மேலும் அறிய

அரைலிட்டர் பாக்கெட்டில் 50 கிராம் மிஸ்ஸிங்! முகவர்கள் குற்றச்சாட்டு - நடவடிக்கை எடுக்குமா ஆவின்?

500மிலி அளவுள்ள பால் பாக்கெட்டுகளில் வெறும் 450 கிராம் மட்டுமே இருப்பதாக தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் குற்றச்சாட்டு வைத்துள்ளது.

அம்பத்தூர் பால் பண்ணையில் உற்பத்தி செய்யப்பட்டு மதுரவாயல், நெற்குன்றம், கோயம்பேடு, அம்பத்தூர், அண்ணா நகர், வில்லிவாக்கம், அயனாவரம் உள்ளிட்ட சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளில் பால் பாக்கெட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அதேபோல், இன்று (02.01.2024) அம்பத்தூர் பால் பண்ணையில் இருந்து அதிகாலையில் பால் முகவர்களுக்கு விநியோகம் செய்யப்பட்ட ஆவின் நிலைப்படுத்தப்பட்ட பச்சை நிற பால் பாக்கெட்டுகளின் எடையளவு மிகவும் குறைவாக இருப்பதாக பால் முகவர் ஒருவர் சந்தேகம் அடைந்துள்ளார்.

குறைந்த பாலின் அளவு:

இதையடுத்து, அந்த நபர் தான் கொள்முதல் செய்த பச்சை நிற ஆவின் பால் பாக்கெட்டுகள் அனைத்தையும் (180லிட்டர்) ஒவ்வொன்றாக எடை போட்டுப் பார்த்ததில் 518 முதல் 520கிராம் வரை இருக்க வேண்டிய ஒவ்வொரு பால் பாக்கெட்டுகளும் 448, 449, 450கிராம் என சுமார் 70கிராம் வரை மிகவும் எடையளவு குறைவான நிலையில் விநியோகம் செய்யப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். தொடர்ந்து, உடனடியாக தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார். 

ஏனெனில் ஆவினில் பால் பாக்கெட்டுகள் கசிவு என்றாலோ, அளவு குறைவாக வந்தாலோ, கெட்டுப் போனாலோ ஆவின் நிர்வாகத்திற்கு புகார் தெரிவித்தால் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை, அதுமட்டுமின்றி வாடிக்கையாளர் சேவை மைய எண்ணை தொடர்பு கொண்டாலும் அவர்கள் தரப்பிலும் பால் முகவர்களுக்கு சரியான பதில் கூறுவதில்லை என்பதோடு, சம்பந்தப்பட்ட பால் முகவர்கள் அளிக்கும் புகாரையும் பதிவு செய்வதில்லை என்று தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தினர் தெரிவிக்கின்றன. 
 
இந்த சூழலில் எடையளவு குறைவான ஆவின் பால் பாக்கெட்டுகள் விநியோகம் செய்யப்படுவது என்பது பால் பண்ணையில் உள்ள தரக்கட்டுப்பாடு, மேற்பார்வை அதிகாரிகள், பால் பண்ணை பொதுமேலாளர் (DGM), உதவி பொது மேலாளர் (AGM, Marketing), Control Room அதிகாரிகள் உள்ளிட்டோரின் ஒத்துழைப்பு இல்லாமல் நடந்திருக்க வாய்ப்பில்லை என்றும், தொடர்ந்து எடையளவு குறைவான ஆவின் பால் பாக்கெட்டுகள் உற்பத்தி, விநியோகம் செய்து அதன் மூலம் மிகப்பெரிய அளவில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதற்கான வாய்ப்புகள் இருப்பது உறுதியாகிறது.

ஏற்கனவே இதேபோல்..!

