TN Headlines Today: சேலத்தில் கலைஞர் சிலை... அமித்ஷா பரபரப்பு பேச்சு.. இன்றைய 3 மணி முக்கியச்செய்திகள் ரவுண்டப்!
TN Headlines Today: தமிழ்நாட்டில் இன்று இதுவரை நடந்த முக்கிய நிகழ்வுகளின் செய்திகளின் தொகுப்பை இங்கே காணலாம்.
கலைஞர் சிலை, ஈரடுக்கு நகர பேருந்து நிலையம்... சேலத்தில் இன்று திறந்து வைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மூன்று நாள் சுற்றுப்பயணமாக நேற்று மாலை சேலம் வந்திருந்தார். முதல்வருக்கு சேலம் விமான நிலையத்தில் அமைச்சர்கள் கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், மாவட்ட ஆட்சியர் கார்மேகம், மாநகர மேயர் ராமச்சந்திரன் மற்றும் திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அங்கிருந்து சாலை மார்க்கமாக ஐந்து ரோடு தனியார் திருமண மண்டபம் சேலம் மத்திய, கிழக்கு, மேற்கு மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. மேலும் படிக்க
சென்னை வந்தார் அமைச்சர் அமித்ஷா.... மின் தடையால் பரபரப்பான விமான நிலையம்! நள்ளிரவில் நடந்தது என்ன?
மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சி அமைந்து 9 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடக்க உள்ள நிலையில் அதற்கான பணிகளில் பாஜக தீவிரமாக களம் கண்டுள்ளது. அந்த வகையில் பாஜக ஆட்சியின் 9 ஆண்டுகால சாதனைகளை விளக்கும் வகையில் ஒரு மாத காலம் நாடு முழுவதும் பொதுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த மே 30 ஆம் தேதி தொடங்கிய இந்த நிகழ்வு ஜூன் 30 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மேலும் படிக்க
‘கருணாநிதி வாழ்க்கையோடு பின்னி பிணைந்தது சேலம்’ - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
சேலத்துக்கும் கருணாநிதிக்குமான நட்பு என்பது ஒரு அன்பான குடும்ப நட்பாகும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா தி.மு.க.வினரால் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சேலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக 3 நாள் சுற்றுப்பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று அங்கு சென்றார். மேலும் படிக்க
மனைவியை மானபங்கம் செய்ததாக ராணுவ வீரர் புகார்... போலீஸ் விசாரணையில் வெளியான உண்மை!
தன்னுடைய மனைவியை தாக்கியதாக திருவண்ணாமலையைச் சேர்ந்த ராணுவ வீரர் ஜம்மு காஷ்மீரில் இருந்து கோரிக்கை விடுத்த சம்பவத்தில் போலீசார் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தின் ஆரணி அருகேயுள்ள படவேடு கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபாகரன். இவர் ராணுவ வீரராக உள்ளார். இவரது மனைவி கீர்த்தி படவேடு ஸ்ரீ ரேணுகாம்பாள் ஆலயம் எதிரில் பேன்ஸி ஸ்டோர் நடத்தி வந்துள்ளார். மேலும் படிக்க
வரும் காலங்களில் ஒரு தமிழரையாவது பிரதமராக்க உறுதி எடுப்போம் -அமித்ஷா
தமிழர்கள் பிரதமராகும் வாய்ப்பை தமிழ்நாடு இரண்டு முறை தவறவிட்டுள்ளதாகவும் அதற்கு திமுக தான் காரணம் என்றும் அமித்ஷா தெரிவித்துள்ளார். சென்னை கோவிலம்பாக்கத்தில் நடைபெற்று வரும் பாஜக ஆலோசனை கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா பேசி வருகிறார். அதில், வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 25 தொகுதிகளில் வெற்றி பெற இலக்கு நிர்ணயித்துள்ளதாக தெரிவித்தார். மேலும் படிக்க