மேலும் அறிய

TN Rain Alert: தொடரும் மழை.. மதியம் 1 மணி வரை 5 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை.. எந்தெந்த பகுதிகளில்?

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக கடந்த 2 தினங்களாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் மழை பெய்தது. குறிப்பாக திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் அனைத்து பகுதிகளிலும் இடைவிடாது 24 மணி நேரத்தையும் தாண்டி அதிக கனமழை பெய்தது. இதன் காரணமாக இந்த மாவட்டங்கள் முழுவதும் நீரில் மூழ்கியது என்றே சொல்லலாம். அப்படி அனைத்து பகுதிகளிலும் மழை நீர் சூழ்ந்தது.

இந்நிலையில் இன்றும் ஒரு சில மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும் என்றும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் 24 ஆம் தேதி வரை, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான/மிதமான மழை  பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை (செண்டிமீட்டரில்):

திருச்செந்தூர் (தூத்துக்குடி மாவட்டம்) 23, காயல்பட்டினம் (தூத்துக்குடி மாவட்டம்) 21, நாலுமுக்கு (திருநெல்வேலி மாவட்டம்) 19, காக்காச்சி (திருநெல்வேலி மாவட்டம்) 18, மாஞ்சோலை (திருநெல்வேலி மாவட்டம்) 17, ஊத்து (திருநெல்வேலி மாவட்டம்) 15, மூலைக்கரைப்பட்டி (திருநெல்வேலி மாவட்டம்) 13, அம்பாசமுத்திரம் (திருநெல்வேலி மாவட்டம்) 12, பாபநாசம் (திருநெல்வேலி மாவட்டம்) 11, கன்னட அணைக்கட்டு (திருநெல்வேலி மாவட்டம்) 9, மணிமுத்தாறு (திருநெல்வேலி மாவட்டம்) 8, சேர்வலர் அணை (திருநெல்வேலி மாவட்டம்) 6, களக்காடு (திருநெல்வேலி மாவட்டம்) 6, சேரன்மகாதேவி (திருநெல்வேலி மாவட்டம்) 5, கமுதி (ராமநாதபுரம் மாவட்டம்), கொடுமுடியாறு அணை (திருநெல்வேலி மாவட்டம்), அருப்புக்கோட்டை (விருதுநகர் மாவட்டம்), உசிலம்பட்டி (மதுரை மாவட்டம்), திருநெல்வேலி (திருநெல்வேலி மாவட்டம்), காரியாபட்டி (விருதுநகர் மாவட்டம்), கல்லிக்குடி (மதுரை மாவட்டம்) தலா 4 செ.மீ மழை பதிவாகியுள்ளது.  

மீனவர்களுக்கான எச்சரிக்கை: 

தமிழக கடலோரப்பகுதிகள்:

19.12.2023: தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

20.12.2023: தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய  குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

அரபிக்கடல் பகுதிகள்:

19.12.2023: லட்சதீவு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Vettaiyan Trailer : ஹண்டர் வந்துட்டார்... வெளியானது ரஜினியின் வேட்டையன் பட டிரைலர்
Vettaiyan Trailer : ஹண்டர் வந்துட்டார்... வெளியானது ரஜினியின் வேட்டையன் பட டிரைலர்
Breaking News LIVE OCT 2 :விசிக மாநாட்டில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றம்.!
Breaking News LIVE OCT 2 :விசிக மாநாட்டில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றம்.!
வெள்ள நீரில் தரையிறங்கிய இந்திய விமானப்படையின் ஹெலிகாப்டர்: அதிர்ச்சியை ஏற்படுத்தும் காட்சிகள்.!
வெள்ள நீரில் தரையிறங்கிய இந்திய விமானப்படையின் ஹெலிகாப்டர்: அதிர்ச்சியை ஏற்படுத்தும் காட்சிகள்.!
GST Collection: செப்டம்பர் மாத ஜி.எஸ்.டி.வரி  ரூ.1.73 லட்சம் கோடி வசூல்!
GST Collection: செப்டம்பர் மாத ஜி.எஸ்.டி.வரி ரூ.1.73 லட்சம் கோடி வசூல்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Siddaramaiah Shoes Video : முதல்வரின் அதிகார திமிர்..காங். மரியாதைக்கு வேட்டு தேசிய கொடிக்கு கலங்கம்ADMK Vs AMMK : ’’யார் பெருசுனு அடிச்சு காட்டு!’’ Jayakumar vs TTV Dhinakaran..வம்பிழுத்த ஆதரவாளர்கள்Gambhir plan for Ruturaj |”நீ அடிச்சி ஆடு ருதுராஜ்”கம்பீர் MASTER STROKE அலறும் AUSSIESNamakkal Viral Video | ஆளே இல்லாமல் வந்த பைக்..தெறித்து ஓடிய பெண்!நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vettaiyan Trailer : ஹண்டர் வந்துட்டார்... வெளியானது ரஜினியின் வேட்டையன் பட டிரைலர்
Vettaiyan Trailer : ஹண்டர் வந்துட்டார்... வெளியானது ரஜினியின் வேட்டையன் பட டிரைலர்
Breaking News LIVE OCT 2 :விசிக மாநாட்டில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றம்.!
Breaking News LIVE OCT 2 :விசிக மாநாட்டில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றம்.!
வெள்ள நீரில் தரையிறங்கிய இந்திய விமானப்படையின் ஹெலிகாப்டர்: அதிர்ச்சியை ஏற்படுத்தும் காட்சிகள்.!
வெள்ள நீரில் தரையிறங்கிய இந்திய விமானப்படையின் ஹெலிகாப்டர்: அதிர்ச்சியை ஏற்படுத்தும் காட்சிகள்.!
GST Collection: செப்டம்பர் மாத ஜி.எஸ்.டி.வரி  ரூ.1.73 லட்சம் கோடி வசூல்!
GST Collection: செப்டம்பர் மாத ஜி.எஸ்.டி.வரி ரூ.1.73 லட்சம் கோடி வசூல்!
Thailand Bus Fire: பற்றி எரிந்த பள்ளி பேருந்து..! மழலைகள் உட்பட  23 பேர் உயிரிழப்பு - சரணடைந்த ஓட்டுநர் செய்த தவறு?
Thailand Bus Fire: பற்றி எரிந்த பள்ளி பேருந்து..! மழலைகள் உட்பட 23 பேர் உயிரிழப்பு - சரணடைந்த ஓட்டுநர் செய்த தவறு?
அமைச்சர் பொன்முடியுடன் ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் வாக்குவாதம் - கிராம சபை கூட்டத்தில் சலசலப்பு
அமைச்சர் பொன்முடியுடன் ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் வாக்குவாதம் - கிராம சபை கூட்டத்தில் சலசலப்பு
ரஜினி மனைவியின் மாங்கல்ய பாக்கியத்திற்காக மீனாட்சியம்மன் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கி வழிபாடு
ரஜினி மனைவியின் மாங்கல்ய பாக்கியத்திற்காக மீனாட்சியம்மன் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கி வழிபாடு
Chennai Air Show 2024: சென்னையில் விமானப்படை சாகச நிகழ்ச்சி - நேரில் காண்பது, டிக்கெட் பெறுவது எப்படி?
Chennai Air Show 2024: சென்னையில் விமானப்படை சாகச நிகழ்ச்சி - நேரில் காண்பது, டிக்கெட் பெறுவது எப்படி?
Embed widget