மேலும் அறிய

அரசுப்பள்ளிகளில்  குறைவான மாணவர்கள் இருந்தால் இதை செய்யுங்கள்- பள்ளிக் கல்வித்துறை அதிரடி உத்தரவு

பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பில் 30-க்கும் குறைவான மாணவர்களும், ஊரகப் பகுதிகளில் 15-க்கும் குறைவான மாணவர்களும் இருந்தால் அவர்களை அருகாமையில் உள்ள பள்ளிகளுக்கு மாற்ற வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. 

மாநகராட்சி, நகராட்சிப் பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பில் 30-க்கும் குறைவான மாணவர்களும், ஊரகப் பகுதிகளில் 15-க்கும் குறைவான மாணவர்களும் இருந்தால் அவர்களை அருகாமையில் உள்ள பள்ளிகளுக்கு மாற்ற வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. 

''மாணாக்கர்களின்‌ எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு ஆசிரியர்‌ மாணவர்‌ விகிதாச்சாரத்தின்‌ அடிப்படையில்‌ பணியாளர்‌ நிர்ணயம்‌ செய்யப்படுகிறது. அதாவது 01.08.2021 நிலவரப்படி முதுகலையாசிரியர்கள்‌ பணியிடங்கள்‌ மாணவர்களின்‌ எண்ணிக்கைக்கேற்ப பணியாளர்‌ நிர்ணயம்‌ செய்யப்பட்டது. 

அதே போன்று நடப்புக்‌ கல்வியாண்டிலும்‌ 01.08.2022 நிலவரப்படி பணியாளர்‌ நிர்ணயம்‌ செய்வதற்கு 31.08.2022 அன்று எமிஸ் இணையதளத்தில்‌ பதிவேற்றம்‌ செய்யப்பட்டுள்ள மாணவர்களின்‌ எண்ணிக்கையினைப் பதிவிறக்கம்‌ செய்து அதனடிப்படையில்‌ முதுகலையாசிரியர்கள்‌ பணியிடங்கள்‌ நிர்ணயம்‌ செய்தல்‌ சார்பாக கீழ்க்காணும்‌ அறிவுரைகளைப்‌ பின்பற்றி பணியாளர்‌ நிர்ணயம்‌ செய்திட அனைத்து மாவட்ட முதன்மைக்‌ கல்வி அலுவலர்களுக்கும்‌ தெரிவிக்கப்படுகிறது.

முதலாவதாக 1 முதல்‌ 60 மாணவர்களுக்கு 1 ஒரு பிரிவும்‌ அதற்கடுத்து ஒவ்வொரு 40 மாணவர்களுக்கு ஒரு கூடுதல்‌ பிரிவும்‌ Bifurcation என்ற அடிப்படையில்‌ நிர்ணயம்‌ செய்யப்பட வேண்டும்‌. தமிழ்‌ மற்றும்‌ ஆங்கிலப்பாட ஆசிரியர்களுக்கு ஒரு பிரிவிற்கு 4 பாட வேளைகள்‌ என வாரத்திற்கு குறைந்தபட்சம்‌ 24 பாடவேளைகள்‌ எனவும்‌, இதர அனைத்து பாட ஆசிரியர்களுக்கு ஒரு பிரிவிற்கு 7 பாடவேளைகள்‌ என வாரத்திற்கு குறைந்தபட்சம்‌ 28 பாடவேளைகள்‌ என்ற அடிப்படையிலும்‌ பணியாளர்‌ நிர்ணயம்‌ செய்யப்படுகிறது.

மேல்நிலைப்பிரிவுகளைப்‌ பொறுத்தவரை 11 மற்றும்‌ 12ம்‌ வகுப்புகளுக்கு 1:40 என்ற ஆசிரியர்‌-மாணவர்‌ விகிதாச்சாரத்தினையே பின்பற்ற வேண்டும்‌. மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ள பகுதி நகராட்‌சி/ மாநகராட்சி பகுதியாக இருப்பின்‌ குறைந்த பட்சம்‌ 30 மாணவர்களும்‌, ஏனைய ஊரக பகுதியாக இருப்பின்‌ குறைந்த பட்ச மாணவர்‌ எண்ணிக்கை 15 ஆக இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்‌.

மேல்நிலைப்பிரிவில்‌ 60 மாணவர்கள்‌ வரை ஒரு பிரிவாகவும்‌, 61-100 மாணவர்கள்‌ வரைஒரு பிரிவாகவும்‌, ஒவ்வொரு கூடுதல்‌ 40 மாணவர்களுக்கும்‌ கூடுதல்‌ பிரிவும்‌ ஏற்படுத்திடவும்‌ அனுமதிக்கப்படுகிறது. குறைந்த பட்ச மாணவர்கள்‌ இல்லாமல்‌ நடைபெற்‌று வரும்‌ பாடப்பிரிவுகளை நீக்கம்‌ செய்துவிட்டு அதில்‌ பயிலும்‌ மாணவர்களை அருகிலுள்ள பள்ளிகளுக்கு மாற்றம்‌ செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்‌.

