மேலும் அறிய

பட்ஜெட் மிகப்பெரிய பூஜ்யம்.! திட்டங்களின் பெயரை மட்டுமே மாற்ற எதற்கு CM ஆலோசனை.? அடித்து ஆடும் உதயநிதி

Tamil Nadu Budget 2026 Udhayanidhi : திமுக ஆட்சியில் செயல்படுத்திய திட்டங்களுக்கு பெயரை மட்டுமே மாற்ற முதலமைச்சர் விஜய் கடந்த ஒரு மாதமாக எதற்காக ஆலோசனை நடத்தினார் என உதயநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழக பட்ஜெட்- உதயநிதி விமர்சனம்

தமிழகத்தில் தவெக அரசு பதவியேற்றுள்ள நிலையில், இன்று தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளது. இது தொடர்பாக திமுக இளைஞர் அணி செயலாளரும், எதிர்கட்சி தலைவருமான உதயநிதி கூறுகையில், தவெக அரசு இன்று பட்ஜெட் தாக்கல் செய்துள்ளது. அதிலும் இந்த ஆட்சி அமைந்து 100 நாட்கள் ஆகியுள்ளது. இதற்கு மார்க் கொடுக்க வேண்டும் என்றால் பூஜ்யம் தான், அதிலும் இன்று தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டிற்கு மிகப்பெரிய பூஜ்யம் மதிப்பெண் தான் என விமர்சித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், தவெக அரசு தேர்தல் வாக்குறுதியாக நிறைய அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. எனவே இந்த வாக்குறுதிகள் உடனடியாக நிறைவேற்ற முடியாது. எனவே எப்போது நிறைவேற்றப்படும் கேட்டிருந்தோம். அதற்கான காலம் நிர்ணயுங்கள் என கேட்டோம் ஆனால் இதற்கான எந்த பதிலும் இல்லை.

திமுகவின் திட்டங்களுக்கு பெயர் மாற்றம்

மேலும் பட்ஜெட்டை பொறுத்தவரை கடந்த திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது. மாற்றம், மாற்றம் என சொன்னார்கள். திமுகவின் அனைத்து திட்டங்களுக்கும் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பட்ஜெட்டிற்கு முன்பு பொதுவாக திட்டங்கள் அறிவிப்பது தொடர்பாக முன் கூட்டியே அரசு அதிகாரிகளை கூட்டி முதலமைச்சர் ஆலோசனை செய்வார்கள். அதுபோல தற்போதும் முதலமைச்சர் ஆலோசனை என்ற பெயரில் போட்டோ சூட் நடத்தப்பட்டுள்ளது. எனவே திட்டங்களுக்கு எல்லாம் பெயர் மாற்றம் செய்ய எதற்கு  ஆய்வு கூட்டம் நடந்தது என தெரியவில்லையென விமர்சித்தார். 

கல்விக்கு நிதி குறைப்பு

இன்றைஏய பட்ஜெட்டில், தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கு பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் தங்க மோதிரம் வழங்கப்படும் என கூறப்பட்டது. ஆனால் தற்போது அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு மட்டும் தங்க மோதிர திட்டம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட வாக்குறுதி நிறைவேற்றுவது போல எந்த திட்டமும் இல்லை, திமுகவின் திட்டங்களுக்கு தான் பெயர் மாற்றப்பட்டுள்ளது. கடந்த திமுக பட்ஜெட்டில் கல்வி துறைக்கு 48 ஆயிரத்து 500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தவெக ஆட்சியில் 44ஆயிரம் கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் காவிரியில் தண்ணீர் வரவில்லை. கடந்த 50 வருடங்களில் இல்லாத வகையில் தற்போது காவிரியில் நீர் இல்லாமல் வறண்டு உள்ளது.

விவசாய பிரச்சனையை திசை திருப்ப கைது

மேகதாது அணை கட்டுவதை தடுத்து நிறுத்த தவெக அரசுக்கு தைரியம் இல்லை, இந்த தவெக ஆட்சியால் விவசாயிகள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாயிகள் முழு கடன் தள்ளுபடி என சொன்னார்கள், தற்போது 75 ஆயிரம் மட்டுமே தள்ளுபடி செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தஞ்சையில் விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு ஆதரவாக போராடிய நிலையில், பேசாத கருத்தை பேசியதாக கூறிய வீடு புகுந்து என்னை கைது செய்தனர்.

