TN Headlines Today: தமிழ்நாட்டில் தற்போது வரை நடந்தது என்னென்ன..? என்னென்ன..?
TN Headlines Today: தமிழ்நாட்டில் இன்று இதுவரை நடந்த முக்கிய நிகழ்வுகளின் செய்திகளின் தொகுப்பை இங்கே காணலாம்.
TN Headlines Today:
- கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி தொடக்கம்..!
ஏற்காடு கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி இந்த ஆண்டு மே 21-ஆம் தேதி (இன்று) தொடங்கி மே மாதம் 28-ஆம் தேதி வரை 8 நாட்கள் நடைபெற உள்ளது. ஏற்காட்டில் சுற்றுலாப்பயணிகளை மகிழ்விக்கும் வகையில் ஏற்காடு கோடை விழா மற்றும் மலர்க்கண்காட்சி ஆண்டுதோறும் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் இந்த ஆண்டு 46-வது கோடை விழா மற்றும் மலர்க்காட்சியினை 21.05.2023, இன்று மாலை 5 மணிக்கு அமைச்சர்கள் கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், ராமச்சந்திரன் மற்றும் மதிவேந்தன் கலந்துகொண்டு 46-வது ஏற்காடு கோடை விழா மற்றும் மலர்க்கண்காட்சியினை தொடங்கி வைத்து, அரசு நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ளனர். மேலும் வாசிக்க..
- 500 மதுக்கடைகள் மூடல்; அறிவிப்பு மட்டும்தானா? பா.ம.க. கேள்வி!
தமிழ்நாட்டில் 500 மதுக்கடைகள் மூடல் அறிவிப்போடு போனதா என்று கேள்வி எழுப்பியுள்ள பா.ம.க. தலைவர் அன்புமணி, உடனடியாக மதுக்கடைகளை மூட வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். தமிழக அரசு கோரினால் அடுத்த 24 மணி நேரத்தில் இந்த பட்டியலை தயாரித்து வழங்க பாட்டாளி மக்கள் கட்சி தயாராக உள்ளதாகவும் அன்புமணி தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு:
’’தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 5329 மதுக்கடைகளில் 500 கடைகள் மூடப்படும் என்று கடந்த ஏப்ரல் 12-ஆம் நாள் தமிழக சட்டப்பேரவையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் அறிவித்தார். அதன்பின் இன்றுடன் 40 நாட்கள் ஆகும் நிலையில், இன்று வரை 500 மதுக்கடைகளை மூடுவதற்கான அறிகுறிகள் கூட தென்படவில்லை. அதனால், மதுக்கடைகளை மூடும் அறிவிப்பு அறிவிப்பாகவே முடிந்து விடுமோ? என்ற கவலை ஏற்படுகிறது.மேலும் வாசிக்க.
- கள்ளச்சாராயம் விவகாரத்தில் நடவடிக்கை தேவை.. ஆளுநரை சந்தித்த அண்ணாமலை..!
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை, மாநில பாஜக தலைவர் அண்ணாமலை, சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் சந்தித்தனர்.
ஆளுநரை சந்தித்த பாஜகவினர்
இந்த நிலையில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, எம்.எல்.ஏ., நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பாஜகவினர் இன்று ஆளுநர் ஆர்.என்.ரவியை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் சந்தித்தனர். அப்போது கள்ளச்சாரயம் விவகாரத்தில் ஆளுநர் நேரடியாக தலையிட்டு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனவும், அமைச்சர் செந்தில்பாலாஜியை பதவியில் இருந்து நீக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உத்தரவிட வேண்டும் வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர். மேலும் வாசிக்க..
- 11 மாவட்டங்களில் சதமடித்த வெயில்..
தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாக வெப்ப சலனம் காரணமாக ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. ஆனால் அநேக இடங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது.
அதிகபட்ச வெப்பநிலை :
20.05.2023 மற்றும் 21.05.2023: தமிழகத்தில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி முதல் 40 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
குறிப்பு: அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது வெப்ப அழுத்தம் (Heat Stress ) காரணமாக அசௌகரியம் ஏற்படலாம். இதனால் மக்கள் பகல் நேரங்களில் வெளியில் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும் வாசிக்க..
- 13 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகுது மழை...
TN Rain Alert: தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக, இன்று 13 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது,
21.05.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
22.05.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் வாசிக்க..