வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது இஸ்ரோவின் 100வது ராக்கெட்! என்ன ஸ்பெஷல்!
2,250 கிலோ எடையுள்ள NVS – 02 செயற்கைக்கோள் தரை, கடல், வான்வழி போக்குவரத்தை கண்காணித்து பேரிடர் காலங்களில் துல்லியத் தகவல்களை தெரிவிக்கும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.
![வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது இஸ்ரோவின் 100வது ராக்கெட்! என்ன ஸ்பெஷல்! ISRO is set to launch its 100th mission, the NVS-02 navigation satellite aboard the launch vehicle GSLV-F15 from Sriharikota in Andhra Pradesh at 6.23 am today. வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது இஸ்ரோவின் 100வது ராக்கெட்! என்ன ஸ்பெஷல்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/01/29/d34fd03eb0d67072eb5590665cd1e6ff1738112310340333_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
இஸ்ரோவின் 100வது ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இஸ்ரோவின் 100வது ராக்கெட்டான GLSV F15, இன்று காலை 6.23 மணிக்கு NVS – 02 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்துள்ளது. சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து இந்த ராக்கெட் ஏவப்பட்டுள்ளது.
2,250 கிலோ எடையுள்ள NVS – 02 செயற்கைக்கோள் தரை, கடல், வான்வழி போக்குவரத்தை கண்காணித்து பேரிடர் காலங்களில் துல்லியத் தகவல்களை தெரிவிக்கும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. எவிஎஸ் செயற்கை கோளில் எல்.1, எல்.5, எஸ் பெண்ட் டிரான்ஸ்பாண்டர்கள் உள்ளன.
#WATCH | Tirupati, Andhra Pradesh: ISRO launchs its 100th mission, the NVS-02 navigation satellite aboard the launch vehicle GSLV-F15 from Sriharikota in Andhra Pradesh at 6.23 am today.
— ANI (@ANI) January 29, 2025
(Source: ISRO) pic.twitter.com/n5iY9N8N0p
உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரான அனு கடிகாரம் உட்பட பல்வேறு மேம்பட்ட சாதனங்கள் என்விஎஸ் செயற்கைகோளில் உள்ளன. என்விஎஸ் செயற்கைக்கோள் 10 ஆண்டுகள் செயல்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.
NVS-02 என்பது NVS தொடரின் இரண்டாவது செயற்கைக்கோள் ஆகும். இது இந்தியாவின் இந்தியாவின் நேவிகேஷன் வித் இந்தியன் கான்ஸ்டலேஷன் தொழில்நுட்பத்தின் ஒரு பகுதியாகும். இந்த செயற்கைகோள் இந்திய பயனர்களுக்கு துல்லியமான நிலை, வேகம் மற்றும் நேர (PVT) சேவையை வழங்க வடிவமைக்கப்பட்ட ஒரு சுயாதீன பிராந்திய வழிசெலுத்தல் செயற்கைக்கோள் அமைப்பாகும். அதோடு, இந்திய நிலப்பரப்புக்கு அப்பால் சுமார் 1500 கி.மீ தூரம் பரப்பளவிலான பயனர்களுக்கும் இந்த சேவையை வழங்கும். புதிய NVS-02 செயற்கைக்கோள் L1 அதிர்வெண் பட்டையை ஆதரிப்பது போன்ற புதிய அம்சங்களுடன் வருகிறது, இது அதன் சேவைகள் மற்றும் நம்பகத்தன்மையை மேம்படுத்தும்.
அதன்படி, NavIC இரண்டு வகையான சேவைகளை வழங்கும், அதாவது ஸ்டாண்டர்ட் பொசிஷனிங் சர்வீஸ் (SPS) மற்றும் Restricted Service (RS). NavIC இன் SPS ஆனது 20 மீட்டருக்கும் அதிகமான நிலைத் துல்லியத்தையும், சேவைப் பகுதியில் 40 நானோ விநாடிகளுக்கு மேல் நேரத் துல்லியத்தையும் வழங்குகிறது
அப்துல்கலாம் இயக்குநராக இருந்தபோது ஆகஸ்ட் 10, 1979 அன்று ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சாட்டிலைட் லாஞ்ச் வெஹிக்கிள் (SLV) எனப்படும் முதல் ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இன்று 100வது ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது.
தற்போது வரை இந்தியா 66 பிஎஸ்எல்வி, 16 ஜிஎஸ்எல்வி, 7 எல் வஎம்3 , 4 எஎஸ்எல்வி, 4 எஸ்எல்வி மற்றும் 3 எஸ் எஸ்எல்வி ராக்கெட்டுகள் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)