சட்டமன்றத்தில் நான் கேள்வி கேட்க கூடாது என்பதற்காவும், விவசாய பிரச்சனை திசை திருப்பவும் தான் தவெக அரசு கைது செய்தார்கள். இதே போல திமுகவினர் கைது செய்து வருகிறார்கள். தமிழகத்தில் நாளுக்கு நாள் சட்டம் ஒழுங்கு மோசமடைந்து வருகிறது. கடந்த 5 வராத்தில் 6 லாக்ஆப் மரணங்கள், 6 ஆவண படுகொலை நடைபெற்றுள்ளதாகவும் உதயநிதி குற்றம்சாட்டினார். 

Advertisement

தலைப்பு செய்திகள்

பட்ஜெட் மிகப்பெரிய பூஜ்யம்.! திட்டங்களின் பெயரை மட்டுமே மாற்ற எதற்கு CM ஆலோசனை.? அடித்து ஆடும் உதயநிதி
பட்ஜெட் மிகப்பெரிய பூஜ்யம்.! திட்டங்களின் பெயரை மட்டுமே மாற்ற எதற்கு CM ஆலோசனை.? அடித்து ஆடும் உதயநிதி
TN Budget 2026 : ‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் விஜயின் வாக்குறுதிகள் என்னென்ன இடம்பெறவில்லை..?
‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் இடம்பெறாத தவெக வாக்குறுதிகள்..!
Tamil Nadu Budget 2026 Highlights: தமிழ்நாடு TO கர்நாடகா வரை மெட்ரோ ரயில் சேவை - பட்ஜெட்டில் தகவல்
தமிழ்நாடு TO கர்நாடகா வரை மெட்ரோ ரயில் சேவை - பட்ஜெட்டில் தகவல்
ரேஷன் கடை வரிசைக்கு வழியில்லை... டாஸ்மாக்கிற்கு ஆன்லைன் வசதியா? - அன்புமணி எச்சரிக்கை!
ரேஷன் கடை வரிசைக்கு வழியில்லை... டாஸ்மாக்கிற்கு ஆன்லைன் வசதியா? - அன்புமணி எச்சரிக்கை!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
TN Budget 2026: தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய், செலவுகள் - பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழுந்தது? கடன் விவரங்கள்
தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய், செலவுகள் - பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழுந்தது? கடன் விவரங்கள்
TN Budget 2026 : ‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் விஜயின் வாக்குறுதிகள் என்னென்ன இடம்பெறவில்லை..?
‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் இடம்பெறாத தவெக வாக்குறுதிகள்..!
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
TN Budget 2026: குடிநீர், மழைநீர், போக்குவரத்து..! சென்னையின் வளர்ச்சி & மேம்பாட்டிற்கான பட்ஜெட் அறிவிப்புகள்
குடிநீர், மழைநீர், போக்குவரத்து..! சென்னையின் வளர்ச்சி & மேம்பாட்டிற்கான பட்ஜெட் அறிவிப்புகள்
Tamil Nadu Budget 2026 Highlights: தமிழ்நாடு TO கர்நாடகா வரை மெட்ரோ ரயில் சேவை - பட்ஜெட்டில் தகவல்
தமிழ்நாடு TO கர்நாடகா வரை மெட்ரோ ரயில் சேவை - பட்ஜெட்டில் தகவல்
TN Budget 2026 Highlights: தமிழக பட்ஜெட்: முதல்வர் விஜய் அறிவித்த டாப் 10 திட்டங்கள்! தங்கம் முதல் லேப்டாப் வரை!
TN Budget 2026 Highlights: தமிழக பட்ஜெட்: முதல்வர் விஜய் அறிவித்த டாப் 10 திட்டங்கள்! தங்கம் முதல் லேப்டாப் வரை!
TN Budget 2026: நிதியை அள்ளிக் கொடுத்த CM விஜய்..! ஒவ்வொரு துறைக்கும் எத்தனை கோடிகள் - தமிழக பட்ஜெட் விவரங்கள்
நிதியை அள்ளிக் கொடுத்த CM விஜய்..! ஒவ்வொரு துறைக்கும் எத்தனை கோடிகள் - தமிழக பட்ஜெட் விவரங்கள்
Embed widget