TN Headlines Today: அமைச்சராக பதவியேற்ற டிஆர்பி ராஜா.. மாற்றப்பட்ட தமிழ்நாடு அமைச்சரவை.. 3 மணி செய்திகள் இதோ..!
TN Headlines Today: தமிழ்நாட்டில் இதுவரை நடந்த முக்கிய நிகழ்வுகளின் செய்திகளை கீழே காணலாம்.
-
அமைச்சரானார் டி.ஆர்.பி ராஜா.. பதவி பிரமாணம் செய்து வைத்தார் ஆளுநர் ரவி!
தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் நேற்று முன்தினம் பால்வளத்துறை அமைச்சராக இருந்த நாசர் அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இரண்டு முறை அமைச்சரவை துறைகள் மாற்றம் நடந்த நிலையில் முதல்முறையாக அமைச்சர் நீக்கம் செய்யப்பட்டது அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் மன்னார்குடி எம்.எல்.ஏ., டி.ஆர்.பி ராஜா அமைச்சராக பதவியேற்றார். அவருக்கு தொழில்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. இதனிடையே இன்று காலை 10.30 மணிக்கு சென்னை கிண்டியில் ஆளுநர் மாளிகை தர்பார் அரங்கில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி டிஆர்பி ராஜாவுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். மேலும் படிக்க
- நிதி உள்ளிட்ட 5 அமைச்சர்களின் துறைகள் மாற்றம்
தமிழ்நாடு அமைச்சரவையில் 3வது முறையாக துறை ரீதியான மாற்றம் நிகழ்ந்துள்ளது. புதிய அமைச்சராக டிஆர்பி ராஜா பதவியேற்ற நிலையில், அவருக்கு தொழில்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. தங்கம் தென்னரசுவுக்கு நிதித்துறையும், பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு தகவல் தொழிநுட்பத்துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது. பால்வளத்துறை அமைச்சராக மனோ தங்கராஜூம், அமைச்சர் சாமிநாதனுக்கு, கூடுதலாக தமிழ் வளர்ச்சி துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க
- “மாயமானும் மண்குதிரையும் சேர்ந்துள்ளது” - ஓபிஎஸ், டிடிவி இணைப்பு குறித்து இபிஎஸ் கருத்து
மாயமானும், மண்குதிரையும் ஒன்று சேர்ந்துள்ளன என ஓபிஎஸ், டிடிவி இணைப்பு குறித்து எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சில தினங்களுக்கு முன் இவர்கள் இருவரது சந்திப்பும் நடைபெற்றது. அதிமுகவை மீட்க ஓ. பன்னீர்செல்வமும் தானும் இணைந்து செயல்படப் போவதாக டிடிவி தினகரன் தெரிவித்தார். அதேபோல் “கடந்த காலங்களை மறுந்துவிட்டு இருவரும் ஒன்றிணைந்துள்ளோம்" என ஓபிஎஸ் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் படிக்க
- 11 மாவட்டங்களில் வெளுக்கப்போது கனமழை..
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று “மோகா” புயலாக வலுப்பெற்று போர்ட் பிளேயரில் இருந்து சுமார் 510 கிலோ மீட்டர் மேற்கு- தென்மேற்கே நிலைகொண்டுள்ளது. இதனால் நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஈரோடு, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க
- மாநிலக் கல்விக் கொள்கை குழுவில் இருந்து பேரா. ஜவஹர் நேசன் விலகல்: பகீர் பின்னணி இதுதான்!
மாநிலக் கல்விக் கொள்கை உருவாக்கத்தில் இருந்து பேராசிரியர் ஜவஹர் நேசன் விலகி உள்ளார். இதற்கு மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளின் குறுக்கீடு மற்றும் தேசியக் கல்விக் குழு - 2020ன் அடிப்படையில் மாநிலக் கல்விக் கொள்கை வகுக்கத் திட்டமிடப்படுவதையும் காரணமாக அவர் கூறியுள்ளார். மேலும் படிக்க