மேலும் அறிய

TN Rain Alert: தென்னிந்தியாவில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 3 நாட்களுக்கு மழை இருக்கு

தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி இன்று, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.

நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும். உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.

வரும் 3 ஆம் தேதி, தென்தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில்  ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை  பெய்யக்கூடும்.  ஏனைய பகுதிகளில்  வறண்ட வானிலை நிலவக்கூடும்.

அதனை தொடர்ந்து 4 ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரை,  தமிழகம், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான   வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில  பகுதிகளில் லேசான மழை  பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸை ஒட்டியும் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸை ஒட்டியும்  இருக்கக்கூடும். 

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):  

தூத்துக்குடி (தூத்துக்குடி) 5, ஸ்ரீவில்லிபுத்தூர் (விருதுநகர்) 4, சிவகாசி (விருதுநகர்), ஆயிக்குடி (தென்காசி), கருப்பாநதி அணை (தென்காசி) தலா 3, பாளையம்கோட்டை (திருநெல்வேலி), பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி) தலா 2, பேச்சிப்பாறை (கன்னியாகுமரி), வத்திராயிருப்பு (விருதுநகர்), புத்தன் அணை (கன்னியாகுமரி), தேக்கடி (தேனி), ராஜபாளையம் (விருதுநகர்), சிற்றாறு-I (கன்னியாகுமரி) தலா  1 செ.மீ மழை பதிவாகியுள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

PM Modi Kanyakumari Visit LIVE: விவேகானந்தர் மண்டபத்திற்கு சென்றார் பிரதமர் மோடி
PM Modi Kanyakumari Visit LIVE: விவேகானந்தர் மண்டபத்திற்கு சென்றார் பிரதமர் மோடி
Jammu Kashmir Accident: 150 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 21 பேர் பலி - ஜம்மு காஷ்மீரில் சோகம்
Jammu Kashmir Accident: 150 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 21 பேர் பலி - ஜம்மு காஷ்மீரில் சோகம்
TN Weather: திருத்தணியில் 109 டிகிரி வெயில் கொளுத்தியது: சிரமத்திற்குள்ளான மக்கள்
TN Weather: திருத்தணியில் 109 டிகிரி வெயில் கொளுத்தியது: சிரமத்திற்குள்ளான மக்கள்
பிரதமரை வரவேற்க சென்ற முன்னாள் அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்: அனுமதிக்க மறுத்த போலீஸ்! நடந்தது என்ன?
பிரதமரை வரவேற்க சென்ற முன்னாள் அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்: அனுமதிக்க மறுத்த போலீஸ்! நடந்தது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Modi in Kanyakumari : 30 முதலை வீரர்கள்... கடலுக்கு அடியிலும் பாதுகாப்பு  பரபரப்பில் கன்னியாகுமரிModi vs Nitin Gadkari : நிதின் கட்காரியை தோற்கடிக்க சதி? பின்னணியில் மோடி - அமித்ஷா? புகைச்சலில் பாஜக!TTF Vasan : அடுத்த மாவு கட்டு.. TTF வாசன் மீண்டும் கைது! கார் LICENSE கோவிந்தா?Rahul Gandhi on Modi : காந்தி யாருன்னு தெரியுமா? CERTIFICATE தேவையில்ல மோடி! ராகுல் காந்தி விளாசல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi Kanyakumari Visit LIVE: விவேகானந்தர் மண்டபத்திற்கு சென்றார் பிரதமர் மோடி
PM Modi Kanyakumari Visit LIVE: விவேகானந்தர் மண்டபத்திற்கு சென்றார் பிரதமர் மோடி
Jammu Kashmir Accident: 150 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 21 பேர் பலி - ஜம்மு காஷ்மீரில் சோகம்
Jammu Kashmir Accident: 150 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 21 பேர் பலி - ஜம்மு காஷ்மீரில் சோகம்
TN Weather: திருத்தணியில் 109 டிகிரி வெயில் கொளுத்தியது: சிரமத்திற்குள்ளான மக்கள்
TN Weather: திருத்தணியில் 109 டிகிரி வெயில் கொளுத்தியது: சிரமத்திற்குள்ளான மக்கள்
பிரதமரை வரவேற்க சென்ற முன்னாள் அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்: அனுமதிக்க மறுத்த போலீஸ்! நடந்தது என்ன?
பிரதமரை வரவேற்க சென்ற முன்னாள் அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்: அனுமதிக்க மறுத்த போலீஸ்! நடந்தது என்ன?
முஸ்லிம் சட்டத்தின் கீழ் இந்து, இஸ்லாமியர் இடையேயான திருமணம் செல்லாது: ம.பி. உயர் நீதிமன்றம் கருத்து!
இந்து, முஸ்லிம் இடையே நடக்கும் திருமணம் செல்லாது: மத்திய பிரதேச உயர் நீதிமன்றம் பரபர கருத்து!
Hit List Review: ஹிட் அடிக்குமா ஹிட் லிஸ்ட்? மகனை நல்ல ஹீரோவாக செதுக்கினாரா இயக்குநர் விக்ரமன்? முழு திரைவிமர்சனம்
Hit List Review: ஹிட் அடிக்குமா ஹிட் லிஸ்ட்? மகனை நல்ல ஹீரோவாக செதுக்கினாரா இயக்குநர் விக்ரமன்? முழு திரைவிமர்சனம்
Breaking News LIVE: கடும் வெப்பம் - புதுச்சேரியில் ஜூன் 12ஆம் தேதி பள்ளிகள் திறப்பு
Breaking News LIVE: கடும் வெப்பம் - புதுச்சேரியில் ஜூன் 12ஆம் தேதி பள்ளிகள் திறப்பு
Thirumayam: தமிழ்நாடு வந்த மத்திய அமைச்சர் அமித் ஷா.. திருமயம் காலபைரவர் கோயிலில் வழிபாடு!
தமிழ்நாடு வந்த மத்திய அமைச்சர் அமித் ஷா.. திருமயம் காலபைரவர் கோயிலில் வழிபாடு!
Embed widget