மேலும் அறிய

TN Headlines Today: இன்றைய நாளில் என்னென்ன நடந்தது? சுடச்சுட 3 மணி முக்கியச் செய்திகள்..!

TN Headlines Today: தமிழ்நாட்டில் இதுவரை நடந்த முக்கிய நிகழ்வுகளின் செய்திகளை கீழே காணலாம்.

தமிழகதத்தில் ஏசி, வாட்டர் ஹீட்டர் உள்ளிட்ட மின்சாதனங்கள் பயன்படுத்தும் வீடுகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக பயன்படுத்தினால் தேவைக்கட்டணம் என்ற பெயரில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகிருந்தது. ஆனால் இந்த தகவல் முற்றிலும் தவறானது என தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீடுகளுக்கு நிலைக் கட்டணம் வசூலிப்பதிலிருந்து10.09.2022 முதல் விலக்கு அளித்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது. நிலைக் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளித்த பின்பு நிலைக் கட்டணம் மீதான அபராதம் என்பது தவறான செய்தியாகும். மேற்கண்ட வரைவு விதிகளின் மீது பொதுமக்களின் கருத்துரைகளை சமர்ப்பிக்கலாம். அவ்வாறு சமர்ப்பிக்கப்படும் கருத்துரைகளை பரிசீலனை செய்து விதிகளின் மீது இறுதி முடிவு செய்யப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வாசிக்க..

பண்பாட்டின் தலைநகரம் மதுரையில் திருவிழாக்களின் திருவிழாவான சித்திரைப் பெருவிழா ஏப்ரல் 23 அன்று மீனாட்சி அம்மன் கோவிலின் கொடியேற்றத்துடன் துவங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

சித்திரை விழாவின் முற்பகுதியில் 12 நாட்கள் நடைபெறும் மீனாட்சி அம்மன் கோயில் நிகழ்வுகளின் மைய விழாவான மீனாட்சி திருக்கல்யாணம் இன்று நடைபெறுகிறது. மதுரையின் அரசி மீனாட்சிக்கும் அவளது நாயகன் சுந்தரேசுவரருக்கும் இன்று காலை திருக்கல்யாணம் (8:35 மணி முதல் 8:59 மணிக்குள்) நடைபெற்றது. மேலும் வாசிக்க..

தமிழ்நாடு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஆடியோ சர்ச்சை குறித்த கேள்விக்கு  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உங்களில் ஒருவன் நிகழ்ச்சியில் விளக்கமளித்துள்ளார். 

உங்களில் ஒருவன் நிகழ்ச்சியில் பிடிஆர் ஆடியோ சர்ச்சை தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு முதலமைச்சர் விளக்கமளித்துள்ளார். அந்நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்விக்கு, ”ஏற்கனவே 2 முறை பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் விளக்கமளித்து விட்டார். மக்களுக்கான பணிகளை செய்யவே எனக்கு நேரம் சரியாக இருக்கிறது. மேலும் இதுகுறித்து பேசி மட்டமான அரசியல் செய்பவர்களுக்கு நான் விளம்பரம் தேடி தர விரும்பவில்லை” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் வாசிக்க.

மழை பெய்ய வாய்ப்புள்ளது - இன்றைய நிலவரம்:

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். நீலகிரி, ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருப்பூர், கரூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில்   ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் வாசிக்க.

கனமழை தொடரும் - சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

மே மாதம் ஆறாம் தேதி ஒட்டி தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல் மேலடுக்கு சுழற்சி உருவாகி அதனை தொடர்ந்து வருகின்ற 7,8 ஆகிய தேதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல இயக்குனர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.  “தமிழ்நாடு பகுதிகளில் தற்பொழுது வளிமண்டலத்தின் கீழடுக்கில் கிழக்கு திசை காற்றும் மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்துள்ளது. 60 இடங்களில் கன மழை பெய்துள்ளது. அடுத்து வரும் இரண்டு தினங்களுக்கு தமிழ்நாடு, புதுவை காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்” என தெரிவித்துள்ளார். மேலும் வாசிக்க.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Assembly: இன்று தொடங்கும் சட்டசபை! என்ன செய்யப்போகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி? இந்த முறையும் வாக் அவுட்டா?
TN Assembly: இன்று தொடங்கும் சட்டசபை! என்ன செய்யப்போகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி? இந்த முறையும் வாக் அவுட்டா?
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சு.வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி! PHONE போட்ட மூர்த்தி! HEALTH REPORTபொன்முடிக்கு செருப்பு மாட்டிவிட்ட நிர்வாகி! மஸ்தான் ரியாக்‌ஷன்ரெய்டில் சிக்கிய கோடிகள்! தலைவலியில் அண்ணாமலை! பற்றவைத்த ஆளுங்கட்சியினர்”அரியணை நோக்கி கனிமொழி” மகளிரணியின் சம்பவம்! ஷாக்கான திமுகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Assembly: இன்று தொடங்கும் சட்டசபை! என்ன செய்யப்போகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி? இந்த முறையும் வாக் அவுட்டா?
TN Assembly: இன்று தொடங்கும் சட்டசபை! என்ன செய்யப்போகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி? இந்த முறையும் வாக் அவுட்டா?
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
Embed widget