மேலும் அறிய

CM Stalin: “எந்த பேரிடரையும் எதிர்கொள்ளலாம் என்பதை நிரூபித்து காட்டியுள்ளோம்” - முதலமைச்சர் ஸ்டாலின்

மாண்டஸ் புயல் கரையை கடந்த நிலையில், சென்னையில் உள்ள பல்வேறு பகுதிகளில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வுன் போது, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதலமைச்சர் ஸ்டாலின், புயலிலிருந்து, தமிழ்நாடு மீண்டிருக்கிறது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்து கொள்கிறேன்.

நடவடிக்கை:

தமிழக அரசு எடுத்திருக்க கூடிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் காரணமாகத்தான். அதேபோல, அரசு ஊழியர்களின் அர்ப்பணிப்பு, செயல்பாடு காரணமாக மக்கள் முழுமையாக பாதுகாக்கப்பட்டிருக்கிறார்கள். பெரிய அளவிலே குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய அளவிற்கு எந்தச் சேதங்களும் இல்லை. மரங்கள் விழுந்திருப்பதைக்கூட உடனடியாக போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக அது அப்புறப்படுத்தப்பட்டு இருக்கிறது. அந்தப் பணியை மாநகராட்சி ஊழியர்கள் மிகச் சிறப்பான முறையில் செய்திருக்கிறார்கள். இரவென்றும் பாராமல். பகலென்றும் பாராமல் நம்முடைய அமைச்சர் பெருமக்கள் ஈடுபடுத்திக் கொண்டார்கள்.

தமிழக அரசு எடுத்திருக்க கூடிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் காரணமாகத்தான், அதேபோல, அரசு ஊழியர்களின் அர்ப்பணிப்பு, செயல்பாடு காரணமாக மக்கள் முழுமையாக பாதுகாக்கப்பட்டிருக்கிறார்கள். பெரிய அளவிலே குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய அளவிற்கு எந்தச் சேதங்களும் இல்லை. மரங்கள் விழுந்திருப்பதைக்கூட உடனடியாக போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக அது அப்புறப்படுத்தப்பட்டு இருக்கிறது. அந்தப் பணியை மாநகராட்சி ஊழியர்கள் மிகச் சிறப்பான முறையில் செய்திருக்கிறார்கள். இரவென்றும் பாராமல். பகலென்றும் பாராமல் நம்முடைய அமைச்சர் பெருமக்கள் குறிப்பாக, மாண்புமிகு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சராக பொறுப்பேற்றிருக்கக்கூடிய நேரு அவர்களும் மற்றும் பல்வேறு அமைச்சர்களும், சேகர்பாபு மா.சுப்பிரமணியன் அவர்களும் உள்ளிட்ட பல்வேறு அமைச்சர்கள் முழுமையாக தங்களை இதில் ஈடுபடுத்திக் கொண்டாரகள்.

CM Stalin: “எந்த பேரிடரையும் எதிர்கொள்ளலாம் என்பதை நிரூபித்து காட்டியுள்ளோம்” - முதலமைச்சர் ஸ்டாலின்

பாராட்டுக்குரியது:

நம்முடைய சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள். மேயர்கள். துணை மேயர்கள். கவுன்சிலர்கள், மாநகராட்சி அதிகாரிகள், மாநகராட்சியின் ஊழியர்கள், மின்சார வாரியத்தின் ஊழியர்கள், காவல் துறையைச் சார்ந்த சகோதரர்கள், தீயணைப்பு படையை சார்ந்திருக்க கூடிய வீரர்கள். குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் தூய்மைப் பணியாளர்கள்  எல்லாம், நிவாரணப் பணிகளில் தங்களை முழுமையாக ஈடுபடுத்தி  கொண்டது பாராட்டுக்குரியது.

