மேலும் அறிய

BJP TN Leader Annamalai?: பாஜக தமிழ்நாடு தலைவராக மீண்டும் அண்ணாமலையா.? ஓரிரு நாட்களில் வெளியாகும் அறிவிப்பு...

பாஜகவின் அடுத்த தமிழ்நாடு தலைவர் யார் என்ற சஸ்பென்ஸ் தொடர்ந்துகொண்ட இருக்கும் நிலையில், இந்த மாத இறுதியில் அது குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என கூறப்படுகிறது.

பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலையின் பதவிக்காலம் முடியும் நிலையில், அடுத்த தலைவர் யார் என்ற கேள்வி தீவிரமடைந்துள்ளது. அண்ணாமலையே தலைவராக தொடர்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தலைவர் ரேஸில் சீனியர்களும் குதித்ததால், போட்டி சூடுபிடித்தது. இந்நிலையில், இந்த மாத இறுதியில் அடுத்த தலைவர் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரேஸில் உள்ள தலைவர்கள் யார்..யார்.?

பாஜக தமிழ்நாடு அடுத்த தலைவருக்கான போட்டியில், முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மூத்த தலைவர்கள் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் ஆகியோர் களத்தில் உள்ளனர். இவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பகுதியில் பலம் இருக்கிறது. தமிழ்நாட்டில் பாஜகவின் வளர்ச்சிக்கு வித்திட்ட வகையில், தமிழிசைக்கு மக்கள் மனதில் ஒரு தனி இடம் உண்டு. தென் மாவட்டங்களை பொறுத்தவரை, நயினார் நாகேந்திரனுக்கு நல்ல பலம் உள்ளது. கொங்கு மண்டலத்தில் வானதி சீனிவாசனின் கை ஓங்கும் என்பதில் சந்தேகமில்லை.

பாஜக தேர்தல் பொறுப்பாளர் கிஷன் ரெட்டி வருகை

இது ஒருபுறமிருக்க, பாஜக தமிழ்நாடு தலைவரை தேர்ந்தெடுக்கும் பொறுப்பு, பாஜக தேர்தல் பொறுப்பாளர் கிஷன் ரெட்டியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவர் இங்கு வந்து, பல்வேறு தரப்புகளுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தி, அடுத்த தலைவர் குறித்து தலைமையிடம் தெரிவித்து, பின்னர் அறிவிப்பை வெளியிடுவார் என தெரிகிறது. அண்ணாமலை மீது தமிழ்நாடு பாஜகவில் உள்ள மூத்த தலைவர்கள் அதிருப்தியில் உள்ளதால், தலைவரை தேர்ந்தெடுப்பது, கிஷன் ரெட்டிக்கு சற்று சிரமமான வேலையாகவே இருக்கும் என தெரிகிறது.

அண்ணாமலைக்கே மீண்டும் பொறுப்பு.?

ஒரு பக்கம் இப்படியெல்லாம் பேச்சு இருக்கும் சூழலில், ஒருசிலரோ, அண்ணாமலைக்கே தலைவர் பதவியை மீண்டும் வழங்கும் மனநிலையில் தலைமை இருப்பதாக கூறுகிறார். ஆனால், அண்ணாமலை தலைவராகும் பட்சத்தில், அதிமுக உடனான கூட்டணி கேள்விக்குறியாக மாறிவிடும். ஏற்கனவே கூட்டணியிலிருந்து அதிமுக பிரிந்ததற்கு அண்ணாமலையின் அதிகப்பிரசங்கித்தனம்தான் காரணம் என்றும் கூறப்படுகிறது. ஒருவேளை இந்த கூட்டணி மறுபடியும் அமையாவிட்டால், தேர்தலை சந்திப்பது மிகவும் கடினமானதாகிவிடும் என்ற நிலையும் தலைமைக்கு தெரியாமல் இல்லை.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், அண்ணாமலையே மீண்டும் தலைவர் ஆவாரா அல்லது, சர்ப்ரைஸாக, போட்டியிலேயே இல்லாத வேறு ஒரு புதிய நபரை தலைமை அறிவிக்குமா என்பது, இந்த மாத இறுதிக்குள் தெரிந்துவிடும் என்று கூறப்படுகிறது.

தலைப்பு செய்திகள்

TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
Udhayanidhi: உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
சூப்பர் ப்ளான்.. காலியாக இருக்கும் கோயில் நிலங்கள்.. வருவாயை அதிகரிக்க தவெக அரசு போட்ட ஸ்கெட்ச்!
சூப்பர் ப்ளான்.. காலியாக இருக்கும் கோயில் நிலங்கள்.. வருவாயை அதிகரிக்க தவெக அரசு போட்ட ஸ்கெட்ச்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
Udhayanidhi: உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
மாஸ் காட்டும் மஹிந்திரா BE 6 Sporteq SUV; வெறும் ரூ.11.45 லட்சம் மட்டுமே- விலை குறைவு ரகசியம் என்ன?
மாஸ் காட்டும் மஹிந்திரா BE 6 Sporteq SUV; வெறும் ரூ.11.45 லட்சம் மட்டுமே- விலை குறைவு ரகசியம் என்ன?
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
Hyundai SUV: அப்க்ரேடட் க்ரேட்டா, பாலிசேட், EV, ஹைப்ரிட் - புதுசா 6 எஸ்யுவிக்களை இறக்கும் ஹுண்டாய் - முழு விவரம்
அப்க்ரேடட் க்ரேட்டா, பாலிசேட், EV, ஹைப்ரிட் - புதுசா 6 எஸ்யுவிக்களை இறக்கும் ஹுண்டாய் - முழு விவரம்
Online Property Registration : பத்திர பதிவிற்கு இன்று முதல் நேரில் வர வேண்டாம்.! புது ரூல்ஸ்- என்னென்ன ஆவணங்கள் தேவை.? லிஸ்ட் இதோ..
பத்திர பதிவிற்கு இன்று முதல் நேரில் வர வேண்டாம்.! புது ரூல்ஸ்- என்னென்ன ஆவணங்கள் தேவை.? லிஸ்ட் இதோ..
சூப்பர் ப்ளான்.. காலியாக இருக்கும் கோயில் நிலங்கள்.. வருவாயை அதிகரிக்க தவெக அரசு போட்ட ஸ்கெட்ச்!
சூப்பர் ப்ளான்.. காலியாக இருக்கும் கோயில் நிலங்கள்.. வருவாயை அதிகரிக்க தவெக அரசு போட்ட ஸ்கெட்ச்!
Embed widget