New Commissioner of Poilce : கோவை மாநகரத்திற்கு புதிய காவல் ஆணையர் : தமிழக அரசு அறிவிப்பு
கோயம்புத்தூர் மாநகரத்தின் புதிய காவல் ஆணையராக தீபக் எம் தாமோர் ஐ.பி.எஸ். நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் 4 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழக உள்துறை செயலாளர் எஸ்.கே.பிரபாகர் இன்று பிறப்பித்த உத்தரவு அறிக்கையில், “ திருநெல்வேலி மாநகர காவல் ஆணையரும், ஐ.ஜி.யுமான அன்பு ஐ.பி.எஸ் மதுரை தெற்கு மண்டல ஐ.ஜி.யாக மாற்றப்பட்டுள்ளார். திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. தீபக் எம் தாமோர் ஐ.பி.எஸ்., கோயம்புத்தூர் நகர காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை மாநகரின் மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையரும், ஐ.ஜி.யுமான வித்யா ஜெயந்த் குல்கர்னி ஐ.பி.எஸ்., சென்னை, லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் எதிர்ப்பு பிரிவு இணை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை மாநகர போக்குவரத்து பிரிவு கூடுதல் காவல் ஆணையர் ஐ.ஜி. பவானீஸ்வரி ஐ.பி.எஸ்.,சென்னை லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் எதிர்ப்பு சிறப்பு விசாரணைப் பிரிவு ஐ.ஜி.யாக மாற்றப்பட்டுள்ளார். திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி. பிரவீன்குமார் அபினபு ஐ.பி.எஸ். பணியிடம் மாற்றம் செய்யப்பட்டு சென்னை, லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் எதிர்ப்பு பிரிவு துணை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, இன்று காலை தமிழகம் முழுவதும் 15 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