பாடவேளைகள்‌ கணக்கிடுதல்‌

ஆசிரியர்‌ பணியிடங்கள்‌ நிர்ணயம்‌ செய்யும்போது ஓராசியருக்கு, வாரத்திற்குk குறைந்தபட்சம்‌ 28 பாடவேளைகள்‌ ஒதுக்கீடு உள்ளதா என்பதையும்‌ கணக்கில்‌ கொள்ள வேண்டும்‌.

முதுகலை ஆசிரியராகப்‌ பணியாற்றும்‌ ஆசிரியர்கள்‌ மேல்நிலை வகுப்புகளில்‌ மொழிப்பாடத்தில்‌ வாரத்திற்கு குறைந்தபட்‌ சம்‌ 24 பாடவேளைகள்‌ எனவும்‌, இதர அனைத்து பாட ஆசிரியர்களுக்கு வாரத்திற்கு குறைந்தபட்சம்‌ 28 பாடவேளைகள்‌ என்ற அடிப்படையிலும்‌ கணக்கீடு செய்ய வேண்டும்‌. அவ்வாறு போதிய பாடவேளை இன்றி உள்ள முதுகலை ஆசிரியரை உரிய முறையில்‌ கீழ்நிலை வகுப்புகளுக்கு (9,10ம்‌ வகுப்பு) கற்பிக்க பாடவேளைகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும்‌.

அரசுப்பள்ளிகளில்  குறைவான மாணவர்கள் இருந்தால் இதை செய்யுங்கள்- பள்ளிக் கல்வித்துறை அதிரடி உத்தரவு

கூடுதல்‌ தேவை பணியிடங்கள்‌

மொழிப்பாடத்தில்‌ 24 பாட வேளைக்கும்‌, முதன்மைப்‌ பாடத்தில்‌ 28 பாட வேளைகளுக்கும்‌ கூடுதலாக இருப்பின்‌ இதற்கென ஒரு ஆசிரியரை கூடுதலாக நிர்ணயம்‌ செய்யலாம்‌. 

ஆசிரியருடன்‌ உபரி பணியிடங்கள்‌

ஆசிரியர்‌ மாணவர்‌ விகிதாச்சாரத்தின்‌ அடிப்படையில்‌ பணியாளர்‌ நிர்ணயம்‌ செய்யும்போது ஒரு குறிப்பிட்ட பாடத்தில்‌ ஒன்றுக்கும்‌ மேற்பட்ட ஆசிரியர்கள்‌ பணிபுரிந்து, அதில்‌ ஒரு பணியிடம்‌ ஆசிரியருடன்‌ உபரி பணியிடமாக இருக்குமாயின்‌ அப்பாடத்தில்‌ பணிபுரியும்‌ ஆசிரியர்களில்‌ இளையோரை ஆசிரியருடன்‌ உபரியாக காண்பிக்கப்பட வேண்டும்‌. 

ஒருமுறை பணிநிரவல்‌ மூலம்‌ மாறுதல்‌ செய்யப்பட்டவர்களை அடுத்த மூன்று கல்வியாண்டுகளுக்கு மீண்டும்‌ பணி நிரவல்‌ செய்யக்கூடாது. அவ்வாறான நிகழ்வுகள்‌ எழும்போது சார்ந்த ஆசிரியர்‌ பணிநிரவலுக்கு உட்படுத்தப்பட்டதற்கான ஆதாரங்களை முன்னிலைப்படுத்தி மீண்டும்‌ பணிநிரவல்‌ செய்யப்படுவதில் இருந்து தவிர்ப்பு பெறலாம்‌.

எனினும்‌, சென்ற ஆண்டு ஆசிரியருடன்‌ உபரியாக கண்டறியப்பட்டு, பணிநிரவல் மூலம்‌ தற்போதைய பள்ளியில்‌ பணிபுரியும்‌ மேற்காண்‌ ஆசிரியர்‌, இந்த ஆண்டில்‌ தயார்‌ செய்யப்படும்‌ பணியாளர்‌ நிர்ணயத்தின்போதும்‌ ஆசிரியருடன்‌ உபரியாக காண்பிப்பதற்கு விருப்பம்‌ தெரிவித்தால்‌ அன்னாரை தற்போதைய பணியாளர்‌ நிர்ணயத்தின்போது ஆசிரியருடன்‌ உபரியாகக்‌ காண்பிக்கப்படவேண்டும்‌''.

இவ்வாறு பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

HMPV Virus China | மீண்டும் LOCKDOWN? சீனாவிலிருந்து அடுத்த பயங்கரம் அச்சுறுத்தும் HMPV வைரஸ்! INDIASU Venkatesan Hospitalized : சு. வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி  தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிTamilisai Delhi vist | தமிழைசையின் டெல்லி முகாம்!பெரிய பதவிக்கு தூண்டில் இதற்காகதான் காய் நகர்தினாராபிரியும் நட்சத்திர ஜோடி?  தனஸ்ரீ - சஹல் DIVORCE?  UNFOLLOW ! DELETE!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
"ரெக்க கட்டி பறக்குதடி" அண்ணாமலை ரஜினி போன்று சைக்கிள் ஓட்டிய மன்சுக் மாண்டவியா!
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
Embed widget