மேலும் அறிய

TN Rain Alert: அடுத்த 3 மணி நேரத்தில் 19 மாவட்டங்களை நனைக்க போகும் மழை.. எங்கெல்லாம் தெரியுமா?

அடுத்த 3 மணி நேரத்திற்குள் தமிழகத்தின் 19 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

அடுத்த 3 மணி நேரத்திற்குள் தமிழகத்தின் 19 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், மயிலாடுதுறை, கடலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, அரியலூர்ம் புதுக்கோட்டை, கோவை, நெல்லை மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நாளை 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு:

நாளை கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், திருநெல்வேலி, தேனி, தென்காசி, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. 

சென்னையில் கனமழைக்கு வாய்ப்பு:

சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

330 கி.மீ தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்:

வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகப்பட்டினத்திற்கு கிழக்கு திசையில் 330 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது மேற்கு- தென்மேற்கு திசையில் நகர்ந்து நாளை இலங்கை வழியாக குமரிக்கடல், அதனை ஒட்டிய பகுதியில் நோக்கி நகரக்கூடும். இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நீடிப்பு எதிரொலி காரணமாக நாகப்பட்டினம் துறைமுகத்தில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. 

25.12.2022: தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும். தூத்துக்குடி, இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

26.12.2022: தென் தமிழக மாவட்டங்களில் அநேக இடங்களிலும், வட தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம், தேனி, தென்காசி, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
 
27.12.2022, 28.12.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் மற்றும்  குறைந்தபட்ச வெப்பநிலை 22-23  டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். 
 
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22-23  டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். 

மீனவர்களுக்கான எச்சரிக்கை:  

 25.12.2022: தென்மேற்கு வங்கக்கடல் மற்றும்  அதனை ஒட்டிய இலங்கை கடலோரப்பகுதிகள், தமிழக கடலோரப்பகுதிகள், குமரிக்கடல் பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.  

26.12.2022: தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா பகுதிகள், குமரிக்கடல் பகுதிகள், தெற்கு கேரள கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல்பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.  

27.12.2022: குமரிக்கடல் பகுதிகள், கேரள கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள், லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 60   கிலோ மீட்டர் வேகத்தில்    வீசக்கூடும்.  

28.12.2022: தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள், லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 60   கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.  

மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு  செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Bengaluru Rains: அச்சச்சோ! பெங்களூரில் அடியோடு சரிந்த அடுக்குமாடி கட்டிடம் - உள்ளே சிக்கியவர்கள் இத்தனை பேரா?
Bengaluru Rains: அச்சச்சோ! பெங்களூரில் அடியோடு சரிந்த அடுக்குமாடி கட்டிடம் - உள்ளே சிக்கியவர்கள் இத்தனை பேரா?
Diwali Special Trains: நாளை தொடங்குது முன்பதிவு! தீபாவளிக்காக தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில் - எந்த ஊருக்கு?
Diwali Special Trains: நாளை தொடங்குது முன்பதிவு! தீபாவளிக்காக தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில் - எந்த ஊருக்கு?
Cyclone Dana:டானா புயல் எதிரொலி; 28 ரயில்கள் சேவை ரத்து - முழு விவரம்!
Cyclone Dana:டானா புயல் எதிரொலி; 28 ரயில்கள் சேவை ரத்து - முழு விவரம்!
"ரஷ்யா- உக்ரைன் போரை நாங்க முடிச்சு வக்குறோம்! என்ன சொல்றீங்க?" புதினிடம் கேட்ட பிரதமர் மோடி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Chain snatching : கணவர் கண்முன்னே மனைவியை தரதரவென இழுத்துச் சென்ற திருடர்கள்! பதறவைக்கும் CCTV காட்சிRahul Gandhi On Priyanka Gandhi : ”என் தங்கச்சி தான் BEST! வேற யாருமே சரிவரமாட்டாங்க”ராகுல் உருக்கம்Rajakannappan Scam : ”ரூ. 411 கோடி அரசு நிலம்” சுருட்டிய அமைச்சர் மகன்கள்? RADAR-ல் ராஜகண்ணப்பன்!Sanitation Worker Crying :10 வயதில் மதுவால் சீரழிந்த மகன்கள்..வீடு அருகே TASMAC கடை! கதறி அழும் தாய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Bengaluru Rains: அச்சச்சோ! பெங்களூரில் அடியோடு சரிந்த அடுக்குமாடி கட்டிடம் - உள்ளே சிக்கியவர்கள் இத்தனை பேரா?
Bengaluru Rains: அச்சச்சோ! பெங்களூரில் அடியோடு சரிந்த அடுக்குமாடி கட்டிடம் - உள்ளே சிக்கியவர்கள் இத்தனை பேரா?
Diwali Special Trains: நாளை தொடங்குது முன்பதிவு! தீபாவளிக்காக தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில் - எந்த ஊருக்கு?
Diwali Special Trains: நாளை தொடங்குது முன்பதிவு! தீபாவளிக்காக தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில் - எந்த ஊருக்கு?
Cyclone Dana:டானா புயல் எதிரொலி; 28 ரயில்கள் சேவை ரத்து - முழு விவரம்!
Cyclone Dana:டானா புயல் எதிரொலி; 28 ரயில்கள் சேவை ரத்து - முழு விவரம்!
"ரஷ்யா- உக்ரைன் போரை நாங்க முடிச்சு வக்குறோம்! என்ன சொல்றீங்க?" புதினிடம் கேட்ட பிரதமர் மோடி
மதுரையில் அதிர்ச்சி... கணவர் கண் முன்னே மனைவியிடம் செயின் பறிப்பு
மதுரையில் அதிர்ச்சி... கணவர் கண் முன்னே மனைவியிடம் செயின் பறிப்பு
அருந்ததியர் உள் இட ஒதுக்கீட்டைக் கொண்டுவந்ததில் பெருமை அடைகிறேன்: முதல்வர் ஸ்டாலின்
அருந்ததியர் உள் இட ஒதுக்கீட்டைக் கொண்டுவந்ததில் பெருமை அடைகிறேன்: முதல்வர் ஸ்டாலின்
Diwali Bonus: கூட்டுறவு‌ சங்க ஊழியர்களுக்கு 20%‌ தீபாவளி போனஸ்‌- தமிழக அரசு ஆணை
Diwali Bonus: கூட்டுறவு‌ சங்க ஊழியர்களுக்கு 20%‌ தீபாவளி போனஸ்‌- தமிழக அரசு ஆணை
Kamaraj University Convocation: மதுரை காமராஜர் பல்கலை. பட்டமளிப்பையும் புறக்கணித்த அமைச்சர் கோவி செழியன்; அவரே சொன்ன காரணம்!
Kamaraj University Convocation: மதுரை காமராஜர் பல்கலை. பட்டமளிப்பையும் புறக்கணித்த அமைச்சர் கோவி செழியன்; அவரே சொன்ன காரணம்!
Embed widget