மேலும் அறிய

ஸ்டாலின் ஆட்சியில் சாலைப் புரட்சி! தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறையில் புதிய வரலாறு, மேம்பாலப் பணிகள் சாதனை!

தமிழ்நாடு ரூ.17,154 கோடியில் 9.620 கி.மீ. நீளச் சாலைப் பணிகள், இந்தியாவில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறையிலும் சிறந்த மாநிலம் எனப் புதிய வரலாறு படைத்திருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழக முதல்வர் ஸ்டாலினின் ஆட்சியில் சாலைத் திட்டங்கள் - மேம்பாலப் பணிகளால் இந்தியாவில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறையிலும் சிறந்த மாநிலம் எனப் புதிய வரலாறு படைத்திருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குச் சாலை வசதிகள் மிக மிக முக்கியமாகும். அமெரிக்க நாட்டின் குடியரசுத் தலைவராகத் திகழ்ந்த ஜான் எப். கென்னடி, "அமெரிக்க நாட்டுப் பொருளாதார முன்னேற்றத்திற்கு இந்நாட்டின் பயன்படும் சாலை வசதிகள் சிறப்பாக அமைந்திருப்பதே காரணம்" என்று ஒருமுறை குறிப்பிட்டாராம்.

தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்திடும் நோக்கில், முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி தமிழ்நாட்டில் சாலை வசதிகளைப் பெருக்கிட இணைப்புச் சாலைத் திட்டம். தமிழ்நாடு அரசின்கீழ் தனித்துறையாக நெடுஞ்சாலைத் துறை, நெடுஞ்சாலைத் துறைக்கெனத் தனி அமைச்சர் முதலிய பலவற்றை உருவாக்கி, நெடுஞ்சாலைத்துறையில் தமிழ்நாடு சிறந்த மாநிலம் எனப் புகழ்பெறச் செய்தார்.

நெடுஞ்சாலைத் துறையின் முத்திரைகள் முதலமைச்சர் சாலை மேம்பாட்டுத் திட்டம்

2021 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட முதலமைச்சர் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 3,858 கோடி மதிப்பீட்டில் 448 கி.மீ. நீளமுள்ள நான்கு வழித்தட சாலைகள், ரூ.2,207 கோடி மதிப்பில் 1,681 கி.மீ. நீளமுள்ள இரு வழித் தட சாலைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன தொடர்ந்து ரூ.2,807 கோடி மதிப்பீட்டில் 383 கி.மீ. நீளமுள்ள நான்கு வழித்தட சாலைப் பணிகளும், ரூ.709 கோடி மதிப்பீட்டில் 357 கி.மீ. நீளமுள்ள இரு வழித்தட சாலைப் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

ஒருங்கிணைந்த சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம்

ரூ.17,154 கோடி மதிப்பீட்டில் 9,620 கி.மீ நீளமுள்ள சாலைப் பணிகள் மற்றும் ரூ.1,161 கோடி மதிப்பீட்டில் 996 பாலம் / சிறு பாலப் பணிகள் நிறைவடைந்துள்ளன. ரூ.731 கோடி மதிப்பில் 164 கி.மீ. நீளத்திற்கு நகர்ப்பகுதி மேம்பாட்டுப் பணிகள் நிறைவடைந்துள்து. ரூ.2,074 கோடி மதிப்பீட்டில் சாலை ஓடுதளப்பாதை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 6,805 கி.மீ. நீளச் சாலைகளில் ஓடுதளப் பரப்பினை மேம்படுத்தும் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ரூ.662 கோடி மதிப்பீட்டில் 1,652 சாலைப் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு முடிவடைந்துள்ளது.

புறவழிச்சாலை மற்றும்  இணைப்புச் சாலைகள்

ரூ.307.8 கோடி மதிப்பீட்டில் மண்ணச்சநல்லூர் (கட்டம் 1) இலுப்பூர், பார்த்திபனூர், ராசிபுரம் கட்டம் 1 பிரிவு-2, திருத்துறைப்பூண்டி கட்டம்-1 பவானி கட்டம் II, முதுகளத்தூர், திருத்தணி, குன்னூர் மற்றும் நாமக்கல் கட்டம் I ஆகிய பத்து புறவழிச்சாலை திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ரூ.20.85 கோடி மதிப்பிட்டில் ஈரோடு மாவட்டம் வில்லரசம்பட்டி வழியாக திண்டல் சந்திப்பிலிருந்து கனிராவுத்தர்குளம் செல்லும் சாலை, ரூ.1.97 கோடி மதிப்பீட்டில் ஜவான்ஸ் பவன் சாலை, ரூ.41.89 கோடி மதிப்பீட்டில் பசுமலையில் இணைப்புச்சாலைப் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ரூ.4,907.17 கோடி மதிப்பீட்டில் 5,064.53 கி.மீ நீளமுள்ள ஊராட்சி / ஊராட்சி ஒன்றிய சாலைகள் மாவட்ட இதர சாலைகளாகத் தரம் உயர்த்தப்பட்டுள்ளன.

