TN Headlines: தமிழ்நாட்டில் இதுவரை நடந்தது என்ன? ஒரு ரவுண்ட் அப் - முக்கிய செய்திகள் இதோ!
TN Headlines: தமிழ்நாட்டில் இன்று நடந்த முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.

- Lok Sabha Election : களைகட்டும் மக்களவை தேர்தல் - வேட்பாளர்கள் எவ்வளவு செலவு செய்யலாம் தெரியுமா? கட்சிக்கான லிமிட்?
நாடாளுமன்ற மக்களவை பொதுத்தேர்தல் நாடு முழுவதும் களைகட்ட தொடங்கியுள்ளது. தேர்தலை நடத்தும் தேர்தல் ஆணையத்தின் முக்கியப் பொறுப்புகளில், கட்சிகள் மற்றும் தனிப்பட்ட வேட்பாளர்களின் தேர்தல் செலவுகளை கண்காணிப்பதும் சேரும். கட்சிகள் எவ்வளவு செலவு செய்யலாம் என்ற வரம்பு இல்லை என்றாலும், வேட்பாளர்களுக்கு அந்த வரம்பு உள்ளது. மேலும் படிக்க
- நான் ராமநாதபுரத்த மாலத்தீவாக்குவேன்..உறுதியளித்த ஓ.பி.எஸ்
- CM MK Stalin: ”மோடியின் கண்ணீரை அவரது கண்களே நம்பாது!” - முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சாடல்..
தமிழ்த்தோல் போர்த்தி வரும் வஞ்சகர் கூட்டத்துக்கு ஏமாற்றமே பரிசாகும் என தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமர் மோடியை விமர்சித்து பதிவிட்டுள்ளார். நேற்று மாலை 5 மணிக்கு பிரதமர் மோடி நமோ செயலி மூலம் பாஜக நிர்வாகிகளுடன் “எனது பூத், வலிமையான பூத்” என்ற தலைப்பின் கீழ் உரையாடினார். அப்போது பிரதமர் மோடி, தாய்மொழியாகத் தமிழ் வாய்க்கவில்லை என வருத்தம் தெரிவித்தார். மேலும் படிக்க
- Latest Gold Silver Rate: புதிய உச்சத்தை தொடர்ந்து, சற்றே குறைந்த தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.160 குறைந்தது..
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ. 50,960 -ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.6,370 விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.54,720 ஆகவும், கிராம் ஒன்று ரூ.6,840 ஆகவும் விற்பனையாகிறது. மேலும் படிக்க
- Lok Sabha 2024:வாக்களிக்கும் நாளில் விடுப்புடன் சம்பளமும் வழங்க அரசு உத்தரவு; தகுதியுடையவர்கள் யார்?
இந்திய நாடாளுமன்றத்தின் 18வது மக்களவைக்கான தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்தது. தேர்தலானது ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கையானது, சிக்கிம் மற்றும் அருணாச்சல் பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு ஜூன் 2 ஆம் தேதியும், இதர மாநிலங்களுக்கு ஜூன் 4 ஆம் தேதியும் நடைபெற உள்ளது. மேலும் படிக்க





















