மேலும் அறிய

TN Weather Update: தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு வறண்ட வானிலை.. மழைக்கான வாய்ப்பு எப்படி இருக்கும்? இன்றைய வானிலை நிலவரம்..

தமிழ்நாட்டில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும் ஓரிரு  இடங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை குறைவாக இருக்கக்கூடும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

27.01.2023 மற்றும் 28.01.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு  இடங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் குறைவாக இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

பூமத்தியரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று (27.01.2023) காலை 05.30 மணி அளவில்  ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி,   காலை   08.30 மணி அளவில் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதிகளில் நிலைகொண்டுள்ளது. இது அடுத்த இரண்டு தினங்களில் மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடையக்கூடும். அதன் பிறகு தொடர்ந்து மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து 31.01.2023 அன்று தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து 01.02.2023 இலங்கை கடற்பகுதிகளை சென்று அடையக்கூடும்.

இதன் காரணமாக,

29.01.2023: வடதமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில்   ஓரிரு   இடங்களில்   லேசான /   மிதமான மழை   பெய்யக்கூடும்.

30.01.2023: தமிழக கடலோர மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில்   ஒருசில  இடங்களில்   இடிமின்னலுடன் கூடிய லேசான /   மிதமான மழை   பெய்யக்கூடும்.

31.01.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில்   இடிமின்னலுடன் கூடிய லேசான /   மிதமான மழை   பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும்  குறைந்தபட்ச வெப்பநிலை 21-22 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். 

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):    ஏதுமில்லை.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:  

27.01.2023 மற்றும் 28.01.2023:¬ தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகள்,   பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55   கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 

29.01.2023: தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள்  மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55   கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.  

30.01.2023: தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55   கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.  

31.01.2023: இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65   கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.  

மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு  செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

புயல் எங்கே உள்ளது? நாளை எங்கெல்லாம் விடுமுறை ? ரெட் அலர்ட் எங்கு: முக்கிய வானிலை அப்டேட்.!
புயல் எங்கே உள்ளது? நாளை எங்கெல்லாம் விடுமுறை ? ரெட் அலர்ட் எங்கு: முக்கிய வானிலை அப்டேட்.!
TN Rain; கனமழை எதிரொலி மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை இரண்டாவது நாளாக விடுமுறை...!
இரண்டாவது நாளாக நாளை மயிலாடுதுறை மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை...!
EVM Tampered: ”தோல்வியடைந்தால் மட்டும் EVMல் மோசடியா; வென்றால் இல்லை” உச்சநீதிமன்றம் காட்டம்? சொன்னது யாரை ? 
EVM Tampered: ”தோல்வியடைந்தால் மட்டும் EVMல் மோசடியா; வென்றால் இல்லை” உச்சநீதிமன்றம் காட்டம்? சொன்னது யாரை ? 
Viduthalai 2 Trailer : வெற்றிமாறன் இயக்கியுள்ள விடுதலை 2 பட டிரைலர் இதோ
Viduthalai 2 Trailer : வெற்றிமாறன் இயக்கியுள்ள விடுதலை 2 பட டிரைலர் இதோ
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”தெலுங்குல பேச முடியாது.. தமிழ்ல தான் பேசுவேன்”அல்லு அர்ஜுன் THUGLIFEபள்ளியில் சாதியா? PAINT-ஐ எடுத்த அன்பில்! அரசுப் பள்ளியில் அதிரடி”அரசியலில் உன் மகன் காலி!” பழி தீர்த்த DK சிவக்குமார்! கதறும் அமைச்சர் குமாரசாமி!அடிதடியில் இறங்கிய அதிமுகவினர்! செல்லூர் ராஜூ vs டாக்டர் சரவணன்! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
புயல் எங்கே உள்ளது? நாளை எங்கெல்லாம் விடுமுறை ? ரெட் அலர்ட் எங்கு: முக்கிய வானிலை அப்டேட்.!
புயல் எங்கே உள்ளது? நாளை எங்கெல்லாம் விடுமுறை ? ரெட் அலர்ட் எங்கு: முக்கிய வானிலை அப்டேட்.!
TN Rain; கனமழை எதிரொலி மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை இரண்டாவது நாளாக விடுமுறை...!
இரண்டாவது நாளாக நாளை மயிலாடுதுறை மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை...!
EVM Tampered: ”தோல்வியடைந்தால் மட்டும் EVMல் மோசடியா; வென்றால் இல்லை” உச்சநீதிமன்றம் காட்டம்? சொன்னது யாரை ? 
EVM Tampered: ”தோல்வியடைந்தால் மட்டும் EVMல் மோசடியா; வென்றால் இல்லை” உச்சநீதிமன்றம் காட்டம்? சொன்னது யாரை ? 
Viduthalai 2 Trailer : வெற்றிமாறன் இயக்கியுள்ள விடுதலை 2 பட டிரைலர் இதோ
Viduthalai 2 Trailer : வெற்றிமாறன் இயக்கியுள்ள விடுதலை 2 பட டிரைலர் இதோ
Akhil Akkineni Engaged: நாக சைதன்யா திருமணத்திற்கு முன் இரண்டாவது மகன் அகிலுக்கு நிச்சயதார்த்தத்தை முடித்த நாகர்ஜுனா - அமலா!
Akhil Akkineni Engaged: நாக சைதன்யா திருமணத்திற்கு முன் இரண்டாவது மகன் அகிலுக்கு நிச்சயதார்த்தத்தை முடித்த நாகர்ஜுனா - அமலா!
TN Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இன்று இரவு 34 மாவட்டங்களில் மழை இருக்கு மக்களே.!
TN Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இன்று இரவு 34 மாவட்டங்களில் மழை இருக்கு மக்களே.!
அதிகாரிகளிடம் சரமாரியான கேள்விகளை எழுப்பிய அதிமுக கவுன்சிலர் - சேலத்தில் பரபரப்பு
அதிகாரிகளிடம் சரமாரியான கேள்விகளை எழுப்பிய அதிமுக கவுன்சிலர் - சேலத்தில் பரபரப்பு
DMK VS PMK:
"வேறு வேலை இல்லை" அனல் பறக்கும் அரசியல் களம்.. முதலமைச்சர் கோபத்தின் பின்னணி ?
Embed widget