TN Headlines: அடுத்த 4 நாட்களுக்கு கனமழை; சனாதன விவகாரத்தில் ஆ.ராசா சவால்...முக்கிய செய்திகள் இதோ!
TN Headlines Today: தமிழ்நாட்டில் இன்று இதுவரை நடந்த முக்கிய நிகழ்வுகளின் செய்திகளின் தொகுப்பை இங்கே காணலாம்.
- Sanatan Dharma Row: சனாதன விவகாரம் - பொதுவெளியில் விவாதிக்க தயாரா? பா.ஜ.க.-விற்கு எம்.பி.ஆ.ராசா சவால்!
சனாதனம் குறித்து டெல்லியில் விவாதம் நடத்த தயாரா என பா.ஜ.க.-வினருக்கு திமுக எம்.பி ஆ.ராசா கேள்வி எழுப்பியுள்ளார். புதுச்சேரி அரியாங்குப்பம் அருகே உள்ள வீராம்பட்டினத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு சிலை திறப்பு விழா, பொதுக்கூட்டம் நடைபெற்றது. எம்.பி., ஆ.ராசா பங்கேற்று கருணாநிதியின் முழு உருவ சிலையை திறந்து வைத்தார். இந்த பொதுக்கூட்டத்தில் எம்.எல்.ஏ.-க்கள் அனிபால் கென்னடி, செந்தில்குமார், சம்பத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பேசிய ஆ.ராசா, “அகில இந்திய அரசியலில் எப்போதெல்லாம் நெருக்கடி வருகிறதோ அப்போதெல்லாம் கருணாநிதியின் பங்கு அதிகம். மேலும் படிக்க
- TN Rain Alert: தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை.. எந்தெந்த மாவட்டங்களில்? இன்றைய வானிலை நிலவரம்..
06.09.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. 07.09.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர், திருநெல்வேலி மாவட்டங்களின் மலை பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல் மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. மேலும் படிக்க
- TTV Dhinakaran On OPS: ஓபிஎஸ்-ஐ கழற்றி விடவும் தயார்... தேர்தலில் தனித்து போட்டி - டிடிவி தினகரன் பளீச் பதில்
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தஞ்சாவூரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போதும், சனாதனம் தொடர்பான உதயநிதியின் பேச்சு, நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுவது என பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்து பேசிய டிடிவி தினகரன், “சனாதனம் என்றால் என்னவென்று தெரியாமல் அதுதொடர்பாக தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி விளையாட்டாக பேசியுள்ளார். அதேநேரம் அமைச்சர் உதயநிதி தலைக்கு விலை வைப்பது காட்டுமிராண்டித்தனமானது. மேலும் படிக்க
- பாரதம் என பிராந்திய மொழியில் அழைப்பதில் தவறில்லை - கார்த்தி சிதம்பரம்
தஞ்சையில் இன்று கார்த்தி சிதம்பரம் நிருபர்களிடம் கூறியதாவது: நடைமுறையில் குறிப்பாக பிராந்திய மொழியில் பேசும் பொழுது இந்தியாவை பாரதம் என அழைப்பது வழக்கம், அரசியல் சாசனத்தில் பாரதம் என்கிற வார்த்தை ஒரே ஒரு இடத்தில் தான் பேசப்படுகிறது. அதிகாரப்பூர்வமாக நாம் இந்தியா என்று தான் நமது நாட்டை அழைக்கிறோம். President of bharath என அழைப்பிதழ் கொடுக்கப்பட்டுள்ளது. பாரதம் என பயன்படுத்துவதில் தவறில்லை, இந்தியாவை பாரதம் என மாற்றினால் பல்வேறு அசவுகரியங்கள் இருக்கும் ரூபாய் நோட்டுகள் அனைத்தும் பாரதம் என மாற்றப்பட வேண்டும் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா பெயரை மாற்ற வேண்டும். தற்போது பாராளுமன்றம் கூட உள்ளது. மேலும் படிக்க
- Vijay Makkal Iyakkam: அடுத்த டார்கெட் மகளிர் அணிதான்! - தேதி குறித்த விஜய் மக்கள் இயக்கம்!
சென்னை அருகே உள்ள பனையூரில் உள்ள மக்கள் இயக்க தலைமை அலுவகலத்தில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டம் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடைபெற உள்ளது. நடிகர் விஜய் தலைமையில் விஜய் மக்கள் இயக்கம் செயல்பட்டு வருகிறது. இது விரைவில் அரசியல் கட்டியாக மாறலாம் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. ஏற்கனவே உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு விஜய் மக்கள் இயக்கத்தினர் 100-க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்று இருக்கின்றனர். மேலும் படிக்க