Breaking News Tamil LIVE: ஜனவரி -3 முதல் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுப்பெட்டகம் விநியோகம்
அதிமுக ஆர்ப்பாட்டம்
LIVE
Background
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்ற வேண்டும். பொங்கல் பரிசுத்தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அதிமுகவினர் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஜனவரி -3 முதல் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுப்பெட்டகம் விநியோகம்
ஜனவரி -3 முதல் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுப்பெட்டகம் விநியோகம்
உயிரிழந்த மாணவர்கள் - இழப்பீடு வழங்கிய முதலமைச்சர்
திருநெல்வேலியில் பள்ளி சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்திற்கு10 லட்சம் ரூபாயும், படுகாயமடைந்த மாணவர்களின் குடும்பத்திற்கு மூன்று லட்சம் ரூபாயும் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
இந்தியாவில் 100-ஐ தாண்டிய ஒமிக்ரான் பாதிப்பு
இந்தியாவில் ஒமிக்ரான் வகை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 100-ஐ தாண்டியதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது
நாங்க என்ன வலிமை இல்லாத சிமெண்ட்டா கொடுத்தோம்? - இபிஎஸ்
நெல்லை: தனியார் பள்ளி சுவர் இடிந்து விழுந்து மாணவர்கள் உயிரிழப்பு - தமிழிசை இரங்கல்
திருநெல்வேலியில் உள்ள தனியார் பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்து 2 மாணவர்கள் உயிரிழந்த செய்தி அறிந்து அதிர்ச்சியடைந்தேன்.உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும்,ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன். (1/2)
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiGuv) December 17, 2021