TN Headlines Today: இதுவரை தமிழ்நாட்டில் நடந்தது என்ன? முக்கிய செய்திகளின் ரவுண்டப் இதோ!
TN Headlines Today: தமிழ்நாட்டில் இன்று இதுவரை நடந்த முக்கிய நிகழ்வுகளின் செய்திகளின் தொகுப்பை இங்கே காணலாம்.
- TN Rain Alert: நாளை 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. எந்தெந்த மாவட்டங்களில்? இன்றைய குளுகுளு வானிலை நிலவரம் இதோ..
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, அடுத்த 2 நாட்களுக்கு 11 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. 09.08.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 10.08.2023 மற்றும் 11.08.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் படிக்க
- செந்தில் பாலாஜியின் தம்பி வீட்டில் களமிறங்கிய அமலாக்கத்துறை.. புது பங்களாவில் புகுந்து அதிரடி சோதனை..!
கரூரில் அமைச்சர் செந்தில்பாலாஜியின் தம்பி அசோக் குமார் கட்டி வரும் பங்களா வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். கரூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் ராம் நகர் பகுதியில் அமைந்துள்ள அமைச்சர் செந்தில்பாலாஜியின் தம்பி அசோக்குமார் கட்டி வரும் பிரம்மாண்ட பங்களா வீட்டில் இரண்டு வாகனங்களில் வந்த அதிகாரிகள் துப்பாக்கி ஏந்திய மத்திய துணை ராணுவ படை வீரர்கள் பாதுகாப்புடன் சோதனையை தொடங்கியுள்ளனர். இந்த வீட்டில் கடந்த இரண்டு மாதத்துக்கு முன்பு வருமானவரித்துறை அதிகாரிகள் முதன்முறையாக சோதனையை தொடங்கினர். மேலும் படிக்க
- CM Stalin: அடுத்தடுத்து அடித்து தூள் கிளப்பும் அரசுப்பள்ளி மாணவர்கள்: பெருமிதம் கொள்ளும் முதல்வர் மு.க.ஸ்டாலின்
சிறிய உதவி கிடைத்தாலும் அரசுப்பள்ளி மாணவர்கள் அடித்து தூள் கிளப்புவார்கள் என்று முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். நாட்டின் முதன்மையான உயர்கல்வி நிறுவனங்களுக்கு தமிழ்நாட்டிலிருந்து செல்லும் அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவிற்கான எண்ணிக்கையில் இந்த ஆண்டு அதிகரித்துள்ளது. தலைசிநிறந்த நிறுவனங்களுக்குச் செல்லும் மாணவர்களுக்கான பாராட்டு விழா தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் தற்போது நடைபெற்று வருகிறது. மேலும் படிக்க
- Latest Gold Silver Rate: தொடர்ந்து குறையும் தங்கத்தின் விலை.. ஒரு சவரன் எவ்ளோ தெரியுமா? இன்றைய நிலவரம் இதோ..
இன்று (ஆகஸ்ட் 9 ஆம் தேதி) சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 80 குறைந்து ரூ. 44,240 ஆகவும் 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து ரூ.5,530 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 24 காரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 48,800 ஆகவும் கிராமுக்கு ரூ. 6,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் படிக்க
- “அடுத்த ரெய்டு அமைச்சர் சேகர் பாபு வீட்டில் தான்; இதற்கு இந்து வெறியர்தான் வேண்டும்” - ஹெச்.ராஜா
திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் இந்து முன்னனி கட்சி சார்பாக இஸ்லாமிய, கிறிஸ்தவர்களுக்கு தொடர்ந்து ஆதரவாகவும், இந்துக்களுக்கு விரோதமாகவும் செயல்பட்டு வருவதாக கூறி திருச்சி மாவட்ட அரசு நிர்வாகத்தை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தலைமை தாங்கினார். பின்பு நிர்வாகிகள் மத்தியில் உரையாற்றிய அவர், “திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் கிழக்கு வாசல் கோபுரத்தின் சுவர் இடிந்து விழுந்தது தொடர்பாக தமிழ்நாடு இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர் பாபு , மற்றும் அமைச்சர் கே.என். நேரு ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். அப்போது வீட்டில் உள்ள காரை பெயர்ந்து விழுவது போல் இங்கு விழுந்துள்ளது. மேலும் படிக்க