TN Rain Alert: அடுத்த 6 நாட்களுக்கு மழை நீடிக்கும்.. சென்னையில் மழைக்கு வாய்ப்புள்ளதா? இன்றைய வானிலை நிலவரம் இதோ..
தமிழ்நாட்டில் அடுத்த சில நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, 21 ஆம் தேதி வரை மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
15.08.2023 மற்றும் 16.08.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
17.08.2023 முதல் 21.08.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
15.08.2023: வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
16.08.2023: வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/ மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):
சத்தியார் (மதுரை) 7, வாலாஜாபாத் (காஞ்சிபுரம்) 6, திருமங்கலம் (மதுரை), கலவை பொதுப்பணித்துறை (ராணிப்பேட்டை), Kvk காட்டுக்குப்பம் ARG (காஞ்சிபுரம்), காட்பாடி (வேலூர்), மேட்டுப்பட்டி (மதுரை) தலா 5, செஞ்சி (விழுப்புரம்), தாம்பரம் (செங்கல்பட்டு), ஊத்துக்கோட்டை (திருவள்ளூர்), திருத்தணி (திருவள்ளூர்), கல்லிக்குடி (மதுரை), பள்ளிப்பட்டு (திருவள்ளூர்) தலா 4, ஆலந்தூர் (சென்னை), சென்னை விமான நிலையம், எம் ஜி ஆர் நகர் (சென்னை), குப்பன்பட்டி. (மதுரை), திருத்தணி PTO (திருவள்ளூர்), நாவலூர் கோட்டப்பட்டு (திருச்சி), Rscl செம்மேடு (விழுப்புரம்), மணப்பாறை (திருச்சி), ஆண்டிபட்டி (மதுரை), செய்யாறு (திருவண்ணாமலை) தலா 3 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
தமிழக கடலோரப்பகுதிகள்:
15.08.2023 மற்றும் 16.08.2023: தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
வங்கக்கடல் பகுதிகள்:
15.08.2023: தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
16.08.2023: தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள்.