TN Headlines: 22 தமிழக மீனவர்கள் கைது! விவசாயிகள் ரயில் மறியல் போராட்டம் - முக்கிய செய்திகள்!
TN Headlines: தமிழ்நாட்டில் இன்று நடந்த முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.
- Minister Regupathy: ஜாபர் சாதிக் குற்றத்துக்கு பாஜக, அதிமுகவே காரணம்.. அமைச்சர் ரகுபதி பதிலடி
டெல்லியில் நடந்த போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் தமிழ் சினிமா தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் நேற்று கைது செய்யப்பட்டார். அவர் போதைப்பொருள் கடத்தல் மூலம் கிடைத்த பணத்தை சினிமா, ரியல் எஸ்டேட் ஆகியவற்றில் முதலீடு செய்திருப்பதாகவும், இந்த விவகாரத்தில் அரசியலில் முக்கிய புள்ளிகளுக்கும் தொடர்பு இருப்பதாக வாக்கு மூலம் கொடுத்ததாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் படிக்க
- EPS On TN Govt: ”குட்கா வேறு, போதைப்பொருள் வேறு” - ஆளுநரை சந்தித்த பிறகு எடப்பாடி பழனிசாமி விளக்கம்
போதைப்பொருள் கடத்தல் வழக்கில், திமுக பிரமுகர் ஒருவர் கைது செய்யப்பட்டு இருப்பது தொடர்பாக, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியை, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தார். அப்போது தமிழ்நாடு அரசின் செயல்பாட்டின் மீதுள்ள அதிருப்தி தொடர்பான மனுவையும் வழங்கினார். மேலும் படிக்க
- ’கமலஹாசனின் நிலைப்பாடு கவலையளிக்கிறது’ - அண்ணாமலை கருத்து
கோவை விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “மூத்த நடிகர் தமிழகத்தில் அரசியல் மாற்றங்களை மாற்ற வேண்டும் என கட்சியை ஆரம்பித்தார். கமலஹாசன் மறுபடியும் திமுக பக்கத்தில் இணைந்துள்ளார். அரசியல் என்பது கடினமான வேலை, கொள்கை அரசியல் என்பது ஒரு கடினமான வேலை. மேலும் படிக்க
- Fishermen Arrest: இலங்கை கடற்படை அட்டூழியம்..! எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 22 தமிழக மீனவர்கள் கைது..!
தமிழக மீன்பிடி துறைமுகங்களிலிருந்து மீன் பிடிக்க சென்று இலங்கை நெடுந்தீவு மற்றும் பருத்தித்துறை கடற்பரப்பில், மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அப்பகுதியில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி, மூன்று விசைப்படகுகளை பறிமுதல் செய்ததோடு, தமிழகத்தைச் சேர்ந்த 22 மீனவர்களையும் கைது செய்துள்ளனர். மேலும் படிக்க
- Farmers Protest 2.0: மக்களே உஷார்..! நாடு முழுவதும் முடங்கும் ரயில் சேவை? விவசாயிகள் இன்று ரயில் மறியல் போராட்டம்
சம்யுக்தா கிசான் மோர்ச்சா (அரசியல் சாராதது) மற்றும் கிசான் மஸ்தூர் மோர்ச்சா ஆகிய அமைப்புகள், பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் கிட்டத்தட்ட 60 இடங்களில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளன. நண்பகல் 12 மணி தொடங்கி மாலை 4 மணி வரையிலான இந்த போராட்டத்தில், பார்தி கிசான் யூனியன் (ஏக்தா உக்ரஹான்), பார்தி கிசான் யூனியன் (டகவுண்டா-தானர்), மற்றும் கிராந்திகாரி கிசான் யூனியன் ஆகிய அமைப்புகளும் பங்கேற்பதாக தெரிவித்துள்ளன. மேலும் படிக்க