TN Headlines: தமிழ்நாட்டில் இதுவரை நடந்தது என்ன? முக்கிய செய்திகளின் ரவுண்டப் இதோ...!
TN Headlines Today: தமிழ்நாட்டில் இன்று இதுவரை நடந்த முக்கிய நிகழ்வுகளின் செய்திகளின் தொகுப்பை இங்கே காணலாம்.
- Minister Ponmudi: பாரத நாட்டின் பண்பாடு என தலைப்பு இருந்ததால் ஆதங்கமடைந்த அமைச்சர் பொன்முடி
திருக்கோவிலூரில் நடைபெற்ற கபிலர் நிறைவு விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் பொன்முடி, பட்டிமன்ற தலைப்பு பாரதநாட்டின் பண்பாடு என இருந்ததால் ஆதங்கமாக பேசினார். பெயருக்கு பண்பாட்டுக் கழகம் வைத்து நடத்தாமல் மாணவர்களுக்கு தெரியப்படுத்துங்கள் என ஆவேசமடைந்தார். கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் கபிலர் பண்பாட்டு கழகத்தின் சார்பில் 46 ஆவது ஆண்டு கபிலர் பண்பாட்டு விழா கொண்டாடப்பட்டது. மேலும் படிக்க https://tamil.abplive.com/news/politics/minister-ponmudi-was-offended-because-the-title-was-the-culture-of-india-tnn-130821
- DMDK: நாடாளுமன்றத்தேர்தலில் தேமுதிக யாருடன் கூட்டணி: அதிரடியாக அறிவித்த பிரேமலதா விஜயகாந்த்
சென்னை கோயம்பேடு தலைமை கழகத்தில் தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பிரேமலதா விஜயகாந்த் தலைமை தாங்கினார். அப்போது அனைத்து பெண்களுக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் “தேமுதிக இப்போது யாருடனும் கூட்டணி இல்லை. கூட்டணியில் இல்லாததாலேயே பாஜக கூட்டணிக்கு அழைக்கவில்லை. மேலும் படிக்க https://tamil.abplive.com/news/tamil-nadu/dmdk-premalatha-vijayakanth-speech-about-parliament-election-alliance-130793
- சென்னை மெட்ரோவில் உள்ள 150-க்கும் மேற்பட்ட சிசிடிவிக்கள் இயங்கவில்லை? நிர்வாகத்தின் ரியாக்ஷன்....
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும், வெளி ஊரிலிருந்து வரும் பயணிகளுக்கும் மெட்ரோ ரயிலில் பயணிக்கும் போது பாதுகாப்பான போக்குவரத்து வசதியை அளித்து வருகிறது. இது மெட்ரோ பயணிகளிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும் முன்பைக் காட்டிலும் தற்போது மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மேலும் படிக்க https://tamil.abplive.com/news/tamil-nadu/it-has-been-reported-that-more-than-150-cctvs-in-chennai-metro-are-not-working-130777
- ED Raid: அமலாக்கத்துறை 4 முறை சம்மன் அனுப்பியும் நோ-ரெஸ்பான்ஸ்; 4 வாரம் கால அவகாசம் கேட்கும் அமைச்சரின் சகோதரர்
அமலாக்கத்துறை முன்பு ஆஜராக 4 முறை சம்மன் அனுப்பியும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் ஆஜராகமல் உள்ளார் என கூறப்படுகிறது. இந்நிலையில் அவருக்கு இதய நோய் இருப்பதால் ஆஜராக மேலும் 4 வாரம் அவகாசம் கோரியுள்ளார் என அவரது வழக்கறிஞர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்காவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்க அமலாக்கத்துறை தீவிரம் காட்டி வரும் நிலையில் அசோக்குமார் தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டுள்ளது. மேலும் படிக்க https://tamil.abplive.com/news/tamil-nadu/enforcement-department-sent-summons-4-times-but-did-not-appear-minister-s-younger-brother-ashok-kumar-is-asking-for-4-weeks-time-130762
- Kalaignar Womens Assistance Registration: கலைஞர் உரிமைத் தொகை விண்ணப்ப பதிவு முகாம்: தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்