TN Assembly Session LIVE : முதலமைச்சரை வேந்தராக கொண்டு சித்தா பல்கலைக்கழக மசோதா பேரவையில் நிறைவேற்றம்
TN Assembly : தமிழ்நாடு சட்டமன்றத்தில் நடைபெறும் மானியக்கோரிக்கைகள் மீதான விவாதத்தை உடனுக்குடன் கீழே காணலாம்.

Background
தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரில் மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. சட்டசபையில் இன்று பத்திரப்பதிவ, வணிகவரி மற்றும் கைத்தறித்துறைகள் துறைகளின் மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற உள்ளது. இதன்படி, காலை 10 மணிக்கு பேரவையில் விவாதம் தொடங்க உள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
முதலமைச்சரை வேந்தராக கொண்டு சித்தா பல்கலைக்கழக மசோதா பேரவையில் நிறைவேற்றம்
முதலமைச்சரை வேந்தராக கொண்டு தமிழ்நாட்டில் புதிய சித்தா மருத்துவ பல்கலைக்கழகம் அமைக்கும் மசோதா பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது
கருணாநிதி கைது குறித்து அமைச்சர் பொன்முடி பேச்சு
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கருணாநிதி கைது செய்யப்பட்ட விவகாரத்தின்போது நடைபெற்ற சம்பவம் குறித்து உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சட்டசபையில் குறிப்பிட்டு கருணாநிதியின் தைரியம் குறித்து பேசினார்.





















