கனமழை எச்சரிக்கை! தமிழ்நாட்டில் இன்று காலை 10 மணி வரை கொட்டித் தீர்க்கும் மழை! காஞ்சிபுரம் நிலை என்ன?
TN Weather Forecast: தமிழ்நாட்டில் காலை 10 மணி வரை கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் காலை 10 மணி வரை கணமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது
வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது என்ன ?
வானிலை மையத்தின் அறிக்கையின்படி, தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவுகிறது. இது இன்று மேற்கு- வடமேற்கு திசையில் மெதுவாக நகரக்கூடும்.
வருகின்ற 22-ஆம் தேதி வாக்கில், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது, அதற்கடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுப்பெறக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
24 மணி நேரத்தில் எவ்வளவு மழை ?
சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருவொற்றியூரில் 6 செ.மீ மழை பதிவாகியுள்ளது. பெரம்பூர், தண்டையார்பேட்டையில் தலா 5 செ.மீ, பேசின் பிரிட்ஜ், கொரட்டூர், அமைந்தகரை, அண்ணா நகரில் தலா 4 செ.மீ மழை பதிவு. நெற்குன்றம், எண்ணூர், வடபழனி, விம்கோ நகர், நுங்கம்பாக்கம், ஐஸ்ஹவுஸ், வளசரவாக்கம், சாலிகிராமம் பகுதிகளில் தலா 3 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
அடுத்த மூன்று மணி நேரத்திற்கு கனமழை எச்சரிக்கை:
தமிழகத்தில் அடுத்த இன்று மூன்று மணி நேரத்திற்கு (19-11-2025) காலை 10 மணி வரை கனமழை எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. காலை 10 மணி வகுப்பு கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்யும் என எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. மாவட்டங்களின் உள்பகுதியான, விருதாச்சலம், சிதம்பரம், கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளிலும் கன மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரத்தின் நிலை என்ன ? Kanchipuram Weather Forecast Today 19-11-2025
காஞ்சிபுரத்தைப் பொறுத்தவரை கடந்த 24 மணி நேரத்தில் மாவட்டம் முழுவதும் 65 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. காஞ்சிபுரத்தில் 5.8 மில்லி மீட்டர் மழையும், உத்திரமேரூரில் 12 மில்லி மீட்டர் மலையும், வாலாஜாபாத் 2 மில்லிமீட்டர் மழை, ஸ்ரீபெரும்புதூர் 12.8 மில்லிமீட்டர் மழையும், குன்றத்தூரில் 14.2 மில்லிமீட்டர் மழையும், செம்பரம்பாக்கம் பகுதியில் அதிகபட்சமாக 19 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.
காஞ்சிபுரத்தை பொறுத்தவரை இன்று மதியம் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாலை நேரங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.





