அதற்காக நான் முதலமைச்சர் என்கிற முறையிலும், அரசின் சார்பிலும் என்னுடைய வணக்கத்தை நன்றியை வாழ்த்துகளை பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இப்படி ஒரு சூழல் அமையும் என்று எதிர்பார்த்து, முன்கூட்டியே அரசு திட்டமிட்டு செயல்பட்டது என்பது எல்லோருக்கும் நன்றாக தெரியும். குறிப்பாக சென்னையில் 17 ஐஏஎஸ் அதிகாரிகள் இந்தப் பணியை கண்காணிக்க வேண்டும் என்று அவர்களை நியமித்து அந்தப் பணியையும் சிறப்பாக செய்து கொண்டிருக்கிறார்கள். 5000 பணியாளர்கள் நேற்று  இரவு முழுவதும் பணிகளில் முழுமையாக ஈடுபட்டிருக்கிறார்கள். இப்போது நிவாரணப் கிட்டட்ட 25,000 பணியாளர்கள் பணியில் முழுமையாக ஈடுபட்டு இந்தப் பணியை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

பாதிப்புகள்:

கனமழை காரணமாக, இதுவரை நமக்கு கிடைத்திருக்கும் செய்திகள்படி 4 உயிரிழப்புகளும், 98 கால்நடை இறப்புகளும் பதிவாகியிருக்கிறது. 181 வீடுகள், குடிசைகள் சேதமடைந்திருக்கிறது. மற்ற சேத விவரங்கள் எல்லாம் முறையாக கணக்கெடுக்கப்பட்டு கொண்டிருக்கிறது

இந்த நிவாரண முகாம்களை பொறுத்தவரை, 201 நிவாரண முகாம்களில், 3163 குடும்பங்களைச் சார்ந்த 9130 நபர்கள் தங்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள் அவர்களுக்குத் தேவையான உணவு. பாதுகாப்பான குடிநீர். மருத்துவ வாதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டிருக்கிறது.

சென்னையைப் பொறுத்தவரை. மாநகராட்சிப் பகுதிகளில் நேற்று இரவு 70 கி.மீ வேகத்தில் வீசிய புயல் காற்றின் காரணமாக, சுமார் 400 மரங்கள் விழுந்திருக்கிறது. 150 மரங்கள் தெரு விளக்குகள் மீது விழுந்து சாய்ந்திருக்கிறது. மேலும், சேதாரங்களை சரிசெய்ய இப்போது 25,000 பணியாளர்கள் களத்தில் இறங்கி இருக்கிறார்கள். 900 மோட்டார்கள் தயார் நிலையில் இருக்கிறது, அதில் 300 மோட்டார்கள் தான் இப்போது இயங்கிக் கொண்டிருக்கிறது. 22 சுரங்கப்பாதைகளில் நீர் தேங்கவில்லை, இதனால் போக்குவரத்து எந்தவித தடையும் இல்லாமல் சீராக போய்க் கொண்டிருக்கிறது. வீழ்ந்த மரங்களை அப்புறப்படுத்துவது. மின்கம்பங்களை சரி படுத்துவது ஆகியவை உடனுக்குடன் செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது. வாகனப் போக்குவரத்திற்கும் எந்தவித இடையூறும் இல்லாமல் துரிதமாக சீர் செய்யப்பட்டிருக்கிறது.

இந்தக் சூழ்நிலையை உணர்ந்து, அவர்களை பாதுகாப்பாக தங்க வைப்பதற்கு முன்னரே நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டன. கண்காணிப்பு அலுவலர்கள் தொடர்புடைய மாவட்டங்களில் முகாமிட்டு அந்த நிவாரணப் பணிகளை மேற்கொண்டு, தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் தமிழ்நாடு பேரிடர் மீட்புப் ப 496 வீரர்கள் அடங்கிய 14 குழுக்கள் பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. அதன் மூலம், அந்த கடமைகளை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

