TN Headlines Today: சிலிண்டர் விலை குறைப்பு.. சீமானை விமர்சித்த அண்ணாமலை.. இன்றைய முக்கியச் செய்திகள் ரவுண்டப்!
TN Headlines Today: தமிழ்நாட்டில் இன்று இதுவரை நடந்த முக்கிய நிகழ்வுகளின் செய்திகளின் தொகுப்பை இங்கே காணலாம்.
TN Headlines Today:
’சீமான் எங்கு போட்டியிட்டாலும் தோற்பார்.. - அண்ணாமலை காரசார விமர்சனம்..!
கோவை பேரூர் பகுதியில் நடைபெற்ற நொய்யல் திருவிழாவில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு காவடி ஆட்டம் ஆடினார். திமுக ஊழல் பட்டியலை பொருத்தவரை ஒரு முறை நேரடியாக வழங்கினோம். திமுக மீது மட்டும் பாஜக ஊழல் பட்டியல் வெளியிடுகிறது என்று குற்றம் சாட்டும் சீமான், அவரே அதிமுக ஊழல் பட்டியலை வெளியிடட்டுமே? நாங்கள் ஊழல் பட்டியலை வெளியிட்டு பேசுகிறோம்.
அதில் குற்றம் குறைகள் சொல்லலாம். ஆனால் சீமான் ஏதாவது வெளியிட்டுள்ளாரா? என்பது தான் எங்களுடைய கேள்வி. சீமான் எங்கு வேண்டுமானாலும் போட்டியிட்டு கொள்ளட்டும். அவர் போட்டியிட்டு தோற்க தானே போகிறார். அவர் வாய் உள்ளது எனப் பேசுகிறார். சீமான் மீது எனக்கு மதிப்புள்ளது. மோடி வாரணாசியில் போட்டியிட்டு அத்தொகுதியையே மாற்றி விட்டார். இந்தியாவினுடைய மோசமான 112 மாவட்டத்தில் ராமநாதபுரம் ஒன்றாக உள்ளது. அதே போல தான் விருதுநகரும் உள்ளது. மேலும் வாசிக்க..
792 கன அடியாக குறைந்த நீர்வரத்து..
கர்நாடகா மாநிலத்தில் பெய்து வந்த மழை காரணமாக அங்குள்ள அணைகள் நிரம்பி வருகிறது. தற்போது காவிரி கரையோர பகுதிகளில் மழை குறைந்து வருகிறது, இதனால் அங்கிருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்படுகிறது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 1,024 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 2,031 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 792 கன அடியாக குறைந்துள்ளது. மேலும் வாசிக்க..
அமலுக்கு வந்தது சிலிண்டர் விலை குறைப்பு..
நாடு முழுவதும் வீட்டு உபயோக கேஸ் சிலிண்டரின் விலை 200 ரூபாய் குறைக்கப்பட்டுள்ள நிலையில் பிரதமர் மோடி இதுதொடர்பாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்நிலையில் பிரதமர் மோடி சிலிண்டர் விலை குறைப்பு குறித்து ட்விட்டர் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ரக்ஷா பந்தன் பண்டிகை நம் குடும்பத்தில் மகிழ்ச்சியை அதிகரிக்கும் நாள். அதேபோல் எரிவாயு விலை குறைப்பு எனது குடும்பத்தில் உள்ள சகோதரிகளின் வசதியை அதிகரித்து அவர்களின் வாழ்க்கையை எளிதாக்கும். என்னுடைய ஒவ்வொரு சகோதரியும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும், ஆரோக்கியமாக இருக்க வேண்டும், மகிழ்ச்சியாக இருக்க வேண்டும், இதுவே கடவுளின் என் விருப்பம்” என தெரிவித்துள்ளார். மேலும் வாசிக்க..
காளி கோயிலில் நள்ளிரவில் பூஜை செய்ய வந்த சாமியார்
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த பெருங்காப்பூர் கிராமத்தில் வனப்பகுதியை ஒட்டி உள்ள மலை அடிவார மாந்தோப்பு பகுதியில் காளி கோயில் அமைந்துள்ளது.இந்த காளி கோயிலில் அமாவாசை மற்றும் பெளர்ணமி தினத்தில் நடைபெறும் பூஜையில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வது வழக்கம்.திருமலை தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சாமியார் இஸ்தானந்தா வயிற்றில் குத்தியதில் குடல் சரிந்து சாமியார் மயங்கி விழுந்ததாகவும் அவர் இறந்துவிட்டார் என நினைத்து சாமியார் செல்போனை எடுத்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டதாகவும் திருமலை போலீசில் வாக்கு மூலம் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து திருமலை மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்த செய்த சத்தியமங்கலம் காவல்துறையினர் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.மேலும் வாசிக்க.
'முடியாது.. 3 மாசம்தான் டைம்..' எச்.ராஜாவிற்கு எதிரான வழக்குகளை தள்ளுபடி
பா.ஜ.க.வின் முக்கிய தலைவர்களில் ஒருவர் எச்.ராஜா. சர்ச்சை பேச்சு, சர்ச்சை கருத்துக்கள் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர். பெரியார் சிலையை உடைப்பேன் என்றும், தி.மு.க. எம்.பி. கனிமொழி பற்றி தரக்குறைவாக இவர் பேசியபோது இவருக்கு கடும் கண்டனங்களும், இவரை கைது செய்ய வேண்டும் என்ற கோஷங்களும் வலுவாக எழுந்தது. பல்வேறு காவல் நிலையங்களில் இவருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது அறநிலையத்துறை அதிகாரிகள் தொடர்பான அவதூறு வழக்கை ஈரோடு நீதிமன்றத்தில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவிட்டார். பெரியார் சிலை உடைப்பு தொடர்பான 3 வழக்குகளையும் சென்னை சிறப்பு நீதிமன்றத்திற்கும், கனிமொழி குறித்த அவதூறு பேச்சு தொடர்பான வழக்கை சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றியும் உத்தரவிட்டார். மாற்றப்பட்ட வழக்குகள் அனைத்தையும் 3 மாதத்தில் விசாரித்து முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.மேலும் வாசிக்க..
24 ஆயிரம் கனஅடி நீர் கோரிக்கை நிராகரிப்பு
காவிரியில் தமிழ்நாட்டிற்கு விநாடிக்கு 5 ஆயிரம் கனஅடி நீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடகவிற்கு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு சார்பில் 24 ஆயிரம் கனஅடி நீர் திறக்க வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று அதாவது ஆகஸ்ட் 28ஆம் தேதி நடைபெற்ற ஒழுங்காற்று குழுவின் ஆலோசனைக் கூட்டதிலும் இதே முடிவுதான் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் இந்த உத்தரவும் அடுத்த 15 நாட்களுக்குத்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
விழுப்புரம் மாவட்டத்தில் விநாயகர் சிலை தயாரிக்கும் பணி தீவிரம்
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள ஓமிப்போர், கிளப்பாக்கம், மற்றும் அய்யூர் அகரம், அய்யங்கோவில்பட்டு, சிந்தாமணி, வளவனூர், திருவாமாத்தூர், பனையபுரம், மடப்பட்டு உள்ளிட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் தயாரிப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணியில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.மேலும் வாசிக்க.