TN Headlines: தாக்கலானது வேளாண் பட்ஜெட்; கரும்பு விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை - முக்கியச் செய்திகள்!
TN Headlines: தமிழ்நாட்டில் இன்று நடந்த முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.
- Lok Sabha Election 2024: நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்களில் போட்டி- விசிக அறிவிப்பு
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தி, அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்தில் மனு அளித்தார். நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில வாரங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் கடந்த ஆண்டு இறுதியில் இருந்தே தேசியக் கட்சிகள் தொடங்கி, லெட்டர் பேட் கட்சிகள் வரை அனைத்துக் கட்சிகளுமே முழு வீச்சில் தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளன. மேலும் படிக்க
- TN Agriculture Budget 2024: விவசாயிகளுக்கு சிறப்பு பரிசுகள் - வேளாண் பட்ஜெட்டில் தமிழக அரசு அறிவிப்பு
மாநில அளவில் சிறுதானியங்கள், பயறுவகைகள், எண்ணைய்வித்துகள், கரும்பு பயிர்களில் அதிக உற்பத்தியைப் பெறும் முதல் மூன்று விவசாயிகளுக்கு முதல் பரிசாக 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய், இரண்டாம் பரிசாக ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய், மூன்றாம் பரிசாக ஒரு இலட்சம் ரூபாய் என 33 பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன. 2024-2025-فا ஆண்டிலும் இத்திட்டத்திற்காக 55 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். மேலும் படிக்க
- உலகத் தாய்மொழி நாள்: பள்ளி, கல்லூரிகளில் தமிழ் கட்டாயம், மொழிச் சட்டம், பெயர்ப் பலகைகள்- ராமதாஸ் கோரிக்கை!
உலகத் தாய்மொழி தினம் நாளை கொண்டாடப்படுவதை ஒட்டி, பள்ளி, கல்லூரிகளில் தமிழ் கட்டாயம் ஆக்கப்பட வேண்டும், மொழிச் சட்டம் கொண்டு வரப்பட வேண்டும், கடைகள், அலுவலகங்களில் பெயர்ப் பலகைகள் தமிழில் வைக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை பாமக நிறுவனர் ராமதாஸ் முன்வைத்துள்ளார். மேலும் படிக்க
- TN Agriculture Budget 2024: கரும்பு விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை, பயிர் காப்பீடு திட்டம் - வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு
தமிழ்நாடு அரசின் 2024-25 நிதியாண்டிற்கான வேளாண் பட்ஜெட்டை, வேளாண் அமைச்சர் எம்.ஆர். கே. பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். அதன்படி, 2023-2024 அரவைப் பருவத்திற்கு சர்க்கரை ஆலைகளுக்கு பதிவு செய்து கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத் தொகையாக டன் ஒன்றுக்கு ரூ.215 வழங்கப்படும். 2024-2025 ஆம் ஆண்டில் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தைச் செயல்படுத்த ரூ.1,775 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். மேலும் படிக்க
- Edappadi Palanisamy: ”விவசாயிகளுக்கு பயன் அளிக்கவில்லை" : வேளாண் பட்ஜெட் குறித்து தாக்கிப்பேசிய எடப்பாடி பழனிசாமி
தமிழக சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ”தமிழ்நாடு அரசின் வேளாண் நிதிநிலை அறிக்கையால் விவசாயிகளுக்கு எந்த பயனும் இல்லை. விவசாயிகளுக்கு புதிய திட்டம் எதுவும் அறிவிக்கப்படவில்லை. விவசாயிகளுக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற வேளாண் பட்ஜெட்டில் அம்சங்கள் இல்லை. பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து வேளாண் பட்ஜெட் என்று தாக்கல் செய்துள்ளனர். நெல், கரும்பு குறித்து திமுக வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. மேலும் படிக்க