CM Stalin: “எந்த பேரிடரையும் எதிர்கொள்ளலாம் என்பதை நிரூபித்து காட்டியுள்ளோம்” - முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னையைப் பொறுத்தவரை, மாநகராட்சிப் பகுதிகளில் நேற்று இரவு 70 கி.மீ வேகத்தில் வீசிய புயல் காற்றின் காரணமாக, சுமார் 400 மரங்கள் விழுந்திருக்கிறது. 150 மரங்கள் தெரு விளக்குகள் மீது விழுந்து சாய்ந்திருக்கிறது. மேலும், சேதாரங்களை சரிசெய்ய இப்போது 25,000 பணியாளர்கள் களத்தில் இறங்கி இருக்கிறார்கள். 900 மோட்டார்கள் தயார் நிலையில் இருக்கிறது, அதில் 300 மோட்டார்கள் தான் இப்போது இயங்கிக் கொண்டிருக்கிறது. 22 சுரங்கப்பாதைகளில் நீர் தேங்கவில்லை, இதனால் போக்குவரத்து எந்தவித தடையும் இல்லாமல் சீராக போய்க் கொண்டிருக்கிறது. வீழ்ந்த மரங்களை அப்புறப்படுத்துவது. மின்கம்பங்களை சரி படுத்துவது ஆகியவை உடனுக்குடன் செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது. வாகனப் போக்குவரத்திற்கும் எந்தவித இடையூறும் இல்லாமல் துரிதமாக சீர் செய்யப்பட்டிருக்கிறது.

”எந்த பேரிடரையும் எதிர்கொள்ளலாம்”

அதேபோல தமிழகத்தில் செங்கல்பட்டு. காஞ்சிபுரம் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் மீட்புப் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பலத்த காற்றின் காரணமாக, மின்கம்பங்கள், மின்கடத்திகள் சேதம் அடைந்திருக்கிறது. அதன் காரணமாக, மக்களுடைய பாதுகாப்பிற்காக 600 இடங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டிருக்கிறது. 600 இடங்களில் துண்டிக்கப்பட்டு இருந்தாலும், இப்போது வரைக்கும் 300 இடங்களில் அது சீர் செய்யப்பட்டிருக்கிறது. மீதமுள்ள பணிகளை சீர்செய்யும் பணிகளும் துரிதமாக நடைபெற்று வருகிறது. . முன்கூட்டியே திட்டமிட்ட காரணத்தால். எந்த உரிய பேரிடரையும் எதிர்கொள்ளலாம் என்பதை இந்த அரசு இன்றைக்கு நிரூபித்துச் காட்டியிருக்கிறது என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Pon Manikavel: இந்து சமய அறநிலையத்துறையை கலைத்து விட வேண்டும் - பொன்.மாணிக்கவேல் ஆவேசம்
இந்து சமய அறநிலையத்துறையை கலைத்து விட வேண்டும் - பொன்.மாணிக்கவேல் ஆவேசம்
TVK ADMK: தவெக என்ன சொல்றது? ”கூட்டணி ப்ளான், ஈபிஎஸ் சொல்றது தான்” விஜய்க்கு பதிலடி கொடுத்த அதிமுகவின் ஜெயக்குமார்
TVK ADMK: தவெக என்ன சொல்றது? ”கூட்டணி ப்ளான், ஈபிஎஸ் சொல்றது தான்” விஜய்க்கு பதிலடி கொடுத்த அதிமுகவின் ஜெயக்குமார்
Crime: கோபத்தில் வீட்டை விட்டு வெளியேறிய சிறுமி! பாலியல் வன்கொடுமை செய்த கார் ஓட்டுனர்கள் - ஆலந்தூரில் அநியாயம்
Crime: கோபத்தில் வீட்டை விட்டு வெளியேறிய சிறுமி! பாலியல் வன்கொடுமை செய்த கார் ஓட்டுனர்கள் - ஆலந்தூரில் அநியாயம்
IND vs AUS: இதயங்கள் உடைந்த நாள்! பறிபோன உலகக்கோப்பை! இந்தியாவை நொறுக்கிய ஆஸ்திரேலியா!
IND vs AUS: இதயங்கள் உடைந்த நாள்! பறிபோன உலகக்கோப்பை! இந்தியாவை நொறுக்கிய ஆஸ்திரேலியா!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

