மேலும் அறிய

தமிழ்நாட்டில் இறுதி வாக்காளர் பட்டியல் எப்போது? - தலைமை தேர்தல் அதிகாரி கொடுத்த அப்டேட்!

வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்கள் உரிய ஆவணங்களுடன் பெயர் சேர்க்கவும், புதிதாக விண்ணப்பிக்கவும், திருத்தங்கள் மேற்கொள்ளவும் வார இறுதி நாட்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற்றது.

தமிழ்நாட்டில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகும் தேதியை தமிழக தேர்தல் ஆணையர் அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். 

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்

2026ம் ஆண்டு தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதனிடையே தமிழ்நாட்டில் கடந்த 2025ம் ஆண்டு நவம்பர் மாதம் எஸ்.ஐ.ஆர். எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து வெளியிட்டப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் ஒவ்வொரு தொகுதியில் இருந்தும் பல ஆயிரம் தொடங்கி லட்சம் வரையிலான வாக்குகள் நீக்கப்பட்டது. 

இரண்டு முறை பதிவு, உயிரிழந்தவர்கள், சம்பந்தப்பட்ட தொகுதியில் இல்லாதவர்கள் என பலரின் வாக்குகளும் நீக்கப்பட்டது. எஸ்.ஐ.ஆர்.படிவம் சரியாக நிரப்பாதவர்கள் பெயர்களும் நீக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடைமுறைக்கு திமுக உள்ளிட்ட பெரும்பாலான கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. எனினும் வாக்குரிமை இருப்பவர்கள் பெயர் விடுபடக்கூடாது என மும்முரமாக செயல்பட்டு மக்களுக்கு உதவினர். 

இரண்டு மாதமாக நடந்த சிறப்பு முகாம்கள்

இதனிடையே வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்கள் உரிய ஆவணங்களுடன் பெயர் சேர்க்கவும், புதிதாக விண்ணப்பிக்கவும், திருத்தங்கள் மேற்கொள்ளவும் கடந்த ஒன்றரை மாத காலமாக வார இறுதி நாட்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கானோர் பங்கேற்று வாக்குரிமை கோரி ஆவணங்களை சமர்ப்பித்தனர். இப்படியான நிலையில் ஜனவரி 25ம் தேதியுடன் முடிவடைய வேண்டிய சிறப்பு முகாமானது ஜனவரி 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து திமுக சார்பில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பணியால் நீக்கப்பட்ட வாக்காளர்கள் தங்கள் பெயரை சேர்க்க கால அவகாசம் வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள்,  10 நாட்கள் கூடுதல் அவகாசம் கொடுக்க வேண்டும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டது. ஏற்கனவே பிப்ரவரி 3வது வாரத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகும் என கூறப்பட்ட நிலையில் இந்த கால அவகாசத்தால் பட்டியல் வெளியாவது தள்ளிப்போகும் சூழல் ஏற்பட்டது. 

அதேபோல் தமிழக சட்டமன்ற தேர்தலின் தேதியும் தள்ளிப்போக கூடிய சூழல் உண்டாகும் என பலரும் கருதினர். ஆனால் பிப்ரவரி 17ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகும் என தமிழக தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் கூறியுள்ளார். மேலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 34.75 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

தலைப்பு செய்திகள்

CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
புதுச்சேரியை உலுக்கும் 'RTI' குண்டு: 5 ஆண்டுகளில் மது வருமானம் ரூ.1,733 கோடியாக அதிகரிப்பு!
புதுச்சேரியை உலுக்கும் 'RTI' குண்டு: 5 ஆண்டுகளில் மது வருமானம் ரூ.1,733 கோடியாக அதிகரிப்பு!
தோளில் மனைவி... மனதில் காதல்! புதுச்சேரி ஆடித் திருவிழாவில் வைரலாகும் விநோதப் போட்டி!
தோளில் மனைவி... மனதில் காதல்! புதுச்சேரி ஆடித் திருவிழாவில் வைரலாகும் விநோதப் போட்டி!
தமிழக தொழில் துறை 17-க்கு சரிவு.. ஆர்.பி. உதயகுமார் த.வெ.க., மீது கொந்தளிப்பு !
தமிழக தொழில் துறை 17-க்கு சரிவு.. ஆர்.பி. உதயகுமார் த.வெ.க., மீது கொந்தளிப்பு !

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக- யாரெல்லாம் கலந்துக்க போறாங்கனு தெரியுமா.?
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக- யாரெல்லாம் கலந்துக்க போறாங்கனு தெரியுமா.?
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
TASMAC Liquor Bottles : மதுப்பிரியர்களுக்கு ஷாக்.! டாஸ்மாக்கில் மதுபான விலை உயரப்போகிறது.? பாட்டிலுக்கு எவ்வளவு தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக்.! டாஸ்மாக்கில் மதுபான விலை உயரப்போகிறது.? பாட்டிலுக்கு எவ்வளவு தெரியுமா.?
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
Embed widget