(Source: ECI/ABP News/ABP Majha)
Petrol Diesel Shortage: டிரக் ஓட்டுநர்கள் போராட்டம்! தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல், தட்டுப்பாடு வருமா? டீலர்கள் சங்கம் பரபரப்பு பதில்
வட மாநிலங்களில் லாரி ஓட்டுநர்களின் போராட்டம் வலுவடைந்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் தட்டுப்பாடு ஏற்படுமா என கேள்வி எழுந்துள்ளது.
புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக வட மாநிலங்களில் லாரி ஓட்டுநர்களின் போராட்டம் வலுவடைந்துள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு வராது என பெட்ரோல், டீசல் விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் முரளி தெரிவித்துள்ளார்.
டிரக் ஓட்டுநர்கள் சங்க போராட்டம்:
இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம், இந்தொய சாட்சிய சட்டம் ஆகியவற்றிற்கு மாற்றாக பாரதிய நியாய சம்ஹிதா, பாரதிய நாகரிக் சுரசஷா சம்ஹிதா, பாரதிய சாட்சிய அதிநியம் ஆகிய மூன்று குற்றவியல் மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்ரப்பட்டன.
குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்ததையடுத்து, அந்த மகசோதாக்கள் சட்டமாகின. இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்பும் ஆதரவும் எழுந்து வரும் நிலையில், குஜராத், ராஜஸ்தான், மகாராஷ்டிரா உள்ளிட்ட வட மாநிலங்களில் லாரி ஓட்டுநர்கள் வேலைநிறுத்த போராட்டில் ஈடுப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படுமா?
டிரக் ஓட்டுநர்கள் போராட்டத்தால் வட மாநிலங்களில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் இருக்கும் நிலையில், தமிழ்நாட்டின் நிலை குறித்து தமிழ்நாடு பெட்ரோல், டீசல் விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் முரளி விளக்கம் அளித்துள்ளார்,” தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட 100 சதவீதம் வாய்ப்பில்லை. நமக்கு வட மாநிலங்களில் இருந்து ட்ரான்ஸ்போர்ட் ஆகல. சென்னை, மதுரை, கரூர், திருச்சி ஆகிய பகுதிகளில் இருந்துதான் தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விநியோகம் செய்யப்படுகிறது..” என்று தெரிவித்துள்ளார்.
7 ஆண்டுகள் சிறை, 10 லட்சம் அபராதம்:
புதிய குற்றவியல் மசோதாக்கள் காவல் துறையினருக்கு அதிக அதிகாரத்தை வழங்குவதாக பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த மசோதாக்கள் கவனக்குறைவாக வாகனத்தை ஓட்டி விபத்து ஏற்படுத்தி நிறுத்தாமல் செல்லும் அல்லது அதிகாரிகளுக்கு தெரிவிக்காமல் செல்லும் ஓட்டுநர்களின் வழக்குகளில் ரூ.7 லட்சம் அபராதம் 10 ஆண்டுகள் சிரை தண்டனை வழங்கப்படும். இதை எதிர்த்தும் மசோதாக்களை திரும்பப்பெற வலியுறுத்தியும் மும்பை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் லாரி ஓட்டுநர்கள் வேலை நிறுத்தத்தில் ஈட்டுபட்டு வருகின்றனர்.
இதற்கு முந்திய சட்டத்தின் படி, இந்த குற்றத்திற்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. புதிய சட்டத்தினால் லாரி ஓட்டுநர்கள் பாதிக்கப்படுவார்கள் என வட மாநிலங்களில் லாரி ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். அந்த மாநிலங்களில் சரக்குப் போக்குவரத்து முடங்கியுள்ளது. இதனால், அந்த மாநிலங்களில் உள்ள பெட்ரோல் பங்குகளில் கூட்டம் அலைமோதுகிறது. லாரி ஓட்டுநர்களின் போராட்டம் நீடிக்கும்பட்சத்தில், எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படலாம் என பொதுமக்கள் மத்தியில் அச்சம் எழுந்துள்ளதால் மக்கள் முன்னெச்சரிக்கையாக பெட்ரோல், டீசல் ஸ்டாக் செய்யும் நோக்கில் வரிசையில் நிற்கின்றனர். அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் மத்திய அரசின் உள்துறை செயலாளர் அஜய்குமார் பல்லா பேச்சுவார்த்தை நடத்துகிறார்.