NTK cadre resigns : நாதகவின் முக்கிய விக்கெட்!’’சீமான் தான் காரணம்’’பரபரக்கும் சேலம்Harini Amarasuriya Profile : தேயிலை தொழிலாளியின் மகள்!இலங்கையை அலறவிட்ட சிங்கப்பெண்!யார் இந்த ஹரிணி?ADMK TVK Alliance : அதிமுகவுடன் தவெக கூட்டணி?விஜய் திடீர் அறிவிப்பு குஷியில் தொண்டர்கள்!Tirupur Bakery Fight : ’’டீ கேட்டா தரமாட்டியா’’பேக்கரி ஊழியர் மீது தாக்குதல்! போதை ஆசாமிகள் அராஜகம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pon Manikavel: இந்து சமய அறநிலையத்துறையை கலைத்து விட வேண்டும் - பொன்.மாணிக்கவேல் ஆவேசம்
இந்து சமய அறநிலையத்துறையை கலைத்து விட வேண்டும் - பொன்.மாணிக்கவேல் ஆவேசம்
TVK ADMK: தவெக என்ன சொல்றது? ”கூட்டணி ப்ளான், ஈபிஎஸ் சொல்றது தான்” விஜய்க்கு பதிலடி கொடுத்த அதிமுகவின் ஜெயக்குமார்
TVK ADMK: தவெக என்ன சொல்றது? ”கூட்டணி ப்ளான், ஈபிஎஸ் சொல்றது தான்” விஜய்க்கு பதிலடி கொடுத்த அதிமுகவின் ஜெயக்குமார்
Crime: கோபத்தில் வீட்டை விட்டு வெளியேறிய சிறுமி! பாலியல் வன்கொடுமை செய்த கார் ஓட்டுனர்கள் - ஆலந்தூரில் அநியாயம்
Crime: கோபத்தில் வீட்டை விட்டு வெளியேறிய சிறுமி! பாலியல் வன்கொடுமை செய்த கார் ஓட்டுனர்கள் - ஆலந்தூரில் அநியாயம்
IND vs AUS: இதயங்கள் உடைந்த நாள்! பறிபோன உலகக்கோப்பை! இந்தியாவை நொறுக்கிய ஆஸ்திரேலியா!
IND vs AUS: இதயங்கள் உடைந்த நாள்! பறிபோன உலகக்கோப்பை! இந்தியாவை நொறுக்கிய ஆஸ்திரேலியா!
Breaking News LIVE 19th Nov 2024: நாகை, தூத்துக்குடியில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை, தஞ்சை நிலவரம் என்ன?
Breaking News LIVE 19th Nov 2024: நாகை, தூத்துக்குடியில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை, தஞ்சை நிலவரம் என்ன?
Sabarimala: சாமியே சரணம்! மணிகண்டன் ஐயப்பனாக அவதரித்த வரலாறு தெரியுமா?
Sabarimala: சாமியே சரணம்! மணிகண்டன் ஐயப்பனாக அவதரித்த வரலாறு தெரியுமா?
Power Cut 19.11.2024: தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்தில் எந்த ஏரியாவில் பவர்கட்? முழு பட்டியல்
Power Cut 19.11.2024: தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்தில் எந்த ஏரியாவில் பவர்கட்? முழு பட்டியல்
Affordable EV List: அச்சுறுத்தும் காற்று மாசு - இந்திய சந்தையில் மலிவு விலை மின்சார கார்கள், உங்க சாய்ஸ் எது?
Affordable EV List: அச்சுறுத்தும் காற்று மாசு - இந்திய சந்தையில் மலிவு விலை மின்சார கார்கள், உங்க சாய்ஸ் எது?
Embed widget