TN Headlines: ரூ.50,000 தொட்ட தங்கம் விலை! 100 நாள் வேலை திட்டத்திற்கான ஊதியம் உயர்வு - முக்கிய செய்திகள்
TN Headlines: தமிழ்நாட்டில் இன்று நடந்த முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.
- CJI Chandrachud: ”அச்சுறுத்தலில் நீதித்துறை” - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதிய 600 வழக்கறிஞர்கள்
மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே மற்றும் இந்திய பார் கவுன்சில் தலைவர் மனன் குமார் மிஷ்ரா உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த, 600-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் சேர்ந்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளனர். கடிதத்தின் படி, ”நீதித்துறை செயல்முறைகளைக் கையாளவும், நீதிமன்றத் தீர்ப்புகளில் செல்வாக்கு செலுத்தவும், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் மற்றும் அரசியல் நிகழ்ச்சி நிரல்களால் நீதித்துறையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தவும் முயற்சிக்கும் பிரிவினருக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் படிக்க
- MGNREGA Scheme Salary: 100 நாள் வேலை திட்டத்திற்கான ஊதியம் உயர்வு - தமிழ்நாட்டில் இனி ஒரு நாளைக்கு எவ்வளவு தெரியுமா?
தமிழ்நாட்டில் தற்போது நாள் ஒன்றிற்கு 294 ரூபாய் ஊதியமாக வழங்கப்பட்டு வரும் நிலையில், இனி நாள் ஒன்றிற்கு 319 ரூபாய் ஊதியமாக வழங்கப்படும் என மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மாநில வாரியாக இந்த ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது. புதுச்சேரியிலும் இனி நாள் ஒன்றிற்கு 319 ரூபாய் ஊதியமாக வழங்கப்பட உள்ளது. மேலும் படிக்க
- Lok Sabha Election 2024: கரூரில் வித்தியாசமான முறையில் வாக்கு சேகரித்த காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி
கரூரில் திறந்த வேனில் பிரச்சாரம் செய்த ஜோதிமணி ரூ.44 கோடி மதிப்பில் தேசிய நெடுஞ்சாலையில் பாலங்கள் அமைப்பதற்கான டெண்டர் நோட்டீஸ் நகலை காண்பித்து வாக்கு சேகரித்தார். தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 3000 உயிர் பலி ஏற்பட்டுள்ளதாகவும், அதை கருத்தில் கொண்டு தேசிய நெடுஞ்சாலைகளில் பாலம் அமைப்பதற்காக பாராளுமன்றத்தில் கடுமையாக போராடியதாக தெரிவித்தார். தொடர்ந்து பாலம் அமைப்பதற்கான டெண்டர் நோட்டீஸ் நகலை பெண்களுக்கு வழங்கி வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டார். மேலும் படிக்க
- Latest Gold Silver Rate: புதிய உச்சம்.. ரூ.50,000 தொட்ட தங்கம் விலை.. விழி பிதுங்கும் மக்கள்..
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 அதிகரித்து ரூ. 50,000 -ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.35 அதிகரித்து ரூ.6,250 விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.53,760 ஆகவும், கிராம் ஒன்று ரூ.6,720 ஆகவும் விற்பனையாகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.80.50 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, ஒரு கிலோ வெள்ளி ரூ.80,500 க்கு விற்பனையாகிறது. மேலும் படிக்க
- "பாஜக அலுவலகமாக மாறிவிட்ட தேர்தல் ஆணையம்" விடுதலை சிறுத்தைகள் கட்சி விமர்சனம்!
நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கு இன்னும் 22 நாள்களே உள்ளது. இப்படிப்பட்ட சூழலில், தங்களுக்கான சின்னத்தை பெறுவதில் அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள் முனைப்பு காட்டி வருகின்றன. அந்த வகையில், பானை சின்னத்தை பெற விடுதலை சிறுத்தைகள் கட்சி முயற்சி மேற்கொண்டது. கடந்த இரண்டு தேர்தல்களில், விடுதலை சிறுத்தைகள் கட்சி பானை சின்னத்தில் போட்டியிட்டது. எனவே, அதே சின்னத்தை பெற அக்கட்சி முனைப்பு காட்டியது. மேலும் படிக்க