ஏற்கனவே கடந்தாண்டு வேலூர், சென்னை மாதவரம் ஆவின் பால் பண்ணைகளில் உற்பத்தி செய்து விநியோகம் செய்யப்பட்ட ஆவின் பால் பாக்கெட்டுகள் இதே போன்று 450கிராம், 470கிராம் என எடையளவு மிகவும் குறைவான நிலையில் இருந்துள்ளது. அவ்வாறு எடையளவு குறைவான ஆவின் பால் பாக்கெட்டுகள் உற்பத்தி செய்து, விநியோகம் செய்த அதிகாரிகள், ஊழியர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததால் அது மீண்டும் தற்போது தொடர்கதையாகி வருவதாக கூறப்படுகிறது. 

இதுகுறித்து தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் சார்பில் வெளியிட்ட அறிக்கையில், “தற்போது அம்பத்தூர் ஆவின் பால் பண்ணையின் உதவி பொது மேலாளராக (AGM, Marketing) இருக்கும் சிவக்குமார் அவர்கள் வேலூரில் பணியில் இருந்த போதுதான் ஒரே பதிவெண் கொண்ட இரண்டு வாகனங்களில் ஆவின் பால் பாக்கெட்டுகள் ஏற்றிச் செல்லப்பட்ட முறைகேடுகள் அரங்கேறியது. ஆனால் அந்த முறைகேடுகள் குறித்து காவல்துறையில் புகார் அளித்ததோடு வேறு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத சூழலில் அவர் அம்பத்தூர் பால் பண்ணைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அதன் பிறகு வேலூர் சம்பவம் போன்றே கடந்த சில மாதங்களுக்கு முன் இங்கும் ஒரே பதிவெண் கொண்ட இரண்டு வாகனங்களில் ஆவின் பால் பாக்கெட்டுகள் ஏற்றிச் சென்று முறைகேடுகள் நடைபெற்ற நிலையில் வேலூர் சம்பவம் போன்றே அம்பத்தூர் ஆவின் பால் பண்ணை சம்பவமும் மூடி மறைக்கப்பட்டது

அதுமட்டுமின்றி மிக்ஜாம் புயலால் சென்னை மாநகரில் ஆவின் பால் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்ட போது அதனை ஈடுசெய்ய சேலத்தில் இருந்து சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்ட சுமார் 25 ஆயிரம் லிட்டர் ஆவின் டிலைட் பால் பாக்கெட்டுகளில் சுமார் 9400லிட்டர் ஆவின் டிலைட் பால் பாக்கெட்டுகள் மாயமான நிலையில் அதற்கு பொறுப்பாளரான உதவிப் பொது மேலாளர் (AGM, Marketing) சிவக்குமார் மீது இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்த சூழலில் தான் அம்பத்தூர் பால் பண்ணையில் இருந்து சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளில் விநியோகம் செய்யப்பட்ட பச்சை நிற ஆவின் பால் பாக்கெட்டுகள் மீண்டும் மிகவும் எடையளவு குறைவான நிலையில் விநியோகம் செய்யப்பட்டிருப்பதை காணும் போது இது சாதாரணமாகவோ அல்லது யதேச்சையாகவோ நடந்தது போல் இல்லாமல், பால் பாக்கெட்டில் எடையளவு குறைவாக பேக்கிங் செய்து விநியோகம் செய்தால் யார் கண்டு பிடிக்கப் போகிறார்கள்..? என்கிற தைரியத்தில் திட்டமிட்டு செய்தது போல் தெரிகிறது.

எனவே தற்போது எடையளவு குறைவான அளவில் ஆவின் பால் பாக்கெட்டுகள் விநியோகம் செய்த விவகாரத்தை சாதாரணமாக கடந்து செல்லாமல் முறையான விசாரணைக்கு உட்படுத்தி அம்பத்தூர் ஆவின் பால் பண்ணையில் உள்ள அனைத்து அதிகாரிகள் மீதும், குறிப்பாக DGM, AGM, Marketing அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதல்வர் அவர்களை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.” என தெரிவிக்கப்பட்டது. 

தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் சார்பில் சரியான அளவிலான பால் பாக்கெட்களை பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தினர் முன்வைத்த இந்த குற்றச்சாட்டுக்கு இதுவரை ஆவின் நிர்வாகம் சார்பில் எதுவும் மறுப்போ, விளக்கமோ வெளியிடப்படவில்லை. அதேபோன்று, பால் முகவர்கள் சங்கம் அளித்த காணொலி காட்சி உண்மைத்தன்மையை உறுதிப்படுத்த முடியவில்லை. ஆனால், இந்த குற்றச்சாட்டு தொடர்பாக ஆவின் நிர்வாகம் சார்பில் விளக்கம் அளிக்கும்பட்சத்தில் அதையும் வெளியிடுவோம்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
Minister ponmudi: அமலாக்கத்துறை சோதனை... நழுவி சென்ற அமைச்சர் பொன்முடி
Minister ponmudi: அமலாக்கத்துறை சோதனை... நழுவி சென்ற அமைச்சர் பொன்முடி
Coimbatore: 8 மணி நேர போராட்டம்! தூக்கி நிறுத்தப்பட்ட டேங்கர் லாரி.. மக்கள் நிம்மதி பெருமூச்சு
Coimbatore: 8 மணி நேர போராட்டம்! தூக்கி நிறுத்தப்பட்ட டேங்கர் லாரி.. மக்கள் நிம்மதி பெருமூச்சு
யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 
யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Yescon 2025 : சென்னையில் நாளை முதல்.. YESCON - 2025 மாநாடு துவக்கி வைக்கும் நிதியமைச்சர்செ.பாலாஜி..பொன்முடி வரிசையில்..  துரைமுருகன் வீட்டில் ED ரெய்டு!  பரபரக்கும் வேலூர்ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் ! களமிறங்கிய MASTER MINDS ! 2026-ல் அரியணை யாருக்கு?FORM-க்கு வரும் அதிமுக : வழிகாட்டும் MASTERMIND : திமுகவுக்கு பக்கா ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
Minister ponmudi: அமலாக்கத்துறை சோதனை... நழுவி சென்ற அமைச்சர் பொன்முடி
Minister ponmudi: அமலாக்கத்துறை சோதனை... நழுவி சென்ற அமைச்சர் பொன்முடி
Coimbatore: 8 மணி நேர போராட்டம்! தூக்கி நிறுத்தப்பட்ட டேங்கர் லாரி.. மக்கள் நிம்மதி பெருமூச்சு
Coimbatore: 8 மணி நேர போராட்டம்! தூக்கி நிறுத்தப்பட்ட டேங்கர் லாரி.. மக்கள் நிம்மதி பெருமூச்சு
யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 
யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 
UDISE Report: அதிரடியாக வகுத்த 6 திட்டங்கள்! ஆர்வமுடன் பள்ளிசெல்லும் குழந்தைகள்- தமிழக அரசு  பெருமிதம்!
UDISE Report: அதிரடியாக வகுத்த 6 திட்டங்கள்! ஆர்வமுடன் பள்ளிசெல்லும் குழந்தைகள்- தமிழக அரசு பெருமிதம்!
IND vs AUS: ரஞ்சி வீரர்கள் எதுக்கு இருக்காங்க? இனியாவது வாய்ப்புத் தருமா பிசிசிஐ?
IND vs AUS: ரஞ்சி வீரர்கள் எதுக்கு இருக்காங்க? இனியாவது வாய்ப்புத் தருமா பிசிசிஐ?
சூப்பர்ஸ்டார்னா சும்மாவா? ப்ரெஞ்சு படத்துலயே ரஜினிதான் மாஸ் - ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்
சூப்பர்ஸ்டார்னா சும்மாவா? ப்ரெஞ்சு படத்துலயே ரஜினிதான் மாஸ் - ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்
எனக்கு யார் வந்திருக்கிறார்கள் என தெரியவில்லை: ரெய்டு குறித்து துரைமுருகன் பேட்டி
எனக்கு யார் வந்திருக்கிறார்கள் என தெரியவில்லை: ரெய்டு குறித்து துரைமுருகன் பேட்டி
Embed widget