மேலும் அறிய

"மக்கள் கொதித்துவிடுவார்கள்" - கட்டுப்பாடுகளை மட்டும் அதிகரிக்க தமிழக அரசு ஆலோசனை நடப்பதாக தகவல்..

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி, தமிழகத்தில் 9,344 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 2,884 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் அதிகரித்துவரும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவது குறித்து முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை இன்று தொடங்கியது. தமிழகத்தில் இந்த ஆண்டு மார்ச் மாத தொடக்கம் முதல் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இந்த மாதம் 10-ஆம் தேதி முதல் திரையரங்குகளில் 50% பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி, திருமணம், இறப்பு நிகழ்வுகளில் கலந்துகொள்வோரின் எண்ணிக்கை குறைப்பு, வார இறுதி நாட்களில் கடற்கரை பகுதிகளுக்கு செல்லத் தடை, முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம், மதக்கூட்டங்கள், திருவிழாக்களுக்கு அனுமதி மறுப்பு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன.

எனினும், தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துவருகிறது. நேற்றைய நிலவரப்படி, தமிழகத்தில் 9,344 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 2,884 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. நேற்று 39 பேர் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர்.

கொரோனா தொற்று பரவலை தடுப்பது குறித்து சென்னை, கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் பழனிசாமியின் இல்லத்தில் இன்று ஆலோசனை தொடங்கியது. இந்த ஆலோசனையில் தமிழக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரும் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளும் கலந்துகொண்டுள்ளனர். இதற்கு முன்னதாக முதல்வர் தலைமையில் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்துகொண்ட கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுவருவதாக கூறப்படுகிறது. மேலும் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. கூட்டத்தின் முடிவில் இது குறித்து முதல்வரின் விரிவான அறிக்கை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா 2-வது அலையை சமாளிக்க தமிழகத்தில் 10 நாள் ஊரடங்கு தேவை என முதல்வருக்கு மருத்துவ பிரதிநிதிகள்  கோரிக்கை வைக்கப்பட்டதாக தெரியவருகிறது. மேலும், மீண்டும் முழு ஊரடங்கு என்றால் மக்கள் கொதித்து விடுவார்கள். கட்டுப்பாடுகளை வேண்டுமானால் அதிகரிக்கலாம் என்று தமிழக அரசு ஆலோசிப்பதாகவும் தெரியவந்துள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!

Minister ponmudi: அமலாக்கத்துறை சோதனை... நழுவி சென்ற அமைச்சர் பொன்முடி

Coimbatore: 8 மணி நேர போராட்டம்! தூக்கி நிறுத்தப்பட்ட டேங்கர் லாரி.. மக்கள் நிம்மதி பெருமூச்சு

யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 

ABP Premium

வீடியோ

Yescon 2025 : சென்னையில் நாளை முதல்.. YESCON - 2025 மாநாடு துவக்கி வைக்கும் நிதியமைச்சர்செ.பாலாஜி..பொன்முடி வரிசையில்..  துரைமுருகன் வீட்டில் ED ரெய்டு!  பரபரக்கும் வேலூர்ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் ! களமிறங்கிய MASTER MINDS ! 2026-ல் அரியணை யாருக்கு?FORM-க்கு வரும் அதிமுக : வழிகாட்டும் MASTERMIND : திமுகவுக்கு பக்கா ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
Minister ponmudi: அமலாக்கத்துறை சோதனை... நழுவி சென்ற அமைச்சர் பொன்முடி
Minister ponmudi: அமலாக்கத்துறை சோதனை... நழுவி சென்ற அமைச்சர் பொன்முடி
Coimbatore: 8 மணி நேர போராட்டம்! தூக்கி நிறுத்தப்பட்ட டேங்கர் லாரி.. மக்கள் நிம்மதி பெருமூச்சு
Coimbatore: 8 மணி நேர போராட்டம்! தூக்கி நிறுத்தப்பட்ட டேங்கர் லாரி.. மக்கள் நிம்மதி பெருமூச்சு
யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 
யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 
UDISE Report: அதிரடியாக வகுத்த 6 திட்டங்கள்! ஆர்வமுடன் பள்ளிசெல்லும் குழந்தைகள்- தமிழக அரசு  பெருமிதம்!

IND vs AUS: ரஞ்சி வீரர்கள் எதுக்கு இருக்காங்க? இனியாவது வாய்ப்புத் தருமா பிசிசிஐ?

சூப்பர்ஸ்டார்னா சும்மாவா? ப்ரெஞ்சு படத்துலயே ரஜினிதான் மாஸ் - ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்

எனக்கு யார் வந்திருக்கிறார்கள் என தெரியவில்லை: ரெய்டு குறித்து துரைமுருகன் பேட்டி

Embed widget