TN School Online Class: 10,11,12 வகுப்புகளுக்கு ஜனவரி 31-வரை ஆன்லைன் வகுப்புகள் - தமிழக அரசு அறிவிப்பு
10,11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் எடுக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
ஏற்கெனவே 1 முதல் 9ஆம் வகுப்புகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் 10,11, 12ஆம் வகுப்புகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் மாணவ, மாணவியர்களின் நலன் கருதி விடுமுறை விடப்பட்டுள்ளது. மேலும், 10,12ஆம் வகுப்புகளுக்கு ஜனவரி 19ஆம் தொடங்கவிருந்த தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுவதாகவும் அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில் 10,11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வரும் 31ஆம் தேதி வகுப்புகள் எடுக்கலாம் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. அதன்படி அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி மூலம் ஆன்லைன் வகுப்புகள் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தனியார் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் எடுக்கலாம் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
TN School Holiday: 10,11,12ஆம் வகுப்புகளுக்கு ஜனவரி 31 வரை விடுமுறை - தேர்வுகளும் ஒத்திவைப்புhttps://t.co/CPdRTDVocv
— ABP Nadu (@abpnadu) January 16, 2022
முன்னதாக விடுமுறை தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கையில், கொரோனா பெருந்தொற்று காரணமாக 1 முதல் 9 வரையிலான வகுப்புகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு தற்போது 10 முதல் 12 வரையிலான வகுப்புகள் மட்டும் செயல்பட்டு வருகின்றன.இந்நிலையில், அதிகரித்து வரும் கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக மாணவர்களின் நலன் கருதி வரும் 31ஆம் தேதி வரை 10, 11 மற்றும் 12 உள்ளிட்ட அனைத்து வகுப்புகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது.
இதனையடுத்து, வரும் 19 அன்று தொடங்கி 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு நடக்கவிருந்த தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுகின்றன. தேர்வு குறித்த அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தமிழ்நாட்டில் இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ளன. அத்துடன் நோய் பரவலை தடுக்க தமிழ்நாடு அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் கடந்த 3ஆம் தேதி முதல் 15 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி போடும் பணியும் தமிழ்நாட்டில் வேகமாக நடைபெற்று வருகிறது. தற்போது தமிழ்நாட்டில் கொரோனா பரவல் தீவிரமாக அதிகரித்து வருவதால் தமிழ்நாடு அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் ஒரு நாள் தொற்று பாதிப்பு 23 ஆயிரத்தையும் தாண்டி பதிவாகி வருகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்