MGNREGA Scheme Salary: 100 நாள் வேலை திட்டத்திற்கான ஊதியம் உயர்வு - தமிழ்நாட்டில் இனி ஒரு நாளைக்கு எவ்வளவு தெரியுமா?
MGnrega Scheme Salary: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், அதாவது 100 நாள் வேலை திட்டத்திற்கான ஊதியத்தை மாநில வாரியாக மத்திய அரசு உயர்த்தியுள்ளது.
MGnrega Scheme Salary: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், அதாவது 100 நாள் வேலை திட்டத்திற்கான ஊதியத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது.
100 நாள் வேலை திட்ட ஊதியம் உயர்வு:
அதன்படி, தமிழ்நாட்டில் தற்போது நாள் ஒன்றிற்கு 294 ரூபாய் ஊதியமாக வழங்கப்பட்டு வரும் நிலையில், இனி நாள் ஒன்றிற்கு 319 ரூபாய் ஊதியமாக வழங்கப்படும் என மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மாநில வாரியாக இந்த ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது. புதுச்சேரியிலும் இனி நாள் ஒன்றிற்கு 319 ரூபாய் ஊதியமாக வழங்கப்பட உள்ளது. நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான, முதற்கட்ட வாக்குப்பதிவு வரும் 19ம் தேதி நடைபெற உள்ள நிலையில் 100 நாள் வேலை திட்டத்திற்கான ஊதியம் தற்போது உயர்த்தப்பட்டுள்ளது.
The Centre notifies the latest revision in MGNREGA wages pic.twitter.com/gcq2mrFWn7
— ANI (@ANI) March 28, 2024
மாநில வாரிய ஊதிய உயர்வு:
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. அதன்படி, மத்திய, மாநில அரசுகள் வாக்காளர்களை கவரும் விதமாக எந்தவொரு நலத்திட்டங்களையும் அறிவிக்கக் கூடாது. அப்படி அறிவித்தார் அது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி குற்றமாகும். அப்படி செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் கடுமையாக எச்சரித்துள்ளது. இந்நிலையில் தான், ஊதிய உயர்வானது கடந்த பிப்ரவரி 26ம் தேதி முதலே அமலுக்கு வந்துள்ளதாகா, மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பின்படி, மாநில வாரியாக தற்போது பின்வரும் ஊதிய விவரங்கள் தான் பின்பற்றப்படுகிறது. மத்திய அரசின் இந்த ஊதியத்தை உயர்த்தும் நடவடிக்கை பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
வரிச எண் | மாநில & யூனியன் பிரதேசங்கள் | புதிய ஊதிய விவரம் |
1 | ஆந்திர பிரதேசம் | ரூ.300 |
2 | அருணாச்சல பிரதேசம் | ரூ.234 |
3 | அசாம் | ரூ.249 |
4 | பீகார் | ரூ. 245 |
5 | சத்தீஸ்கர் | ரூ.243 |
6 | கோவா | ரூ.356 |
7 | குஜராத் | ரூ.280 |
8 | ஹரியானா | ரூ.374 |
9 | இமாச்சல பிரதேசம் | ரூ.236 - ரூ.295 |
10 | ஜம்மு & காஷ்மீர் | ரூ.259 |
11 | லடாக் | ரூ.259 |
12 | ஜார்கண்ட் | ரூ.245 |
13 | கர்நாடகா | ரூ.349 |
14 | கேரளா | ரூ.346 |
15 | மத்திய பிரதேசம் | ரூ.243 |
16 | மகாராஷ்டிரா | ரூ.297 |
17 | மணிப்பூர் | ரூ.272 |
18 | மேகாலயா | ரூ.254 |
19 | மிசோரம் | ரூ.266 |
20 | நாகாலாந்து | ரூ.234 |
21 | ஒடிசா | ரூ.254 |
22 | பஞ்சாப் | ரூ.322 |
23 | ராஜஸ்தான் | ரூ.266 |
24 | சிக்கிம் | ரூ.249 |
25 | தமிழ்நாடு | ரூ.319 |
26 | தெலங்கானா | ரூ.300 |
27 | திரிபுரா | ரூ.242 |
28 | உத்தரபிரதேசம் | ரூ.237 |
29 | உத்தராகண்ட் | ரூ.237 |
30 | மேற்குவங்கம் | ரூ.250 |
31 | அந்தமான் & நிகோபர் | ரூ.329 - ரூ.347 |
32 | டையூ & டாமன் | ரூ.324 |
33 | லட்சத்தீவு | ரூ.315 |
34 | புதுச்சேரி | ரூ.319 |