TN Headlines Today: முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பாட்காஸ்ட் முதல் கனமழை வரை - இன்றைய முக்கியச் செய்திகள்
TN Headlines Today: தமிழ்நாட்டில் இன்று இதுவரை நடந்த முக்கிய நிகழ்வுகளின் செய்திகளின் தொகுப்பை இங்கே காணலாம்.
![TN Headlines Today: முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பாட்காஸ்ட் முதல் கனமழை வரை - இன்றைய முக்கியச் செய்திகள் Tamil Nadu Latest Headlines Today September 04 TN Politics Latest News From ABP Nadu highlight TN Headlines Today: முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பாட்காஸ்ட் முதல் கனமழை வரை - இன்றைய முக்கியச் செய்திகள்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/04/09ff90fb0162b90078612dc80226b9e41693798900941333_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
சனாதனத்தைத்தான் பேசினேன்; பேசுவேன் - அமைச்சர் உதயநிதி
சனாதன தர்மம் விவகாரத்தில் பாஜக வழக்கம்போல் உண்மையை திரித்து பொய்களை பரப்புவதாக, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.பதிலளித்து பேசிய உதயநிதி, ”நான் சரியாக தான் சொன்னேன், வழக்கம் போல அதை மாற்றி, பாஜக பொய் செய்தியை பரப்பு வருகிறது. நேற்று முன் தினம் நடைபெற்ற I.N.D.I.A கூட்டணியின் வெற்றி அவர்களுக்கு பாதிப்பையும், தடுமாற்றத்தையும் கொடுத்திருக்கிறது. அந்த வெற்றியை திசைத்திருப்பவே இப்படி பேசி வருகிறார்கள். ஒட்டுமொத்த இந்தியாவே சனாதனம் குறித்து பேசிக்கொண்டு இருக்கிறது. இன்னமும் பேச வேண்டும். நான் முன்பே சொன்னது போல் நிறைய பேருக்கு வயிற்றெரிச்சல் வந்துள்ளது, இனப்படுகொலை என நான் சொன்னதாக சிலர் பேசுகின்றனர்.மேலும் வாசிக்க..
பல்கலைக்கழக கட்டிடங்களை வாடகைக்கு விடுவது -அன்புமணி ராமதாஸ் ஆவேசம்
சேலம் மாவட்டம் எடப்பாடியில் தனியார் திருமண மண்டபத்தில் வாக்குசாவடி முகவர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு பேசினார்.பெரியார் பல்கலைக்கழகத்தின் அரங்குகள் வாடகைக்கு விடப்படுவது குறித்த சர்ச்சைக்கு பதில் அளித்த அவர், பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தரை மாற்ற வேண்டும். பல்கலைக்கழக கட்டிடங்களை வாடகைக்கு விடுவதற்கு பதில் கல்யாண மண்டபம் நடத்தி விடலாம் என்று பேசினார்.மேலும் வாசிக்க..
வாயால் வடை சுடும் பாஜக; முதலமைச்சர் மு.க ஸ்டாலின்..பாட்காஸ்ட்
அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள சூழலில், மத்தியில் ஆளும் பாஜக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில் தற்போது பெரும் பேசுபொருளாக மாறியிருப்பது ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம்தான். வரும் 18ஆம் தேதி தொடங்க உள்ள நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தில் ஒரே நாடு ஒரே தேர்தலுக்கான மசோதா தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் கடந்த வாரம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இந்தியாவிற்காக பேச பாட்காஸ்ட் தொடங்கப்படும் என அறிவித்திருந்தார். அதன்படி இன்று காலை முதன்முதலில் தனது பாட்காஸ்ட் சிரீஸ் வெளியிட்டுள்ளார்.மேலும் வாசிக்க..
வாரத்தின் முதல் நாள்.. குறைந்ததா காய்கறிகளின் விலை?
ஆசியாவின் மிகப்பெரிய சந்தை என்றழைக்கப்படும் கோயம்பேடு சந்தையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மொத்த விற்பனைக் கடைகள், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சில்லறைக் கடைகள், 850 பழக்கடைகள் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன. மொத்த விற்பனை இரவு 10 மணி முதல் காலை 10 மணி வரையும், சில்லறை விற்பனை காலை 10 மணி முதல் இரவு 10 மணிவரையும் நடைபெறும். இங்கு நாள் ஒன்றுக்கு சுமார் 650க்கும் மேற்பட்ட வாகனங்களும் இயக்கப்பட்டு வருகின்றன.மேலும் வாசிக்க..
5 நாட்களுக்கு வெளுக்கப்போகுது கனமழை
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. நாளை, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.மேலும் வாசிக்க,.
மேட்டூர் அணையின் நிலவரம்
கர்நாடகா மாநிலத்தில் பெய்து வந்த மழை காரணமாக அங்குள்ள அணைகள் நிரம்பி வருகிறது. தற்போது காவிரி கரையோர பகுதிகளில் மழை குறைந்து வருகிறது, இதனால் அங்கிருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்படுகிறது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 5,018 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 6,430 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 8,060 கன அடியாக அதிகரித்துள்ளது. மேலும் வாசிக்க..
தொடங்கும் முன்பே ரத்தான ஓ.பி.எஸ்.சின் புரட்சி பயணம்..!
முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களைச் சந்திக்க இன்று காஞ்சிபுரத்தில் இருந்து புரட்சிப் பயணம் தொடங்கியிருந்த நிலையில் மழை காரணமாக பொதுக்கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக பண்ருட்டி ராமசந்திரன் அறிவித்துள்ளார். இந்த புரட்சி பயணம் மீண்டும் தொடங்கும் என்று பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.மேலும் வாசிக்க..
திருப்பூரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் வெட்டிக்கொலை
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கள்ளக்கிணறு கிராமத்தில் வீட்டின் அருகே மது அருந்திய நபரை தட்டிக்கேட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பெண்கள் உட்பட 4 பேர் அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளனர். ரத்தினாம்பாள், புஷ்பவதி, மோகன் மற்றும் செந்தில் குமார் ஆகியோர் போதை ஆசாமியால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இதனால் அந்த கிராமத்தின் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் வாசிக்க.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)