ரூ.1,330.70 கோடி பன்னாட்டு நிதி உதவியுடன் கூடிய திட்டங்கள்

சென்னை-கன்னியாகுமரி தொழில்தடத் திட்டத்தின் கீழ், ரூ.240.06 கோடி மதிப்பீட்டில் நக்கசேலம், குரும்பலூர் புறவழிச்சாலைகளுடன் கூடிய துறையூர் பெரம்பலூர் சாலை, ரூ.349.94 கோடி மதிப்பீட்டில் மோகனூர் நாமக்கல். சேந்தமங்கலம் ராசிபுரம் சாலை, ரூ.251.29 கோடி மதிப்பீட்டில் விருத்தாச்சலம் உளுந்தூர்பேட்டை சாலை, ரூ.238.90 கோடி மதிப்பீட்டில் தஞ்சாவூர் - மன்னார்குடி சாலை, ரூ.250.51 கோடி மதிப்பீட்டில் மேலூர் திருப்பத்தூர் சாலை ஆகிய 5 சாலைப் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

தமிழ்நாடு சாலை மேம்பாடுத் திட்டம்-II

இத்திட்டத்தின் கீழ் ரூ.129.94 கோடி மதிப்பீட்டில் விருத்தாச்சலம் பரங்கிப்பேட்டை சாலை ரூ. 144.64 கோடி மதிப்பீட்டில் ஓமலூர் மேச்சேரி சாலை. ரூ.104.70 கோடி மதிப்பீட்டில் சித்தோடு ஈரோடு சாலை, ரூ.176.58 கோடி மதிப்பீட்டில் திருநெல்வேலி செங்கோட்டை கொல்லம் சாலை ஆகிய 4 சாலைப் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

ஆறு வழித்தடச் சாலையாக மேம்பாடு தமிழ்நாடு சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகத்தின் கீழ், வண்டலூர்-வாலாஜாபாத் சாலை நான்கு வழித் தடத்திலிருந்து ஆறு வழித் தடச் சாலையாகரூ. 180.09 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்டுள்ளது. ரூ.1372 கோடி மதிப்பீட்டில் 1049 தரைப்பாலங்கள் உயர்மட்டப் பாலங்களாக மாற்றப்பட்டுள்ளன.

ரூ.813.25 கோடியில் 8 சாலை மேம்பாலங்கள்

பெருங்களத்தூர் ரயில் நிலையம் அருகில் இரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணியில் ரூ.37.00 கோடி மதிப்பீட்டில் செங்கல்பட்டிலிருந்து- சென்னை செல்லும் பாலப்பகுதிப் பணி, ரூ.24.80 கோடி மதிப்பீட்டில் சீனிவாச ராகவன் தெரு பாலப்பகுதிப் பணி, ரூ.60.13 கோடி மதிப்பீட்டில் சென்னையிலிருந்து செங்கல்பட்டு செல்லும் பாலப்பகுதிப் பணி முதலிய 29 இடங்களில் இரயில்வே பாதையின் குறுக்கே மேம்பாலங்களாகவும். கீழ்பாலங்களாகவும் அமைக்கப்பட்டு போக்குவரத்து இனிதாக நடைபெற வழிவகுத்துள்ளது.

கோயம்புத்தூர் மேற்குவட்டச்சாலை, மன்னார்குடி கட்டம்-1. அம்பாசமுத்திரம், திருச்செங்கோடு (I & II) பவானி (கட்டம் 1) நாமக்கல் (கட்டம் II & கட்டம் -III), பொள்ளாச்சி மேற்கு புறவழிச்சாலை, அருப்புக் கோட்டை மேற்கு புறவழிச்சாலை, கமுதி சிவகங்கை கட்டம் I, உத்திரமேரூர், துறையூர் கட்டம் II, தாம்பரம் கிழக்குப் புறவழிச்சாலை (இரு பகுதிகள்) மற்றும் திருப்போரூர் / கேளம்பாக்கம் ஆகிய பகுதிகளில் புறவழிச்சாலைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது. ரூ.944.21 கோடி மதிப்பீட்டில் 812.8 கி.மீ நீளமுள்ள ஊராட்சி / ஊராட்சி ஒன்றிய சாலைகள் மாவட்ட இதர சாலைகளாகத் தரம் உயர்த்தும் பணிகள் ரூ.331 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 373 சாலை பாதுகாப்புப் பணிகள். ஒருங்கிணைந்த சாலைகள் உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.8,076 கோடி மதிப்பீட்டில் 2,264 கி.மீ. நீளமுள்ள சாலைப் பணிகள் மற்றும் ரூ.694 கோடி மதிப்பில் 69 பாலம் / சிறுபாலப் பணிகள் ரூ.763.80 கோடி மதிப்பீட்டில் 134 தரைப்பாலங்களை உயர்மட்ட பாலங்களாக மாற்றும் பணிகள் ரூ.375.32 கோடி மதிப்பீட்டில் நபார்டு கடனுதவி திட்டத்தின் கீழ் 32 உயர்மட்டப் பாலங்கள், ரூ.596.64 கோடி மதிப்பீட்டில் மாநில நிதி திட்டத்தின் கீழ் 19 உயர்மட்டப் பாலங்கள்.

