(Source: ECI/ABP News/ABP Majha)
TN Headlines: போலியோ சொட்டு மருந்து முகாம்.. வறண்ட வானிலை.. இன்றைய முக்கிய செய்திகள்
TN Headlines: தமிழ்நாட்டில் இன்று நடந்த முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.
குலசேகரபட்டினம் ராக்கெட் ஏவுதளத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி!மேலும் வாசிக்க..
பிரதமர் மோடி அரசு நலத்திட்ட பணிகள், பா.ஜ.க. பொதுக்கூட்டம் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இரண்டு நாள் பயணமாக நேற்று தமிழ்நாட்டிற்கு வந்தார். பல்லடத்தில் பா.ஜ.க. பொதுக்கூட்டத்தை முடித்த பிரதமர் மோடி, நேரடியாக ஹெலிகாப்டர் மூலமாக மதுரை சென்றார். அங்கு மீனாட்சியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அதனை தொடர்ந்து இன்று காலை மதுரையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் தூத்துக்குடி வந்தடைந்தார். இந்த நிலையில், பிரதமர் மோடி இன்று குலசேகரப்பட்டினத்தில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் புதிய ராக்கெட் ஏவுதளத்திற்கு அடிக்கல் நாட்டினார். மேலும் வாசிக்க..
ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் நடவடிக்கை: பெரியார் பல்கலை. எச்சரிக்கை
கடந்த பிப்ரவரி மாதம் ஏழாம் தேதி அரசு அறிவிப்பிற்கு ஏற்ப துணைவேந்தர் பணியிடை நீக்கம் செய்ய, தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறார். இன்னும் மூன்று நாட்களில் பணி ஓய்வு பெற உள்ள நிலையில் துணைவேந்தர் பணியிடை நீக்கம் செய்ய மறுக்கப்படுகிறது. துணை வேந்தர் ஜெகநாதன் முடிவு எடுக்கவில்லை என்றால் பொதுக்குழு செயற்குழுவைக் கூட்டி அடுத்தகட்ட போராட்ட நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளதாக ஆசிரியர் மற்றும் பணியாளர் சங்கம் நேற்று தெரிவித்திருந்தது.மேலும் வாசிக்க..
தமிழ்நாட்டில் திமுக இனி தேடினாலும் கிடைக்காது- பிரதமர் மோடி பேச்சு!
தூத்துக்குடியில் திட்டங்களை தொடங்கி வைத்த பிறகு, நெல்லை பாளையங்கோட்டையில் நடைபெற்று வரும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: ”திருநெல்வேலி அல்வாவை போலவே நெல்லை மக்களும் மிகவும் இனிமையானவர்கள். நாட்டுக்காக உழைக்க நெல்லைய்யப்பர் காந்திமதி அம்மன் நல்லாசி தர வேண்டும். தமிழக மக்கள் பாஜக மீது வைத்துள்ள நம்பிக்கையை நாங்கள் காப்பாற்றுவோம். தேர்தலுக்குப் பின் தமிழ்நாட்டில் திமுக இனி தேடினாலும் கிடைக்காது. மேலும் வாசிக்க..
5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து முகாம்
வரும் மார்ச் 3 ஆம் தேதி 1 முதல் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்படுகிறது. நாட்டில் கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகள் நலனுக்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன்படி, ஆண்டுதோறும் குழந்தைகள் போலியோவால் பாதிக்கப்படாமல் இருப்பதற்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது.மேலும் வாசிக்க..
ராஜீவ் காந்தி கொலை வழக்கு தண்டனையில் இருந்து விடுவிக்கப்பட சாந்தன் மரணம்
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று முன்கூட்டியே விடுவிக்கப்பட்ட சாந்தன் காலமானார். சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார். இலங்கையில் உள்ள தனது தாயாரை பார்க்க செல்ல இருந்த நிலையில் சாந்தன் உயிரிழந்தார். இலங்கை செல்ல சாந்தனுக்கு மத்திய அரசு அண்மையில் அனுமதி வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் வாசிக்க..
கோவை டூ பெங்களூர் வந்தே பாரத் ரயில் - பயண நேரத்தில் மாற்றம்
கோவை - பெங்களூர் வந்தே பாரத் ரயில் நேரம் மார்ச் 11ஆம் தேதி முதல் மாற்றப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.கோவை - பெங்களூரு வந்தே பாரத் ரயில் நேரத்தை மார்ச் 11ஆம் தேதி முதல் மாற்றப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பில், "கோவை - பெங்களூரு இடையே இயக்கப்படும் (20642) வந்தே பாரத் ரயில் நேரம் மாற்றம் செய்யப்படுகிறது.மேலும் வாசிக்க..
வானிலை நிலவரம்
தமிழ்நாட்டில் அடுத்த சில தினங்களுக்கு வறண்ட வானிலையே இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று முதல் 3 ஆம் தேதி வரை, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். மேலும் வாசிக்க..