போதாத அவலம்!
குடும்பத்தை காப்பாற்ற டாக்சி ஓட்டும் பிஎச்டி பட்டதாரி; பேராசிரியர் ஊதியம் போதாத அவலம்!
100% தேர்ச்சி தான் டார்கெட்; லீவு போடும் மாணவர்களைக் கண்காணியுங்கள்! - கல்வித்துறையினருக்கு கலெக்டர் போட்ட அதிரடி உத்தரவு!
100% தேர்ச்சி தான் டார்கெட்; லீவு போடும் மாணவர்களைக் கண்காணியுங்கள்! - கல்வித்துறையினருக்கு கலெக்டர் போட்ட அதிரடி உத்தரவு!

வீடியோ

விசாரணை கைதி மரணம் ”அடிச்சே கொன்னுட்டாங்க” பகீர் கிளப்பும் குடும்பத்தினர்
மீண்டும் கொத்தடிமை முறை துப்புரவு பணியாளர்களுக்கு அநீதி சேலத்தில் அரங்கேறிய அவலம்
’’கேரளா காருக்கு NO ENTRY அரசு பஸ் போகலாம்’’ அத்துமீறிய TRAFFIC POLICE?
CM Vijay : சிங்கப்பூராக மாறும் பெரம்பூர்!1000 கோடியில் மெகா திட்டம்..கீரின் சிக்னல் கொடுத்த CM விஜய்
Farmers beat Officers | அதிகாரிகளை துடைப்பத்தை வைத்து அடித்த விவசாயிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IAS Transfer: ஐஏஎஸ் அதிகாரிகளை அதிரடியாக மாற்றிய தவெக அரசு.. ராதாகிருஷ்ணன், சுப்ரியா சாஹுவும் ட்ரான்ஸ்பர் - முழு லிஸ்ட் இதோ
IAS Transfer: ஐஏஎஸ் அதிகாரிகளை அதிரடியாக மாற்றிய தவெக அரசு.. ராதாகிருஷ்ணன், சுப்ரியா சாஹுவும் ட்ரான்ஸ்பர் - முழு லிஸ்ட் இதோ
ஆட்டம் போட முயற்சித்த அமைச்சர்கள்... தூக்கி வீச ரெடியான விஜய்! அமைச்சரவையில் விரைவில் மாற்றம்?
ஆட்டம் போட முயற்சித்த அமைச்சர்கள்... தூக்கி வீச ரெடியான விஜய்! அமைச்சரவையில் விரைவில் மாற்றம்?
US Russia Sanctions Bill: 500 இல்ல, வெறும் 100 தான்.! ரஷ்ய எண்ணெய் கொள்முதல் கட்டணங்களை மாற்றும் அமெரிக்கா; இந்தியாவுக்கு நிம்மதி
500 இல்ல, வெறும் 100 தான்.! ரஷ்ய எண்ணெய் கொள்முதல் கட்டணங்களை மாற்றும் அமெரிக்கா; இந்தியாவுக்கு நிம்மதி
6ம் வகுப்பு முதல் செயற்கை நுண்ணறிவு கல்வி- இந்தியாவின் முதல் AI பல்கலைக்கழகம்- கலக்கும் கர்நாடகா
6ம் வகுப்பு முதல் செயற்கை நுண்ணறிவு கல்வி- இந்தியாவின் முதல் AI பல்கலைக்கழகம்- கலக்கும் கர்நாடகா
ஒரே சார்ஜில் 427 கிலோமீட்டர் மைலேஜ்.. வரப்போது Volkswagen ID Cross மின்சார கார் - விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 427 கிலோமீட்டர் மைலேஜ்.. வரப்போது Volkswagen ID Cross மின்சார கார் - விலை எவ்ளோ?
குடும்பத்தை காப்பாற்ற டாக்சி ஓட்டும் பிஎச்டி பட்டதாரி; பேராசிரியர் ஊதியம் போதாத அவலம்!
குடும்பத்தை காப்பாற்ற டாக்சி ஓட்டும் பிஎச்டி பட்டதாரி; பேராசிரியர் ஊதியம் போதாத அவலம்!
Maruti Suzuki Dzire on EMI: நடுத்தர வர்க்கத்தின் நம்பகமான கார்.! மாருதி சுசூகி டிசையரின் ஆன்-ரோடு விலை, முன்பணம், EMI எவ்வளவு.?
நடுத்தர வர்க்கத்தின் நம்பகமான கார்.! மாருதி சுசூகி டிசையரின் ஆன்-ரோடு விலை, முன்பணம், EMI எவ்வளவு.?
ADMK: செங்கோட்டையனைச் சந்தித்த லீமாரோஸ்.. ஆடிப்போன அதிமுக! கட்டுப்படுத்துவாரா எடப்பாடி பழனிசாமி?
ADMK: செங்கோட்டையனைச் சந்தித்த லீமாரோஸ்.. ஆடிப்போன அதிமுக! கட்டுப்படுத்துவாரா எடப்பாடி பழனிசாமி?
Embed widget