ரூ.1791.23 கோடி மதிப்பீட்டில் கோயம்புத்தூரில் கோல்டுவின்ஸ் முதல் உப்பிலிப்பாளையம் வரை உயர்மட்ட சாலை அமைக்கும் பணிகள். ரூ.621 கோடி மதிப்பீட்டில் சென்னையில் தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை உயர்மட்டச் சாலை அமைக்கும் பணிகள் ரூ.25.52 கோடி மதிப்பீட்டில் படப்பையில் சாலை மேம்பாலம் ரூ.190.40 கோடி மதிப்பீட்டில் மதுரையில் கோரிப்பாளையம் சந்திப்பில் சாலை மேம்பாலம். ரூ.150.28 கோடி மதிப்பீட்டில் மதுரையில் மதுரை-தொண்டி சாலையில் சாலை மேம்பாலம். ரூ.2,105.49 கோடி மதிப்பீட்டில் 41 இரயில்வே மேம்பாலங்கள்/ ரயில்வே கீழ்பாலங்கள் கட்டும் பணிகள் ரூ.27.5 கோடி மதிப்பீட்டில் டைடல் பார்க் சந்திப்பில் "U" வடிவிலான மேம்பாலம் கட்டும் பணிகள் என பல்வேறு முக்கிய பாலங்கள் கட்டும் பணிகள் நடைபெறுகின்றன.

ரூ.590.51 கோடியில் சென்னை பெருநகர வளர்ச்சித் திட்டப் பணிகள்

ரூ.60.69 கோடி மதிப்பீட்டில் சென்னையில் சர்தார் படேல் சாலையுடன் ராஜீவ்காந்தி சாலை இணையும் மத்திய கைலாஷ் சந்திப்பில் சாலை மேம்பாலம். ரூ.314.48 கோடி மதிப்பீட்டில் மியாட் மருத்துவமனை முதல் முகலிவாக்கம் வரை மேம்பாலம் அமைக்கும் பணி மற்றும் ரூ45.50 கோடி மதிப்பீட்டில் மடிப்பாக்கம் அருகே வாகன சுரங்கப்பாதை அமைக்கும் பணி. ரூ.30.67 கோடி மதிப்பீட்டில் நெல்சன் மாணிக்கம் சாலை சந்திப்பு, செந்தில் நகர் சந்திப்பு ஆகிய இடங்களில் 2 நடை மேம்பாலங்கள். ரூ.139.17 கோடி மதிப்பீட்டில் உள்வட்டச் சாலையிலுள்ள இரயில்வே மேம்பாலத்தை அகலப்படுத்தும் பணி முதலியன சென்னைப் பெருநகர வளர்ச்சித் திட்டப் பணிகளாக நடைபெற்று வருகின்றன.

முதல்வர் மு.கஸ்டாலின் ஆட்சியில் இத்தகைய பல சாலைத் திட்டங்கள், மேம்பாலப் பணிகளால் மற்ற துறைகளைப் போலவே இந்தியாவில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறையிலும் சிறந்த மாநிலம் என புதிய வரலாறு படைத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Indigo Flights: இண்டிகோ விவகாரம்.. ”சாரி.. ரூல்ஸ உடைக்கணும்னுலா எதுவும் செய்லிங்க” - சேர்மேன் சொன்ன காரணம்
Indigo Flights: இண்டிகோ விவகாரம்.. ”சாரி.. ரூல்ஸ உடைக்கணும்னுலா எதுவும் செய்லிங்க” - சேர்மேன் சொன்ன காரணம்
IND Vs SA T20: சொதப்பும் கில், ஸ்கை.. சஞ்சுவிற்கு வாய்ப்பு? தெ.ஆப்., சமாளிக்குமா இந்தியா? இன்று 2வது டி20 போட்டி
IND Vs SA T20: சொதப்பும் கில், ஸ்கை.. சஞ்சுவிற்கு வாய்ப்பு? தெ.ஆப்., சமாளிக்குமா இந்தியா? இன்று 2வது டி20 போட்டி
Amit Shah: SIR - யார் பதிலளிப்பது.?; காங்கிரஸ் மீது விமர்சனம்; நாடாளுமன்றத்தில் அமித் ஷா பேசியது என்ன.?
SIR - யார் பதிலளிப்பது.?; காங்கிரஸ் மீது விமர்சனம்; நாடாளுமன்றத்தில் அமித் ஷா பேசியது என்ன.?
Rahul Gandhi: தேர்தல் சீர்திருத்தம்; கேள்விகளுக்கு பதில் இல்லை; அமித் ஷா மீது ராகுல் வைத்த குற்றச்சாட்டு என்ன.?
தேர்தல் சீர்திருத்தம்; கேள்விகளுக்கு பதில் இல்லை; அமித் ஷா மீது ராகுல் வைத்த குற்றச்சாட்டு என்ன.?
ABP Premium

