"சார்ஜாவில் இருந்து கோவைக்கு வந்த நபர் எஸ்கேப்.. உடல் முழுவதும் கொப்பளம்" அமைச்சர் மா.சு ஷாக்!
சார்ஜா நாட்டிலிருந்து கோவை விமான நிலையம் வந்தடைந்த நபரை பரிசோதனை செய்தபோது, அவருக்கு குரங்கம்மை நோயில் இருக்கும் கொப்பளங்கள் கண்டறியபட்டதாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் மணி விழா நடைபெற்று வருகிறது. நிகழ்ச்சியை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன், "சென்னை, மதுரை, கோவை போன்ற பன்னாட்டு விமான நிலையங்களில் வெளி நாடுகளிலிருந்து வரும் நபர்களை பரிசோதனை செய்யும் நடைமுறை நடத்தப்பட்டு வருகிறது.
சார்ஜாவில் இருந்து வந்த நபர் யார்?
அனைத்து விமான நிலையாங்களைலும் ஒரு தனிமை அறை அமைக்கப்பட்டுள்ளது. சென்னையில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவ மனையில் குறங்கம்மை நோயாளிகளுக்கான 10 வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. 27 வயதுள்ள இளைஞர் நேற்றைய முன் தினம் சார்ஜா நாட்டிலிருந்து கோவை விமான நிலையம் மூலமாக தமிழகம் வந்தடைந்தார்.
அவர் பரிசோதனையில் ஈடு படுத்திய பொழுது, அவருக்கு குரங்கம்மை நோயில் இருக்கும் கொப்பளங்கள் கண்டறியபட்டது. அவர் பதட்டப்பட்டு பரிசோதனை செய்யாமல் தப்பி சென்றார். அதனை தொடர்ந்து அவரை கண்டறிந்து, மேலும் பரிசோதித்த பொழுது அவருக்கு 27 இடங்களில் கொப்பளங்கள் உள்ளதாக கண்டறியப்பட்டது.
அமைச்சர் அதிர்ச்சி தகவல்:
ஆனால், அவருக்கு குரங்கம்மை தொற்று இல்லை எனவும் சிக்கன் பாக்ஸ் தொற்று மட்டுமே உள்ளது என கண்டறியப்பட்டது. மேலும் மருபரிசோதனைக்கு பூனே தேசிய வைரலாஜி ஆராய்ச்சி மையத்த்ரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த நபர் திருச்சி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார் .
இதுவரையில் தமிழகத்தில் எந்த விதமான பெரிய அளவிலான பட்டாசுகள் தொடர்பான விபத்துகள் இல்லை . வடகிழக்கு பருவ மழை அதிவீகத்துடன் தொடங்கியது. ஒரு வருடத்திற்கு பெய்ய வேண்டிய மழையாக 44 செ.மீ மழை உள்ளது.
ஆனால், இந்த முறை பொழிந்த மலையில் 20 செ.மீக்கும் மேலான மழை சென்னையில் மட்டும் சமீபத்தில் பெய்த மழையில் பதிவாகியுள்ளது. ஆனால், எந்தவிதமான சேதமும் இன்றி முன்னேற்பாடுகள் எடுக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவ மழை காலம் முடியும் வரை எந்த விதமான முன்னேற்பாடுகள் மற்றும் மருத்துவ முகாம்கள் எடுக்க கூடாது என உத்தரவு அளிக்கப்பட்டுள்ளது" என்றார்,
தமிழ் வளர்ச்சி ஆராய்ச்சி மன்றம் இரு பாகங்களாக பிரிந்துள்ளது. அதில், எந்த மன்றம் உரியது என தெரியாமல் அமைச்சர்கள் எப்படி நிகழ்ச்சிக்கு வரலாம் என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் மா. சுப்பிரமணியன் திணறினார்.