”உங்கள் தொகுதியில் முதலமைச்சர்” : 2.7 லட்சம் மனுக்கள் மீது நடவடிக்கை - முதல்வர் மு.க.ஸ்டாலின் தகவல்

"உங்கள் தொகுதியில் முதலமைச்சர்" துறை மூலமாக பெறப்பட்ட 4 லட்சம் மனுக்களில் இதுவரை சுமார் 2.7 லட்சம் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தகவல் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், “முதல்வரின் தேர்தல் பிரச்சாரத்தில் `உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற நிகழ்வின் மூலம் பெறப்பட்ட மனுக்களுக்கு 100 நாட்களுக்குள் தீர்வு காணும் பொருட்டு,"உங்கள் தொகுதியில் முதலமைச்சர்" என்ற புதிய துறை உருவாக்கப்பட்டது. சுமார் 4 லட்சம் மனுக்கள் இதுவரை இத்துறையில் பெறப்பட்டுள்ளது. பெறப்பட்ட அனைத்து மனுக்களும் மாவட்டவாரியாக, வகைவாரியாக பிரிக்கப்பட்டு, தமிழ்நாடு மின்ஆளுமை முகமை மூலம் பராமரிக்கப்படும் வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது.

இதுவரை சுமார் 2.7 லட்சம் மனுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு மனுவும் வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டவுடன் தனித்தன்மையுடன் கூடிய அடையாள எண் வழங்கப்பட்டு, அடையாள எண்ணுடன் கூடிய குறுஞ்செய்தி மனுதாரருக்கு அனுப்பப்படுகிறது. மனுக்களில் அளிக்கப்பட்டுள்ள விவரங்கள் மற்றும் அதன் தன்மைக்கேற்றவாறு தகுதியான மனுக்கள் ஒவ்வொன்றின் மீதும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, உடனடி தீர்வு காண மாவட்ட அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.”உங்கள் தொகுதியில் முதலமைச்சர்” : 2.7 லட்சம் மனுக்கள் மீது நடவடிக்கை - முதல்வர் மு.க.ஸ்டாலின் தகவல்

இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை, தமிழ்நாடு மின் ஆளுமை ஆணையர் அலுவலக வளாகத்திற்கு நேரில் சென்று, “உங்கள் தொகுதியில் முதலமைச்சர்” துறையின் மூலம் பெறப்பட்ட மனுக்கள் எவ்வாறு கணினியில் பதிவு செய்யப்பட்டு மாவட்டங்களுக்கு அனுப்பப்படுகிறது. அவற்றின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் ஆகியவை குறித்து விரிவான ஆய்வு மேற்கொண்டார். துறைரீதியாக பெறப்பட்ட மனுக்களின் எண்ணிக்கை, இதன் மீது எடுக்கப்பட்ட, எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார். இத்துறையின் கீழ் பயனடைந்த தேனி, ராணிப்பேட்டை மற்றுமு் சென்னையைச் சேர்ந்த பயனாளிகளுடன் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு பேசினார். அவர்களின் கோரிக்கை மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையால் கிடைக்கப்பெற்ற பயன்கள் குறித்தும் கேட்டறிந்தார். மேலும்,கொரோனா பரவல் இருக்க ஒவ்வொரு பயனாளிகளிடமும் முகக்கவசம் கட்டாயம் அணியுமாறு அறிவுறுத்தினார்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மு.க.ஸ்டாலின் இதுதொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்திலும், “உங்கள் தொகுதியில் முதலமைச்சர்” திட்டத்தில் பெறப்பட்ட 4 லட்சம் மனுக்களில் 2.7 லட்சம் மனுக்கள் பதிவேற்றப்பட்டு அவை மீது விரைவாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மின் ஆளுமை முகமை அலுவலகத்தில் இப்பணிகளை நேரில் ஆய்வு செய்து - சில பயனாளிகளிடமும் தொலைபேசி வாயிலாக உரையாடினேன்” என்றும் பதிவிட்டுள்ளார்.

Tags: mk stalin cm Tamilnadu DEPARTMENT petiton

தொடர்புடைய செய்திகள்

தமிழை இந்திய அரசின் ஆட்சி மொழி, அலுவல் மொழியாக மாற்றுவோம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி

தமிழை இந்திய அரசின் ஆட்சி மொழி, அலுவல் மொழியாக மாற்றுவோம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி

Narthaki Nataraj : மாநிலக் கவுன்சிலில் ஒரு திருநங்கை! - தேவை என்ன?

Narthaki Nataraj : மாநிலக் கவுன்சிலில் ஒரு திருநங்கை! - தேவை என்ன?

நீட் தேர்வை நிரந்தரமாக ரத்துசெய்ய வேண்டும் - பிரதமருக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம்

நீட் தேர்வை நிரந்தரமாக ரத்துசெய்ய வேண்டும் - பிரதமருக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம்

தமிழ்நாட்டில் 21 ஆயிரத்திற்கு கீழ் குறைந்த கொரோனா தினசரி பாதிப்பு எண்ணிக்கை

தமிழ்நாட்டில் 21 ஆயிரத்திற்கு கீழ் குறைந்த கொரோனா தினசரி பாதிப்பு எண்ணிக்கை

Dr Amalorpavanathan : "மருத்துவத்துறையில் ஒரு பகுத்தறிவாளன்” : யார் இந்த மருத்துவர் அமலோற்பவநாதன்!

Dr Amalorpavanathan :

டாப் நியூஸ்

Tamil Nadu Coronavirus LIVE News : தடுப்பூசி கோரிய உலகளாவிய டெண்டரில் யாரும் பங்கேற்கவில்லை - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

Tamil Nadu Coronavirus LIVE News : தடுப்பூசி கோரிய உலகளாவிய டெண்டரில் யாரும் பங்கேற்கவில்லை - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

Corona Positive Lions | வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு, நேரில் சென்று முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு

Corona Positive Lions | வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு, நேரில் சென்று முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு

Clubhouse | ''க்ளப் ஹவுஸ் பற்றி ஊரே பேசுது.. அப்படி என்னதான் இருக்கு?'' தெரிஞ்சுக்கோங்க!

Clubhouse | ''க்ளப் ஹவுஸ் பற்றி ஊரே பேசுது.. அப்படி என்னதான் இருக்கு?'' தெரிஞ்சுக்கோங்க!

முனைவர் ஜெயரஞ்சனுக்கு தமிழ்நாடு அரசின் திட்டக்குழுவில் முக்கிய பொறுப்பு - முதல்வர் அறிவிப்பு

முனைவர் ஜெயரஞ்சனுக்கு தமிழ்நாடு அரசின் திட்டக்குழுவில் முக்கிய பொறுப்பு - முதல்வர் அறிவிப்பு