இனி மாஸ்க் கட்டாயம்.. அணியாவிட்டால் அபராதம் - தமிழக சுகாதாரத்துறை உத்தரவு
தமிழ்நாட்டில் முகக் கவசம் அணியாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், பொது இடங்களில் முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 1,472 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக சென்னை மாவட்டத்தில் 624 பேரும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 241 பேரும் கொரோனா தொற்றால் இன்று பாதிக்கப்பட்டுள்ளனர். பல மாவட்டங்களில் யாரும் கொரோனா தொற்றால் யாரும் பாதிக்கப்படவில்லை என மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.
நாளை முதல் தமிழ்நாடு முழுவதும் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்- தமிழக சுகாதாரத்துறை
— கடலூர் த.பிரேம் (@cudnews18) June 26, 2022
முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம் - சுகாதாரத்துறை#MASK #TN #Corona #Covid @RAKRI1 @CMOTamilnadu pic.twitter.com/H2vLb1bXUw
இதையடுத்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில், சில மாவட்டங்களில் கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதையடுத்து தமிழ்நாடு முழுவதும் கொரோனா கட்டுப்பாடுகளை சுகாதாரத்துறை விதித்துள்ளது. இந்நிலையில் பொதுமக்கள் கூடும் இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
View this post on Instagram
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்