மேலும் அறிய

TN Politics: ஊராட்சித் தலைவர்களுக்கான மதிப்பூதியம் உயர்வு - அரசாணை வெளியீடு

ஊராட்சித் தலைவர்களுக்கான மதிப்பூதிய உயர்வு தொடர்பாக தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த ஆகஸ்ட் மாதம் கூடியபோது ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர மதிப்பூதியம் 1000 ரூபாயிலிருந்து 2000 ரூபாயாக உயர்த்தப்படும், சுகாதாரத்தில் சிறப்பாக செயல்படும் கிராமங்களுக்கு முன்மாதிரி கிராம விருது வழங்கப்படும், பாதுகாக்கப்பட்ட குடிநீர் உறுதி செய்யும் பொருட்டு நீரின் தரத்தை பரிசோதிப்பதற்காக சுய உதவி குழு பெண்களுக்கு பயிற்சி அளித்தல், ஊரக நிர்வாகத்தில் உள்ள கணக்குகள் பதிவேடுகள் மற்றும் படிவங்கள் எளிமைப்படுத்தபட்டு முறைப்படுத்தப்படும் உள்ளிட்ட அறிவிப்புகளை ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியகருப்பன் வெளியிட்டார்.

இந்நிலையில் ஊராட்சித் தலைவர்களுக்கான மதிப்பூதியம் ஆயிரம் ரூபாயிலிருந்து இரண்டாயிரம் ரூபாயாக உயர்த்தப்படுவதற்குரிய அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

TN Politics: ஊராட்சித் தலைவர்களுக்கான மதிப்பூதியம் உயர்வு - அரசாணை வெளியீடு

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், “ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்குநரிடமிருந்து கருத்து பெறப்பட்டது. கிராம ஊராட்சிகளில் கிராம ஊராட்சி தலைவர்கள் அவ்வூராட்சியின் நிர்வாக அலுவலர் என்கிற முறையில் கிராம ஊராட்சியில் நடைபெறும் மாநில அரசு திட்டங்கள் மற்றும் மத்திய அரசு திட்டங்கள் ஆகியவற்றை முழுமையாக செயல்படுத்திடும் முக்கிய பொறுப்புகளில் உள்ளனர்.

ஊராட்சிகளால் மேற்கொள்ளப்படும் அத்தியாவசியப் பணிகளான குடிநீர் வழங்குதல்,தெரு விளக்குகள் அமைத்து பராமரித்தல்,  சாலை வசதிகள் ஏற்படுத்துதல், சுகாதாரத்தினை மேம்படுத்துதல் போன்றவற்றில் ஈடுபட்டுவருகின்றனர் என  ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்குனர் தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994ன் பிரிவு 82ல் மேற்கொள்ளப்பட்ட ஊராட்சிகள் திருத்த சட்டம் 2012ன் படி கிராம ஊராட்சி தலைவர்களுக்கு மாதாந்திர மதிப்பூதியத்தை காலத்திற்கேற்ப அரசு நிர்ணயிக்கும் விகிதத்தில் வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி ஊராட்சித் தலைவர்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர மதிப்பூதியம் ஆயிரம் ரூபாயிலிருந்து 2000 ரூபாயாக  உயர்த்தி வழங்கப்படும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் வாசிக்க: Maanaadu Review : ’வந்தான், வென்றான், சிம்பு’ மாநாடு படம் எப்படி இருக்கு..?

20வது ஆண்டை நெருங்கும் சிம்பு: 11 ஆண்டுகளுக்குப் பின் வெற்றியை ருசித்த சோகம்.. எங்கே சறுக்கினார்?

Red Alert: தூத்துக்குடி, நெல்லை தென்காசி மாவட்டங்களுக்கு 'ரெட் அலர்ட்': வேறு எங்கெல்லாம் மழை கொட்டும்?

Shiva Shankar Health: சிவசங்கர் மாஸ்டரின் சிகிச்சைக்கு நிதியுதவி - சோனு சூட் உறுதி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

firecracker factory Blast: மீண்டும் கோர விபத்து - சாத்தூரில் வெடித்து சிதறிய பட்டாசு ஆலை, 5 பேர் பரிதாபமாக பலி
firecracker factory Blast: மீண்டும் கோர விபத்து - சாத்தூரில் வெடித்து சிதறிய பட்டாசு ஆலை, 5 பேர் பரிதாபமாக பலி
IND Vs AUS 5th Test: அதிரடி காட்டும் பும்ரா, சிராஜ்..! அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த ஆஸி., இந்தியா அபாரம்
IND Vs AUS 5th Test: அதிரடி காட்டும் பும்ரா, சிராஜ்..! அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த ஆஸி., இந்தியா அபாரம்
Power Outage in Tamilnadu ; தமிழகத்தில் இன்று ( 04.01.25 ) மின் தடை ஏற்படும் பகுதிகளின் லிஸ்ட்
Power Outage in Tamilnadu ; தமிழகத்தில் இன்று ( 04.01.25 ) மின் தடை ஏற்படும் பகுதிகளின் லிஸ்ட்
இனி ட்ரீப் போக முடியாதோ? லடாக்கில் கை வைத்த ஜின்பிங்.. சொந்தம் கொண்டாடும் சீனா!
இனி ட்ரீப் போக முடியாதோ! லடாக் யாருக்கு சொந்தம்? சீனா செய்த செயலால் இந்தியா அதிர்ச்சி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Tamilisai vs Annamalai : EPS-ஐ வைத்து அ.மலைக்கு ஸ்கெட்ச்!டெல்லிக்கே போன தமிழிசை! பாஜக தலைவர் யார்?Yescon 2025 : சென்னையில் நாளை முதல்.. YESCON - 2025 மாநாடு துவக்கி வைக்கும் நிதியமைச்சர்செ.பாலாஜி..பொன்முடி வரிசையில்..  துரைமுருகன் வீட்டில் ED ரெய்டு!  பரபரக்கும் வேலூர்ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் ! களமிறங்கிய MASTER MINDS ! 2026-ல் அரியணை யாருக்கு?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
firecracker factory Blast: மீண்டும் கோர விபத்து - சாத்தூரில் வெடித்து சிதறிய பட்டாசு ஆலை, 5 பேர் பரிதாபமாக பலி
firecracker factory Blast: மீண்டும் கோர விபத்து - சாத்தூரில் வெடித்து சிதறிய பட்டாசு ஆலை, 5 பேர் பரிதாபமாக பலி
IND Vs AUS 5th Test: அதிரடி காட்டும் பும்ரா, சிராஜ்..! அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த ஆஸி., இந்தியா அபாரம்
IND Vs AUS 5th Test: அதிரடி காட்டும் பும்ரா, சிராஜ்..! அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த ஆஸி., இந்தியா அபாரம்
Power Outage in Tamilnadu ; தமிழகத்தில் இன்று ( 04.01.25 ) மின் தடை ஏற்படும் பகுதிகளின் லிஸ்ட்
Power Outage in Tamilnadu ; தமிழகத்தில் இன்று ( 04.01.25 ) மின் தடை ஏற்படும் பகுதிகளின் லிஸ்ட்
இனி ட்ரீப் போக முடியாதோ? லடாக்கில் கை வைத்த ஜின்பிங்.. சொந்தம் கொண்டாடும் சீனா!
இனி ட்ரீப் போக முடியாதோ! லடாக் யாருக்கு சொந்தம்? சீனா செய்த செயலால் இந்தியா அதிர்ச்சி!
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
Embed widget