TN Headlines: பிப்ரவரி 12ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை கூட்டம்; 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு - முக்கிய செய்திகள்
TN Headlines: தமிழ்நாட்டில் இன்று நடந்த முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.
- Pattali Makkal Katchi : ’நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணியா?’ பாமக பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவு..!
2024 நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நலனிலும் தேசிய நலனிலும் அக்கறை கொண்ட கட்சிகளுடன் கூட்டணி என்று பாமக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அந்த தீர்மானத்தில் மத்திய அரசு மாநில உரிமைகளை பறிப்பதாக குறிப்பிட்டுள்ளதால், பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பதை பாமக குறிப்பால் உணர்த்தியுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். எனவே, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுவுடன் மீண்டும் கூட்டணி அமைத்து நாடாளுமன்ற தேர்தலை பாமக சந்திக்கப் போகிறதா இல்லை பாமக தலைமையில் புதிய கூட்டணியை அந்த கட்சி உருவாக்க போகிறதா என்ற பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மேலும் படிக்க
- Tamil Nadu Assembly : ’பிப்ரவரி 12ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை கூட்டம்?’ தமிழக அரசு தயாரிக்கும் உரையை வாசிக்கும் ஆளுநர்..!
2024ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடர் வரும் 12ஆம் தேதி தொடங்கவுள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை சபாநாயகர் அப்பாவு விரைவில் வெளியிடவுள்ளார். ஸ்பெயின் சென்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் 7ஆம் தேதி தமிழகம் திரும்பவுள்ள நிலையில், அதற்கடுத்த வாரமான திங்கள்கிழமையன்று தமிழக சட்டப்பேரவை கூட்டத்தை கூட்ட முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க
- Latest Gold Silver Rate: பட்ஜெட் எதிரொலியா? கிடுகிடுவென உயர்ந்த தங்கம் விலை.. சவரனுக்கு இவ்வளவா?
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.47,040 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 அதிகரித்து ரூ.5,880 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.50,800 ஆகவும், கிராம் ஒன்று ரூ.6,350 ஆகவும் விற்பனையாகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.77.80 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, ஒரு கிலோ வெள்ளி ரூ.77,800 க்கு விற்பனையாகிறது. மேலும் படிக்க
- TN Rain Alert: தென்னிந்தியாவில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 3 நாட்களுக்கு மழை இருக்கு
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. மேலும் படிக்க
- Khelo India Youth Games 2023: இந்தியாவின் விளையாட்டு தலைநகரமானது தமிழ்நாடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
6-வது கேலோ இந்தியா இளைஞர் (18 வயதுக்குட்பட் டோர்) விளையாட்டு போட்டி கடந்த 19ம் தேதி சென்னை நேரு ஸ்டேடியத்தில் கோலாகலமாக தொடங்கியது. இந்த பிரமாண்ட போட்டியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதில் கைப்பந்து, பேட்மிண்டன், சைக்கிளிங், தடகளம், கபடி, வில்வித்தை, நீச்சல், யோகாசனம், கூடைப்பந்து, துப்பாக்கி சுடுதல், ஸ்குவாஷ் உள்பட 26 வகையான போட்டிகள் இடம்பெற்றன. மேலும் படிக்க