TN Headlines Today: விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்.. மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. முக்கியச் செய்திகள்
TN Headlines Today: தமிழ்நாட்டில் இன்று இதுவரை நடந்த முக்கிய நிகழ்வுகளின் செய்திகளின் தொகுப்பை இங்கே காணலாம்.

விநாயகர் சதுர்த்தி - அரசியல் தலைவர்கள் வாழ்த்து
இந்தியா முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்து மிகவும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. பிள்ளையார் சதுர்த்தியை முன்னிட்டு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, தமிழ்நாடு மக்களுக்கு விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளார். இது தொடர்பான அவரது எக்ஸ் பதிவில், “விநாயகர் சதுர்த்தி திருநாள் நல்வாழ்த்துக்கள். விநாயக பெருமான் அனைவருக்கும் ஞானம், வலிமை, வெற்றி, மகிழ்ச்சி, வளம் ஆகியவற்றை வழங்கட்டும்” என குறிப்பிட்டுள்ளார்.மேலும் வாசிக்க..
ஸ்ரீமணக்குள விநாயகர் கோயிலில் சதுர்த்தி விழா!
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு புதுச்சேரி ஸ்ரீ மணக்குள விநாயகர் கோயிலில் காலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். விநாயகர் சதுர்த்தி விழா (திங்கட்கிழமை) நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. புதுச்சேரியிலும் விநாயகர் சதுர்த்தி விழா வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. புதுச்சேரியில் மிகவும் பிரசித்திப்பெற்ற ஸ்ரீ மணக்குள விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி சிறப்பு வழிபாடு காலை 4 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.மேலும் வாசிக்க.
விநாயகர் சதுர்த்தி பாதுகாப்பு பணி
இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா அமைதியான முறையில் கொண்டாடப்படுவதை உறுதி செய்ய தமிழ்நாடு காவல்துறை சார்பாக விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. விநாயகர் சிலைகள் நிறுவும் நாளில் தமிழ்நாடு முழுவதும் 74,000 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். விநாயகர் சிலை ஊர்வல நிகழ்ச்சி முழுவதும் வீடியோ பதிவு செய்யப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட உள்ளது. முக்கியமான ஊர்வலங்களில் கண்காணிப்பு பணிக்காக ட்ரோன்கள் மற்றும் Mobile CCTV கேமராக்கள் உபயோகப்படுத்தப்பட காவலர்களால் தணிக்கை செய்யப்படும்.மேலும் வாசிக்க..
கலைஞர் மகளிர் உரிமை தொகை
தமிழ்நாடு அரசின் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை கிடைக்கப் பெறாதவர்கள், இன்று முதல் இ-சேவை மையங்கள் மூலம் மீண்டும் விண்ணப்பிக்கலாம்.மாநிலம் முழுவதும் விண்ணப்பங்கள் பெறுவதற்காக 35 ஆயிரத்து 925 முகாம்கள் நடத்தப்பட்டன. அதில் 68 ஆயிரத்து 190 தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். அந்த முகாம்களின் முடிவில், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெற ஒரு கோடியே 63 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். இதில், வழ்காட்டு நெறிமுறைகளின் படி தகுதி இல்லாத சுமார் 56 லட்சத்து 50 ஆயிரம் பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. மேலும் வாசிக்க..
அவசரமாக கூடும் காவிரி மேலாண்மை ஆணையம்
காவிரி நீர் பிரச்னை தொடர்பாக அமைச்சர் துரைமுருகன் தலைமையிலான, 14 பேர் அடங்கிய தமிழக எம்.பிக்கள் குழு இன்று மத்திய நீர்வள அமைச்சரை சந்திக்க உள்ளது.காவிரி மேலாண்மை ஆணைய அவசர கூட்டம் இன்று நடைபெற உள்ளது. காணொலி வாயிலாக நடைபெற உள்ள இந்த கூட்டத்தில், தமிழ்நாடு அரசுசார்பில் பங்கேற்கும் அதிகாரிகள் மாநில விவசாயிகளின் நிலை குறித்தும், காவிரி நீரை பெறுவதில் தமிழகத்திற்கு உள்ள உரிமை குறித்தும் எடுத்துரைப்பார்கள் என கூறப்படுகிறது. எனவே, அதுகுறித்து விவாதித்து முடிவு எடுப்பதற்காக காவிரி மேலாண்மை இன்று ஆணையம் அவசரமாக கூட இருக்கிறது.மேலும் வாசிக்க..
விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்
பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிப்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் சுமார் 4 ஆயிரம் இடங்களில் விநாயகர் சிலையை வைத்து வழிப்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்கவும் மக்கள் சிரமமின்றி விநாயகர் சதுத்தியை கொண்டாடவும் சென்னை மாநகரில் 10 ஆயிரம் போலீசாரும், அதே போல் தாம்பரம், ஆவடியில் 10 ஆயிரம் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் வாசிக்க..
வானிலை நிலவரம்
தென்மேற்கு பருவமழை தமிழகத்தில் தீவிரமடைந்துள்ளது மேலும், மேற்குதிசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று 7 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சேலம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம், நாமக்கல் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.மேலும் வாசிக்க..
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

