TN Headlines: தமிழ்நாட்டில் இதுவரை நடந்தது என்ன? முக்கிய செய்திகளின் ரவுண்டப் இதோ.!
TN Headlines Today: தமிழ்நாட்டில் இன்று இதுவரை நடந்த முக்கிய நிகழ்வுகளின் செய்திகளின் தொகுப்பை இங்கே காணலாம்.
- TN Weather Update: இன்று இத்தனை மாவட்டங்களில் கனமழை அடித்து வெளுக்குமா? மக்களே உங்களுக்கான அலர்ட்
1.நேற்று (25.07.2023) வடக்கு ஆந்திரா - தெற்கு ஒரிசா கடலோரப்பகுதிகளை ஒட்டிய வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்றும் (26.07.2023) அதே பகுதிகளில் நிலவுகிறது. 2.மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று 2 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 26.07.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் படிக்க https://tamil.abplive.com/news/tamil-nadu/heavy-rain-is-likely-to-occur-in-2-districts-in-tamil-nadu-today-according-to-the-meteorological-department-131221
- CM Stalin: இலவச விவசாய மின் இணைப்பு திட்டம்; திருச்சியில் நாளை தொடங்கி வைக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின்
திருச்சி மாவட்டம், கேர் பொறியியல் கல்லூரியில் நாளை 27.07.2023 முதல் 29.07.2023 வரை மூன்று நாட்கள் வேளாண்மை உழவர் நலத்துறையின் சார்பில் மாபெரும் வேளாண்மை சங்கமம் - 2023 வேளாண்மை கண்காட்சி மற்றும் கருத்தரங்கை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். மேலும், கேர் பொறியியல் கல்லூரி வளாகத்தில் மாநில அளவில் நடைபெறவுள்ள மாபெரும் வேளாண் சங்கமம் 2023 வேளாண்மை கண்காட்சி மற்றும் கருத்தரங்கில் 250 உள்ளரங்குகளும் , 50 வெளி அரங்குகளும் அமைக்கப்படவுள்ளது. மேலும் படிக்க https://tamil.abplive.com/news/trichy/chief-minister-m-k-stalin-will-inaugurate-the-scheme-of-free-agricultural-electricity-connections-tomorrow-in-trichy-tnn-131174
- Manarkeni App: நாட்டிலேயே முதல்முறை; இனி வீடியோ முறையில் பாடங்கள்.. மணற்கேணி ஆப் (App) அறிமுகம்
நாட்டிலேயே முதல்முறையாக காணொலி வடிவத்தில் 1 முதல் 12 ஆம் வகுப்பு பாடங்களை அளிக்கும் மணற்கேணி என்ற செயலியை தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறையில் பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து நடைமுறைப்படுத்தி வருகிறது. ஆசிரியர்கள் கற்பித்தலுக்காக பயன்படுத்தும் துணைக் கருவிகளில் ஒன்றாக புதிய ஒரு செயலியை அறிமுகப்படுத்தி உள்ளது தமிழ்நாடு அரசு. இந்தச் செயலியின் பெயர் 'மணற்கேணி'. மேலும் படிக்க https://tamil.abplive.com/education/tnsed-manarkeni-lessons-in-video-mode-tn-education-department-new-initiative-131199
- Parandur Airport: ஏர் கலப்பை போதும்; ஏர்போர்ட் எதற்கு? - ஓராண்டை கடந்தது பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டம்
சென்னையில் இரண்டாவது விமான நிலையத்திற்காக பரந்தூர், ஏகனாபுரம், நெல்வாய், நாகப்பட்டு மற்றும் அதை ஒட்டியுள்ள மொத்தம் 13 கிராமங்களில் இருந்து சுமார் 4800க்கும் அதிகமான ஏக்கர் பரப்பிலான நிலத்தை கையகப்படுத்த அரசு முடிவு செய்திருக்கிறது. இந்த திட்டத்திற்கான மதிப்பு சுமார் 20,000 கோடி ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது. இதில் சுமார் 3000 ஏக்கர் அளவிற்கு, பட்டா நிலங்களாகவும், மீதம் உள்ள நிலங்கள் அரசு நிலமாகவும் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏகனாபுரம், நெல்வாய், நாகப்பட்டு ஆகிய கிராமங்களில் பெரும்பாலும் குடியிருப்பு பகுதிகள் மற்றும் விவசாய நிலங்கள் முழுமையாக கையகப்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் படிக்க https://tamil.abplive.com/news/chennai/parandur-airport-has-completed-one-year-as-of-today-the-protest-against-tnn-131057
- Gold Silver Rate Today: நாளுக்கு நாள் அதிகரிக்கும் தங்கத்தின் விலை.. ஒரு சவரன் எவ்ளோ தெரியுமா? இன்றைய நிலவரம்..
சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.44,416 ஆகவும் 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.17 அதிகரித்து ரூ.5,552 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 24 காரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 48,152 ஆகவும் கிராமுக்கு ரூ. 6,019 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் படிக்க https://tamil.abplive.com/business/latest-gold-silver-rate-today-26-july-2023-know-gold-price-in-your-city-chennai-coimbatore-trichi-bangalore-131197