வீடியோ

அன்று நீதிபதி மீது காலணி எறிந்த Lawyer இன்று செருப்பால் அடிவாங்கினார் நீதிமன்ற வாசலில் சம்பவம் | Rakesh Kishore | Supreme Court | BR Gavai
”எந்த ஷா வந்தாலென்ன? தமிழ்நாடு Out of Control தான்” ஸ்டாலின் பதிலடி! | MK Stalin On Amit Shah
ADMK General Council Meeting Food |’’மட்டன் பிரியாணி, சிக்கன் 65..EPS-ன் அறுசுவை விருந்து
Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Indigo Flights: இண்டிகோ விவகாரம்.. ”சாரி.. ரூல்ஸ உடைக்கணும்னுலா எதுவும் செய்லிங்க” - சேர்மேன் சொன்ன காரணம்
Indigo Flights: இண்டிகோ விவகாரம்.. ”சாரி.. ரூல்ஸ உடைக்கணும்னுலா எதுவும் செய்லிங்க” - சேர்மேன் சொன்ன காரணம்
IND Vs SA T20: சொதப்பும் கில், ஸ்கை.. சஞ்சுவிற்கு வாய்ப்பு? தெ.ஆப்., சமாளிக்குமா இந்தியா? இன்று 2வது டி20 போட்டி
IND Vs SA T20: சொதப்பும் கில், ஸ்கை.. சஞ்சுவிற்கு வாய்ப்பு? தெ.ஆப்., சமாளிக்குமா இந்தியா? இன்று 2வது டி20 போட்டி
Amit Shah: SIR - யார் பதிலளிப்பது.?; காங்கிரஸ் மீது விமர்சனம்; நாடாளுமன்றத்தில் அமித் ஷா பேசியது என்ன.?
SIR - யார் பதிலளிப்பது.?; காங்கிரஸ் மீது விமர்சனம்; நாடாளுமன்றத்தில் அமித் ஷா பேசியது என்ன.?
Rahul Gandhi: தேர்தல் சீர்திருத்தம்; கேள்விகளுக்கு பதில் இல்லை; அமித் ஷா மீது ராகுல் வைத்த குற்றச்சாட்டு என்ன.?
தேர்தல் சீர்திருத்தம்; கேள்விகளுக்கு பதில் இல்லை; அமித் ஷா மீது ராகுல் வைத்த குற்றச்சாட்டு என்ன.?
MK STALIN: எந்த ஷா வந்தாலென்ன? டெல்லி பாதுஷாவே வந்தாலும் தமிழ்நாடு Out of Control தான்!..! ஸ்டாலின் எச்சரிக்கை
எந்த ஷா வந்தாலென்ன? டெல்லி பாதுஷாவே வந்தாலும் தமிழ்நாடு Out of Control தான்!..! ஸ்டாலின் எச்சரிக்கை
TN Power Shutdown: மக்களே தயாரா இருங்க.! திருச்சி, கோவை, சேலம் உட்பட முக்கிய பகுதிகளில் நாளை(11-12-25) மின் தடை
மக்களே தயாரா இருங்க.! திருச்சி, கோவை, சேலம் உட்பட முக்கிய பகுதிகளில் நாளை(11-12-25) மின் தடை
Top 5 Scooters in India: Activa முதல் Access வரை; இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர்கள், விலை, அம்சங்கள தெரிஞ்சுக்கோங்க
Activa முதல் Access வரை; இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர்கள், விலை, அம்சங்கள தெரிஞ்சுக்கோங்க
Honda Shine 100: குறைந்த விலை.. 65 கிமீ மைலேஜ்.. ஸ்பிளெண்டருக்கு டஃப் கொடுக்கும் பைக் இதுதான்...
குறைந்த விலை.. 65 கிமீ மைலேஜ்.. ஸ்பிளெண்டருக்கு டஃப் கொடுக்கும் பைக் இதுதான்...
Embed widget